என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மாருதி சுசுகி நிறுவன்தின் XL7 எம்.பி.வி. மாடல் இந்தியாவில் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்த நிதியாண்டில் பல்வேறு கார் மால்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் சில மாடல்களை அந்நிறுவனத்தின் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மாருதி நிறுவனம் நெக்சா பிரிவில் புதிதாக 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இது XL6 மாடலின் 7 சீட்டர் வேரியண்ட்டாக இருக்கும் என்றும் இந்த மாடல் XL7 என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் மாருதி 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை விற்பனை செய்து வருகிறது. அங்கு இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய XL6 7-சீட்டர் எம்.பி.வி. மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

அதன்படி புதிய அலாய் வீல்கள், அகலமான டையர்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், பின்புறம் ஸ்பாயிலர், மாடல் பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் இந்தோனேசிய மாடலில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, IRVM, மடிக்கக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போதைய XL6 மாடலில் 1.5 லிட்டர் கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ NRG மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2018 வாக்கில் டியாகோ NRG வேரியண்டை அறிமுகம் செய்தது. காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமான டியாகோ NRG விற்பனை 2020 வாக்கில் நிறுத்தப்பட்டது. தற்போது டாடா டியாகோ NRG மாடல் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய டியாகோ NRG ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தோற்றத்தில் டியாகோ NRG ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடலில் பாக்ஸ் கிளாடிங் கொண்டு புது டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், NRG பேட்ஜிங், பாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டியாகோ NRG மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.

உள்புறம் டியாகோ NRG மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றுடன் முன்புறம் இரட்டை ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டியாகோ NRG மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பஜாஜ் டிரையம்ப் கூட்டணியில் உருவாகி இருக்கும் குரூயிசர் மாடல் திட்டமிட்டப்படி வெளியாகாது என கூறப்படுகிறது.
பஜாஜ் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் 200சிசி-250சிசி திறன் கொண்ட குரூயிசர் மாடல்கள் உருவாகி வருகின்றன. இந்த கூட்டணியில் உருவாகி வரும் முதல் குரூயிசர் மாடல் 2023 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் 2022 ஆம் ஆண்டு வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டது.
தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் ப்ரோடோடைப் வெர்ஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. டெல்டா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் பிரிட்டனில் கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் டிரையம்ப் பொறியாளர்கள் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மோட்டார்சைக்கிள் வெளியீடு 6 முதல் 9 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 2023 ஆண்டு இறுதியிலோ 2024 துவக்கத்திலோ அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய மாடல் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ் நிறுவனம் 250சிசி பிளாட்பார்மில் புதிய பல்சர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு என்ஜின், ஆயில்-கூலர் ப்ரோவிஷன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய டிரையம்ப் மாடலிலும் இதேபோன்ற என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா நிறுவனத்தின் 2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ முன்பதிவு குறித்து ஹோண்டா இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், சில விற்பனை மையங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டாம் தலைமுறை ப்ரியோ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது.

2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில், பம்ப்பர், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதன் பின்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 6.57 லட்சத்தில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் ஆகும்.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஆர்வி1 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மாடலுக்கு மாற்றாக வெளியாகும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் ஆர்வி1 எனும் பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. ஆர்வி1 மாடல் 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. தற்போதைய மாடல்களுக்கான பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், புதிய ஆர்வி1 மாடலுக்கான பாகங்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வாங்க ரெவோல்ட் திட்டமிட்டு இருக்கிறது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ஆர்வி300 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு புதிய ஆர்வி1 மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் எம்ஜி ஒன் எஸ்.யு.வி. மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி எஸ்.யு.வி. மாடல் ஜூலை 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் எம்ஜி ஒன் என அழைக்கப்பட இருக்கிறது. இது சிக்மா ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

டீசரின்படி புதிய எஸ்.யு.வி. மாடல் அதிக பிரகாசமான ஆரஞ்சு நிறமும், ரூப் பகுதியில் கருப்பு நிறமும் பூசப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் ஸ்போர்ட் டிசைன் கொண்ட கிரில், நடுவில் எம்ஜி லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன. பாக் லேம்ப்கள் பிளாக் இன்சர்ட்களில் செங்குத்தாக பொருத்தப்படுகிறது.
எம்ஜி ஒன் மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதில் வழங்கப்படும் என்ஜின் ஐ.சி.இ. ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இவற்றுடன் புதிய எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
2022 கே.டி.எம். RC 8C டிராக் மோட்டார்சைக்கிள் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
கே.டி.எம். நிறுவனம் 2022 RC 8C டிராக் மோட்டார்சைக்கிளை சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய RC 8C மூலம் கே.டி.எம். நிறுவனம் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய 2022 கே.டி.எம். RC 8C லிமிடெட் எடிஷன் யூனிட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
மொத்தம் 100 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் 4 நிமிடங்கள் 32 நொடிகளில் விற்றுத் தீர்ந்ததாக கே.டி.எம். தெரிவித்து இருக்கிறது. முன்பதிவு முழுக்க ஆன்லைனிலேயே நடைபெற்றது. 2022 கே.டி.எம். RC 8C மாடல் 890 டியூக் ஆர் உருவாக்க பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

