என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய செலரியோ மாடலினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய செலரியோ மாடல் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. 

    மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி செலரியோ மாடலில் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது. 

     மாருதி சுசுகி செலரியோ

    இந்த மாடலில் புதிய கிரில், ஹாலோஜன் ஹெட்லேம்ப், பிளாக் அலாய் வீல்கள், புதிய பம்ப்பர், டெயில் லைட்கள் உள்ளன. காரின் உள்புறம் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், புதிய ஏ.எம்.டி. லீவர் வழங்கப்படுகிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் ஹைப்பர்மோட்டார்ட் 950 பி.எஸ்.6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டை அறிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி டுகாட்டி நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    ஏற்கனவே யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிள் சில சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி டுகாட்டி டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி, வி ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 950

    இந்த என்ஜின் 112.4 பி.ஹெச்.பி. திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பி.எஸ்.6 வெர்ஷனும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹைப்பர்மோட்டார்ட் 950- ஹைப்பர்மோட்டார்ட் 950, ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ. மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 எஸ்.பி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை மீண்டும் ஒத்திவைத்தது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்தது. முன்னதாக இந்த விற்பனை இன்று (நவம்பர் 1) துவங்க இருந்தது. 

    ஏற்கனவே இந்த மாடல்களின் வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருந்தது. எனினும், முந்தைய அறிவிப்பின் படி தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெஸ்ட் ரைடு துவங்குகிறது. வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்தது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    வால்வோ நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஓ.டி.ஏ. முறையில் அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


    வால்வோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை ஓவர் தி ஏர் அப்டேட் (ஓ.டி.ஏ.) மூலம் மேம்படுத்துகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்.சி.40 ரிசார்ஜ், 2022 எக்ஸ்.சி.60, 2022 எக்ஸ்.சி.60 ரிசார்ஜ் மற்றும் 2022 எக்ஸ்.சி.60 போல்-ஸ்டார் போன்ற மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    இந்த அப்டேட்- புது அம்சங்களை வழங்குவது, ஏற்கனவே உள்ள சிறு குறைகளை போக்குவது, இன்போடெயின்மென்ட் மற்றும் ப்ரோபல்ஷன் சிஸ்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதன் மூலம் எக்ஸ்.சி.40 மாடலை பயன்படுத்துவோர் 'ரேன்ஜ் செயலி' ஒன்றை எதிர்பார்க்கலாம். இதை கொண்டு வாகனத்தின் ரேன்ஜ்-ஐ நீட்டிக்கவும் முடியும். 

     வால்வோ எலெக்ட்ரிக் கார்

    ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் காரின் ரேன்ஜ் எத்தனை கிலோமீட்டர்கள் அதிகரிக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓ.டி.ஏ. அப்டேட் வழங்குவதில் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை பெற்று இருக்கிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சிட்ரோயன் நிறுவனம் சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய விலையை உயர்த்தியது. இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. 

    விலை உயர்வின் படி சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் பீல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 31.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மாறி இருக்கிறது. இதன் ஷைன் வேரியண்ட விலை தற்போது ரூ. 32.80 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என மாறியது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடலாக சி5 ஏர்கிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    உலகம் முழுக்க டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடல் மொத்தத்தில் 800 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பாஸ்ட்-ஹவுஸ் மற்றும் டுகாட்டி நிறுவனங்களின் கூட்டணியை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் லிமிடெட் எடிஷன்

    இந்த மாடலில் 803சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கயபா சஸ்பென்ஷன், ஆப்-ரோடு சார்ந்த பூட் பெக், கழற்றக்கூடிய ரப்பர் பேட்கள், பிளாக் நிற ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டு கார் மாடல்கள் நிறத்தை திடீரென மாற்றியமைத்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் நெக்சான் மாடல்களின் பியூர் சில்வர் நிற வேரியண்ட்டை சத்தமின்றி வலைதளத்தில் இருந்து நீக்கியது. தற்போது நெக்சான் கார் ஐந்து நிறங்களிலும், டியாகோ மாடல் நான்கு நிறங்களிலும் கிடைக்கிறது.

