என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE எலெக்ட்ரிக் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. செப்டம்பரில் நடைபெற இருக்கும் IAA முனிச் மோட்டார் விழாவில் மெர்சிடிஸ் நான்கு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் புதிய EQE ஆல்-எலெக்ட்ரிக் செடான் மாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய பென்ஸ் EQE இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட EQS மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. டீசர் புகைப்படங்களின் படி புதிய EQE மாடலில் பெரிய சென்ட்ரல் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், டர்பைன் போன்ற ஏ.சி. வென்ட்கள், ஆம்பியன்ட் லைட் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

காரின் வெளிப்புற தோற்றம் பற்றி அதிக விவரங்கள் இல்லை. இதன் டெயில் லைட் இடது முதல் வலது புறம் வரை நீள்கிறது. புதிய EQE ஒட்டுமொத்த டிசைன், காருக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் பிரிவில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQE மாடலை விரைவில் பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா எம்.பி.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இம்முறை இன்னோவா மாடல் விலை 2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா மாடலின் புதிய விலை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் என டொயோட்டா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல்- GX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 16.11 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2021 இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 164 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டீசல் என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பெனலி நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் மிட்-சைஸ் குரூயிசர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
பெனலி நிறுவனத்தின் 502C மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் மூலம் பெனலி நிறுவனம் இந்தியாவின் மிட்-சைஸ் குரூயிசர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பெனலி 502C விலை ரூ. 4.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது கவாசகி நிறுவனத்தின் வல்கன் எஸ் மாடலை விட ரூ. 1 லட்சம் விலை குறைவு ஆகும்.
புதிய பெனலி 502C மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். பெனலி 502C மாடல் மேட் பிளாக் மற்றும் காக்னக் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. பெனலி 502C வடிவமைப்பு டுகாட்டி டையவெல் 1260 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.

இந்த மாடலில் ஹெட்லேம்ப் வழக்கத்தை விட கீழே பொருத்தப்பட்டு உள்ளது. இதன் பியூவல் டேன்க் டியர்-டிராப் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள எக்சாஸ்ட் டூயல் ஷாட்கன் துப்பாக்கி போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் கன்சோல் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பெனலி 502C மாடலில் 500சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 46.8 பி.ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முதல்முறையாக நீ்ண்ட கால வாரண்டியை அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிக்கான வாரண்டியை எட்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. சந்தையில் பேட்டரிக்கு வழங்கப்படும் வாரண்டிகளில் இதுவே அதிகம் ஆகும்.
நேற்று (ஜூலை 28) இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய அறிவிப்பு டொயோட்டா செல்ப்-சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.

தற்போது கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்பயர் மாடல்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களின் பேட்டரிக்கும் முன்னதாக 1 லட்சம் கிலோமீட்டர் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாரண்டி வழங்கப்பட்டது.
புது அறிவிப்பின்படி, இந்த வாரண்டி எட்டு ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் என அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. முன்னதாக ப்ரியஸ் மற்றும் கேம்ரி போன்ற மாடல்களில் எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தை டொயோட்டா அறிமுகம் செய்தது. தற்போது கேம்ரி மற்றும் வெல்பயர் மாடல்களில் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மூன்றாவது 5-சீட்டர் எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் 2021 டிகுவான் மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு உள்ளது.
2021 வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யு.வி. முற்றிலும் புது டிசைன், அம்சங்கள் மற்றும் புதிய பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. வெளியானதும், புதிய டிகுவான் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மூன்றாவது 5-சீட்டர் எஸ்.யு.வி.-யாக இருக்கும்.

