search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா சபாரி
    X
    டாடா சபாரி

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா சபாரி

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. வாகனங்கள் விற்பனையில் டாடா சபாரி முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான ஐந்தே மாதங்களில் இந்த மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் எட்டி இருக்கிறது. டாடா சபாரி மாடல் அந்நிறுவனத்தின் பூனே ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் சபாரி பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலின் 100-வது யூனிட்டை வெளியிட்டது. அதன்பின் சுமார் 9,900 யூனிட்கள் நான்கே மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையின் 6/7 சீட்டர் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் புதிய சபாரி மாடல் 25.2 சதவீத பங்குகளுடன் முன்னணி இடம் பிடித்து இருக்கிறது. 

     டாடா சபாரி

    இத்துடன் டாடா நிறுவனத்தின் சபாரி மற்றும் ஹேரியர் மாடல்கள் இணைந்து சுமார் 41.2 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய டாடா சபாரி மாடல் விலை ரூ. 14.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.81 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. .அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    புதிய டாடா சபாரி மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×