2022 கே.டி.எம். RC 8C மாடலில் 889சிசி LC8 பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர், 101 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மொத்த எடை 140 கிலோ ஆகும்.
தற்போது 100 பேர் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்துள்ள போதிலும், இவர்களில் 25 பேர் மட்டுமே சிறப்பு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 25 பேருக்கும் முன்னாள் மோட்டோ ஜிபி வீரர்களான மிகா கலியோ, டேனி பெட்ரோசா ஆகியோர் பந்தய களத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.
சீனாவில் உருவாகி இருக்கும் புதிய ரெயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது.
உலகின் அதிவேக ரெயிலை சீனா உருவாக்கி இருக்கிறது. இந்த ரெயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெயில் மேக்லெவ் புல்லட் ரெயில் என அழைக்கப்படுகிறது. இந்த ரெயில் சுமார் ஆயிரம் கிலோமீட்டரை கடக்க வெறும் 150 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதே தூரத்தை விமானத்தில் செல்லும்போது 180 நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் பயண நேரத்தை மூன்று மணி நேரங்கள் வரை குறைத்துவிடுகிறது. இந்த ரெயில் எவ்வித சக்கரமும் இன்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களின் உதவியின்றி இந்த ரெயில் தரையின் மேல்பரப்பில் மிக நெருக்கமாக பறக்கிறது. இந்த ரெயிலில் சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மாற்றாக சக்திவாய்ந்த காந்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காந்தகங்கள் ரெயிலில் உராய்வின்றி அதிவேகமாக முன்னேறி செல்கிறது. ரெயில் மற்றும் பாதை இடையே எவ்வித உராய்வும் இருக்காது என்பதால் வழக்கமான ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் அதிவேகமாக செல்கிறது. தற்போதுள்ள அதிவேக ரெயில்கள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
சீனாவில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ரெயில்களின் முதற்கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது.
வழக்கமான அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் பயண நேரத்தை மூன்று மணி நேரங்கள் வரை குறைத்துவிடுகிறது. இந்த ரெயில் எவ்வித சக்கரமும் இன்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களின் உதவியின்றி இந்த ரெயில் தரையின் மேல்பரப்பில் மிக நெருக்கமாக பறக்கிறது. இந்த ரெயிலில் சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மாற்றாக சக்திவாய்ந்த காந்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ரெயில்களின் முதற்கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டைகுன் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டைகுன் மாடல் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனர் அசிஷ் குப்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். டைகுன் மாடல் பல்வேறு வேரியண்ட்கள், பலவித என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய டைகுன் மாடலின் விலை ரூ. 12 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது.
புதிய வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த காரில் இந்திய பயனர்கள் மற்றும் இந்திய சாலைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 108 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
யமஹா நிறுவனத்தின் பசினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
யமஹா நிறுவனம் பசினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆகும். யமஹா பசினோ 125 ஹைப்ரிட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்ட் விலை ரூ. 70 ஆயிரம் என்றும் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 76,530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டிஸ்க் மாடல் விவிட் ரெட் ஸ்பெஷல் மற்றும் மேட் பிளாக் ஸ்பெஷல் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ, சாவ் கூப்பர், எல்லோ காக்டெயில், சியான் புளூ, மெட்டாலிக் பிளாக் மற்றும் விவிட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடல் 125 சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் ஸ்டார்டர் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்.எம்.ஜி.) கொண்டிருக்கிறது. இதன் எஸ்.எம்.ஜி. எலெக்ட்ரிக் மோட்டார் எலெக்ட்ரிக் பவர் அசிஸ்ட் வழங்குகிறது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடலில் புல்லி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., ஆப்ஷனல் யு.எஸ்.பி. சார்ஜ் ஸ்லாட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட அமேஸ் மாடல் தோற்றத்தில் சில மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. அமேஸ் பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற தோற்றம், உள்புற அம்சங்கள் மாற்றப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படலாம். காரின் உள்புறத்தில் புதிய இருக்கைகள், மேம்பட்ட ஏ.சி. பில்ட்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய அமேஸ் மாடல் சில புதிய நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. அமேஸ் பேஸ்லிப்ட் இந்திய வெளியீடு குறித்து ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம். எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் கனெக்டெட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 துவக்க விலை ரூ. 72,250, எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முன்பதிவு ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மையங்கள் மற்றும் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
விலை விவரங்கள்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் - ரூ. 72,250
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் - ரூ. 76,500
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 கனெக்டெட் - ரூ. 79,750
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 124.6சிசி PGM-Fi என்ஜின் மற்றும் ஹீரோவின் எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. பவர், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் சஸ்பென்ஷன், பிரேக், வீல் மற்றும் டையர் உள்ளிட்டவை முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஹீரோ கிளாமர் XTEC மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கனெக்டெட் தொழில்நுட்பம், மேம்பட்ட என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.