இந்தியாவில் புதிய டிகுவான் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அந்த வகையில் இந்த மாடல் ஜீப் காம்பஸ் டாப் எண்ட் வேரியண்ட் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
தோற்றத்தில் புதிய டிகுவான் அதன் பி.எஸ்.4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, எல்.இ.டி. மேட்ரிக்ஸ் தொழில்நுட்பத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் மாருதி மெகா அப்கிரேடு சலுகையை அறிவித்து இருக்கிறது. அரினா பேனரின் கீழ் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல்களுக்கும் சிறப்பு பலன்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகைகள் VXI பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மாருதி மெகா அப்கிரேடு திட்டம் ஜூலை 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் பலன்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர் மற்றும் குறிப்பிட்ட நகரத்திற்கு ஏற்ப வேறுபடும். இதனால் புது சலுகையில் பயன்பெற விரும்புவோர் அருகாமையில் உள்ள விற்பனை மையம் சென்று முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு சலுகையின் கீழ் மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 55 ஆயிரமும், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ மாடல்களுக்கு முறையே ரூ. 51 ஆயிரம் மற்றும் ரூ. 47,100 வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன.
இதேபோன்று மாருதி சுசுகி ஆல்டோ, டிசையர் மாடல்களுக்கு முறையே ரூ. 47,100 மற்றும் ரூ. 41 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. மற்ற அரினா மாடல்களான வேகன் ஆர் ரூ. 31,700, ஈக்கோ ரூ.34,100, செலரியோ ரூ. 22,100, செலரியோ எக்ஸ் ரூ. 22,100 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பலன்கள்- தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட்/ஊரக சலுகை வடிவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
யமஹா நிறுவனத்தின் R3 பி.எஸ்.6 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. யமஹாவின் பி.எஸ்.4 மாடல்களில் மிகவும் பிரபலமாக இருந்த YZF-R3 இதுவரை பி.எஸ்.6 அப்டேட் செய்யப்படாமல் உள்ளது.
முன்னதாக புதிய யமஹா மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் RZF-R15 V4 என்றும் கூறப்பட்டது. பின், இந்த மாடலை உற்று நோக்கும் போது இது பெரிய மோட்டார்சைக்கிள் என்றும் இது R3 மாடலின் பி.எஸ்.6 வேரியண்டாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஸ்பை படங்களில் இந்த மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட YZF-R7 வேரியண்ட்டில் உள்ளதை போன்றே நடுவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் பின்புறம் R3 பி.எஸ்.4 போன்றே காட்சியளிக்கிறது.
புதிய டிசைன் மட்டுமின்றி பி.எஸ்.6 R3 மாடல் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 6-ஆக்சிஸ் IMU சென்சார் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை 2021 R3 மாடலில் 321சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
முந்தைய பி.எஸ்.4 என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் 41 பி.ஹெச்.பி. பவர், 29 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிரேக்கிங்கிற்கு R3 மாடலின் முன்புறம் 298 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் புதிய காம்பேக்ட் மாடலை குறைந்த விலையில் வெளியிட இருக்கிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனமும் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் காம்பேக்ட் மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கோனா இ.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புது எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

'எலெக்ட்ரிக் சந்தையின் பெருவாரியான பங்குகளை குறிவைக்கும் நோக்கில் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.'
'இந்த எலெக்ட்ரிக் மாடல் அதிக ரேன்ஜ், குறைந்த விலை, விற்பனையாளர்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வகையில் இருக்கும். இதுகுறித்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது,' என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விளம்பரம், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களிலும் மாருதியின் எஸ்-சி.என்.ஜி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அதிக சி.என்.ஜி. மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்நிறுவன மாடல்களில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சி.என்.ஜி. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஈக்கோ சி.என்.ஜி. எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போதைய தகவல்களின்படி ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த என்ஜின் பலத்தரப்பட்ட எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றின் செயல்திறன் சற்றே குறைந்து இருக்கும் என தெரிகிறது.
தற்போதைய பெட்ரோல் என்ஜின் 88 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறனை வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் இதைவிட 10 சதவீதம் குறைந்த திறன் கொண்டிருக்கும். புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களின் விலை பெட்ரோல் மாடல்களை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. வாகனங்கள் விற்பனையில் டாடா சபாரி முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான ஐந்தே மாதங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி இருக்கிறது. டாடா சபாரி மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் சபாரி பிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் 100-வது யூனிட்டை வெளியிட்டது. அதன்பின் சுமார் 9,900 யூனிட்கள் நான்கே மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் புதிய சபாரி மாடல் 25.2 சதவீத பங்குகளுடன் முன்னணி இடம் பிடித்து இருக்கிறது.

இத்துடன் டாடா நிறுவனத்தின் சபாரி மற்றும் ஹேரியர் மாடல்கள் இணைந்து சுமார் 41.2 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய டாடா சபாரி மாடல் விலை ரூ. 14.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.81 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. .அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
புதிய டாடா சபாரி மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹீரோ கிளாமர் புது மோட்டார்சைக்கிள் நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் என பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125, கிளாமர் XTEC போன்ற மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது புதிய ஹீரோ கிளாமர் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புது மாடலுக்கான டீசரை ஹீரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது. புது ஹீரோ கிளாமர் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலுக்கு மாற்றாக வெளியாக இருக்கிறது. புதிய டீசர்களின் படி, புது மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், H-வடிவ டி.ஆர்.எல்., Gloss பெயின்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் 124.7சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 10.7 பி.ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது.
லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
லம்போர்கினி இந்தியா நிறுவனம் தனது சூப்பர்-பாஸ்ட் உருஸ் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு அறிமுகமான லம்போர்கினி உருஸ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் உருஸ் பியல் கேப்சூல் எடிஷனை லம்போர்கினி அறிமுகம் செய்தது.

தற்போது உருஸ் மாடலின் கிராபைட் கேப்சூல் எடிஷனை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் அதிக பிராகசமான பெயின்டிங், உள்புறம் புதிய நிற ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஆடம்பரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரிக்கலாம் என லம்போர்கினி எதிர்பார்க்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனைக்கு லம்போர்கினி நிர்ணயித்த இலக்கில் 50 சதவீதத்தை கடந்துவிட்டது. இத்துடன் 2024 வாக்கில் மூன்று மாடல்களின் எலெக்ட்ரிக் வேரியண்டை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது.