    முன்னதாக நெக்சான், டியாகோ மற்றும் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல்களின் நிறங்களையும் டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் நெக்சான் டெக்டானிக் புளூ, கடந்த மாதம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது. 

     டாடா டியாகோ

    புது மாற்றங்களை தொடர்ந்து நெக்சான் எஸ்.யு.வி. மாடல் அட்லஸ் பிளாக், போலியேஜ் கிரீன், கேல்கேரி வைட், டேடோனா கிரே மற்றும் பிளேம் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. நெக்சான் மாடல் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    மினி இந்தியா நிறுவனத்தின் கூப்பர் எல்க்ட்ரிக் மாடல் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


    மினி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து 2021 மினி கூப்பர் எஸ்.இ. மாடல் முன்பதிவு துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் மினி இந்தியா வலைதளத்தில் புதிய கூப்பர் எஸ்.இ. மாடலை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

    முன்னதாக மினி கூப்பர் எஸ்.இ. மாடல் 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் ஐ.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     மினி கூப்பர் எஸ்.இ.

    புதிய மூன்று கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலில் 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா மாடல் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. 

    புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் இரண்டாவது கார் ஆகும். 

     ஸ்கோடா ஸ்லேவியா

    ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.கியூ.பி. ஏ0 ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த கார் 4541எம்.எம். அளவு நீளமும், 1752 எம்.எம். அளவு அகலமும், 1487 எம்.எம். அளவு உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 எம்.எம். ஆகும். 

    ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 முதல் யூனிட் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித்துக்கு வழங்கப்பட்டது.


    மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்தியாவில் வினியோகம் செய்ய துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி.700 முதல் யூனிட் 2020 பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்ற சுமித் அண்டிலுக்கு வழங்கப்பட்டது. இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எக்ஸ்.யு.வி.700 கோல்டு எடிஷன் மாடல் ஆகும். 

    கோல்டு எடிஷன் மாடலில் முன்புற கிரில் கோல்டன் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மஹிந்திராவின் புது லோகோ சேட்டின் கோல்டு நிறத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் டெயில்கேட் பகுதியில் 68.55 எனும் எண்கள் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டு இருக்கிறது. உள்புற இருக்கைகளில் தங்க நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்தது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. ஓலா எஸ்1 சீரிஸ் டெஸ்ட் ரைடுகள் நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக உற்பத்தி பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டது.

    இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ஓலா எலெக்ட்ரிக்

    ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 121 கிலோமீட்டர் மற்றும் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இரு ஸ்கூட்டர்களும் முறையே அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் மற்றும் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    மாருதி சுசுகியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் ஒரு நட்சத்திர குறியீடையும் பெறவில்லை. இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பயணிக்கும் போது முறையே 20.03 சதவீதமும், 17.06 சதவீத புள்ளிகளையே பெற்றது. 

    சமீபத்தில் லத்தீன் என்கேப் தனது பரிசோதனை விதிகளை மாற்றி அமைத்தது. இதனால், இந்த சோதனையில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது. புதிய விதிகள் குளோபல் என்கேப் பின்பற்றும் விதிமுறைகளை விட கடுமையானவை ஆகும்.

     மாருதி பலேனோ

    பாதுகாப்பை பொருத்தவரை மாருதி பலேனோ மாடல் முன்புற ஏர்பேக் மட்டுமே கொண்டிருக்கிறது. பின்புறம் பெல்ட் லோட் லிமிட்டர் மற்றும் பெல்ட் பிரீ-டென்சனர் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் ஓட்டுனரின் தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. 

    லத்தீன் என்கேப் சோதனையில் பங்கேற்ற மாருதி பலேனோ மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. எனினும், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    ×