என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஆடி நிறுவனத்தின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் 2021 ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 ஆடி ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய நிறத்தில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் மொத்தம் 30 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
புதிய ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் பிரத்யேகமாக கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த நிறம் பேந்தர் பிளாக் க்ரிஸ்டல் எபெக்ட் பெயிண்ட் என அழைக்கப்படுகிறது. புதிய நிறம் தவிர பிளாக்டு அவுட் 20 இன்ச் வீல்கள், சிவப்பு நிற அக்சென்ட்களுடன் கிடைக்கிறது.

காரின் உள்புறம் க்ரிம்சன் ரெட் மற்றும் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஸ்டீரிங் வீல் மற்றும் பக்கவாட்டில் டோர் பேனல்கள் பிளாக் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. இருக்கைகளும் க்ரிம்சன் ரெட் நப்பா லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
2021 ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 525 பிஹெச்பி பவர், 540 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் மாடல் புதிய மைல்கல் எட்டி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஜி கிளாஸ் மாடல் உற்பத்தியில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 1979 ஆண்டுகளில் முதலில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் தற்சமயம் ஆஸ்த்ரியாவில் உள்ள கிராஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் ஜி கிளாஸ் 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடல் ஜி63 ஏஎம்தி மற்றும் ஜி 350டி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது.

இதுதவிர ஜி கிளாஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடல் இகியூ சப் பிராண்டின் அங்கமாக இருக்கும் என தெரிகிறது.
கவாசகி நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை வழங்கி வருகின்றனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம். அதன்படி கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம், கேஎக்ஸ் 100 மாடல் ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்த சலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் பேபியா மாடல் ஐரோப்பிய சந்தையில் மிகவும் பிரபல மாடலாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் 2008 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்கோடா பேபியா மாடல் பிரபலமாக இருந்தது. தற்சமயம் ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை பேபியா மாடலை உருவாக்கி வருகிறது.
புதிய ஸ்கோடா பேபியா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டவை ஆகும். புதிய பேபியா மாடல் ஸ்கோடா ஸ்கேலா மற்றும் புதிய ஆக்டேவியா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
ஸ்கோடா மாடலில் எல்இடி யூனிட் கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஸ்கோடா கார் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த பிளாட்பார்ம் அதிக இடவசதி, சவுகரியம் மற்றும் வசதியை வழங்குகிறது.
புதிய பேபியா மாடலில் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பல்வேறு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், புதிய காரில் டீசல் என்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
கார் ஓட்டுவோர் கியர் மாற்றும் போது எதை செய்ய வேண்டாம் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கார் ஓட்டும் பெரும்பாலானவர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச் பெடலை அழுத்தி கியர் மாற்றுவார்கள். அவ்விதம் கியர் மாற்றிய பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் கிளட்ச் பெடலை காலை ஓய்வாக வைக்க உபயோகிக்கும் ஒரு இடம் போல அதன் மீது காலை வைத்தபடியே காரை ஓட்டுவார்கள்.
கிளட்ச் பெடலின் மீது காலை வைத்தபடியே ஓட்டுவதால், கிளட்ச் பெடல் எப்போதும் அழுந்திய நிலையிலேயே இருக்கும். இதனால் பிளை வீலுக்கும் பிரஷர் பிளேட்டிற்கும் இடையே உள்ள கிளட்ச் பிளேட் எப்போதுமே பிளை வீலில் இருந்து சற்று விலகியே சுற்றிக் கொண்டிருக்கும். இவ்விதம் கிளட்ச் பிளேட் விலகியே சுற்றுவதால் என்ஜினில் உருவாகும் சக்தியானது சரியாக கியர் பாக்சுக்கு கடத்தப்படுவது இல்லை.
என்ஜினின் முழு சக்தியும் சரியாக கடத்தப்படாததால் வாகனத்தின் வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் பெட்ரோல், டீசல் வீணாகும். அத்துடன் கிளட்ச் பிளேட்டின் ஆயுள்காலம் குறையும். இதனால் குறைந்த கிலோ மீட்டர் ஓடிய நிலையில் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
கியர் மாற்றும்போது கிளட்சை பயன்படுத்திவிட்டு பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுத்து விட வேண்டும். தேவையான போது மட்டுமே கிளட்ச் பெடலை அழுத்த வேண்டும்.
இப்போது வரும் கார்களில் கிளட்ச் பெடலுக்கு அருகிலேயே காலை வைத்துக்கொள்ள இட வசதி அளித்துள்ளனர். அதன் மீது காலை வைத்துக்கொண்டால் கிளட்ச் பகுதி நீண்ட காலம் உழைக்கும். என்ஜினின் முழு சக்தியும் காருக்குக் கிடைக்கும். எரிபொருளும் சிக்கனமாகும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கேடிஎம் நிறுவனத்தின் 2021 டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் என்ட்ரி லெவல் டியூக் 125 மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கேடிஎம் டியூக் 125 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிய 2021 கேடிஎம் டியூக் 125 மாடலின் முன்பதிவுகளை ஏற்கனவே துவங்கி விட்டது. புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் தோற்றம் டியூக் 200 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் எல்சிடி ஸ்கிரீன், ஹெட்லைட், பியூவல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயின் பேனல்கள் வழங்கப்படுகிறது.

டியூக் 125 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அதிக இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 டியூக் 125 மாடலில் டியூக் 200 மாடலில் இருந்த டிரெலிஸ் பிரேம், சஸ்பென்ஷன் செட்டப், பிரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2021 கேடிஎம் டியூக் 125 மாடலில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் இவி அந்நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் பத்து மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் 2 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 2200 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு ஆயிரம் யூனிட்கள் விற்பனைாகி இருக்கின்றன. இந்த வளர்ச்சி கொண்டு நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரிவில் நெக்சான் இவி மாடல் 74 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. நெக்சான் இவி மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார், 30.20kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பவர்டிரெயின் 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 டுகாட்டி மான்ஸ்டர் மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, புது அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதுவரை வெளியான மான்ஸ்டர் மாடல்களிலேயே மிகவும் எடை குறைந்த ஒன்றாக 2021 மான்ஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கூர்மை, ஸ்போர்ட் மற்றும் மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் புதிய எல்இடி ஹெட்லேம்ப், வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 டுகாட்டி மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில் 937 சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டு-வே குவிக்ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன் 4.3 இன்ச் புல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மூன்றுவித ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா நிறுவன வாகனங்களுக்கு இந்தியாவில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன்படி ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது.

கடந்த மாதம் ஹோண்டா அமேஸ் சிறப்பு மற்றும் பிரத்யேக எடிஷனை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ரூ. 12 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் மற்றும் டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடல் ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையும், ஹோண்டா சிவிக் பெட்ரோல் மாடல் ரூ. 1 லட்சமும், டீசல் மாடல் ரூ. 2.50 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாத வாக விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உள்நாட்டு வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற்ற நிலையில், வெளிநாட்டு ஏற்றுமதியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது.
2020 நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு மொத்தம் 63,782 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 60,411 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி வாகன விற்பனையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

வருடாந்திர அடிப்படையை பொருத்தவரை வாகன விற்பனையில் 30 சதவீத வீழ்ச்சியடைந்து இருக்கிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ராயல் என்பீல்டு 3,38,461 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. முந்தைய நிதியாண்டில் ராயல் என்பீல்டு 4,82,673 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தன்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக Meteor 350 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. புதிய Meteor 350 மாடல் பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் 2020, பயணிகள் வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் 49,650 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

அதன்படி 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனம் 20.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா நிறுவனத்தின் மொத்த விற்பனை வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வணிக வாகனங்கள் 9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை முந்தைய பண்டிகை கால மாதத்துடன் ஒப்பிடும் போது 108 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.
பசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் பசுமை வாகனங்களில் தீங்கு விளைவிக்காத தன்மைக்கு 5 நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. சுத்தமான காற்று, செயல்திறன் மேம்பாடு மற்றும் பசுமை எரிவாயு என மூன்று நிலைகளில் ஆய்வு செய்த பின் இந்த புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
காற்று மாசு விளைவிக்காத வகையில் உருவாகி இருக்கும் ஹூண்டாய் கோனா சுத்தமான காற்று மற்றும் பசுமை எரிவாயு போன்ற நிலைகளில் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற 24 முழு எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக புள்ளிகளை பெற்ற இரு வாகனங்களில் கோனா மாடலும் இடம்பெற்று இருக்கிறது.

சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. கோனா பேஸ்லிப்ட் மாடலில் கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், 3 பிராக்ஷன் எல்இடி ஹெட்லைட்கள், கீழ்புறம் அகலமான ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், உள்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேஸ்லிப்ட் மாடலில் 39.2 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 136 பிஹெச்பி மற்றும் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோமீட்டர் மற்றும் 484 கிலோமீட்டர் வரை செல்கிறது.






