என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 மேக்ஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் துவங்கும் என தெரிகிறது.
புதிய எஸ்.எக்ஸ்.ஆர். மோட்டோ ஸ்கூட்டரின் வடிவமைப்பு பணிகளை இத்தாலியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மேற்கொண்டதாக தெரிவித்து இருக்கிறது. அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர். 160 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது.

புதிய ஸ்கூட்டரில் 160சிசி மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே ஸ்கூட்டரின் 125சிசி வேரியண்ட்டை அறிமுகம் செய்ய அப்ரிலியா திட்டமிட்டுள்ளது. எஸ்.ஆர். 125 என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர், 9.9 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் ஐடி கிராஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் ஐடி கிராஸ் கான்செப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த காரை 2021 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐடி கிராஸ் கார் முழுமையான எலெக்ட்ரிக் கூப் எஸ்.யு.வி. மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெரிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. தற்சமயம் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் உற்பத்தி வடிவம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் கார் 83 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியும், முன்புறம் 101 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார், பின்புறம் 201 பி.ஹெச்.பி. பவர், 310 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. கான்செப்ட் வெர்ஷனில் 4 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இதன் உற்பத்தி வடிவத்தில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் மார்க்கோ போலோ அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் மார்க்கோ போலோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல்: மார்க்கோ போலோ ஹாரிசான் மற்றும் மார்க்கோ போலோ கேம்ப்பர் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 1.38 கோடி மற்றும் ரூ. 1.46 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மார்க்கோ போலோ ஹாரிசான் மாடலுக்கான முன்பதிவுகள் மட்டுமே துவங்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மார்க்கோ போலோ மாடல் 5140 எம்.எம். அளவு நீளமும், 3200 எம்.எம். அளவில் வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 163 பி.எஸ். பவர் மற்றும் 380 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய விட்டாரா பிரெஸ்ஸா கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், டெயில் லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின்ம் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பி.எஸ்.6 என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன், 5 ஸ்பீட மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய விட்டாரா பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு விட்டன.
ஜனவரி மாத விற்பனையில் ஹோண்டா வாகனங்கள் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதன் முழு தகவல்களை பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஜனவரி 2020 மாதத்தில் தனது இருசக்கர வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் 3,74,091 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 29,292 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.
ஜனவரி 2019 இல் ஹோண்டா நிறுவனம் 4,00,695 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ்.6 விதிகள் அமலாக இருக்கும் நிலையில், பி.எஸ்.6 வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருக்கின்றன. விலை உயர்வு காரணமாக விற்பனை அதிகரிப்பதில் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து சிக்கலான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பி.எஸ்.6 ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2019-இல் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியாவில் முதல் பி.எஸ்.6 வாகனத்தை வெளியிட்ட நிறுவனமாக ஹோண்டா இருக்கிறது.
தற்சமயம் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி, ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6, ஹோண்டா எஸ்.பி. 125 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் புதிய தலைமுறை கிரெட்டா மாடல் காரை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய எஸ்.யு.வி. மாடல் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் ஐ.எக்ஸ்.25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் கிரெட்டா மாடல் கார் ஹூண்டாய் ஐ.எஸ்.25 பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் லேம்ப்கள், புதிய மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள், மேம்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறம் போன்றே உள்புறத்திலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் காரின் உள்புறத்தில் முழுமையான பிளாக் நிறத்தாலான இன்டீரியர் எதிர்பார்க்கலாம். இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹூண்டாயின் புளூ லின்க் கன்கெடிவிட்டி சூட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட் பெல்ட் ரிமைன்டர், பெடஸ்ட்ரியன் சேஃப்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், பல்வேறு ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆன்க்கர்கள் வழங்கப்படலாம்.
புதிய 2020 ஹூண்டாயட் கிரெட்டா மாடலில் தற்போதைய மாடல்களில் உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்கள் பி.எஸ்.6 ரகத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனமாக புதிய ஸ்கோடா விஷன் எஸ்.யு.வி. இருக்கிறது.
இந்தியாவில் ஸ்டோகா விஷன் ஐ.என். கார் 2021 ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 150 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா விஷன் ஐ.என். மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

ஸ்கோடா விஷன் ஐ.என். 4256 எம்.எம். அளவில் நீளம், 2671 எம்.எம். வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி.யின் ரக்கட் தோற்றம் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரின் முன்புறம் மெல்லிய ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட கிரில், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் க்ரிஸ்டலைன் கொண்டிருப்பது ஸ்கோடா பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. இதன் உள்புற இருக்கைகள் பினாடெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனற்ற அன்னாசி பழ இலைகளும், உண்மையான லெதருக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஃபைபர் வழங்கப்படுகிறது.
அமேசான் இந்தியா நிறுவனம் தனது தளத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை இந்த வாகனத்தில் விநியோகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் சமீபத்தில் இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய பயணத்தின் போது இங்கு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இத்துடன் நாட்டில் அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் பொருட்களை எலெக்ட்ரிக் வாகனங்களில் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கென அமேசான் நிறுவனம் 10,000 எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை பயன்படுத்த இருக்கிறது.

முன்னதாக 2019 ஆண்டு ஆட்டோ ரிக்ஷா கொண்டு பொருட்களை விநியோகம் செய்வதற்கான சோதனைகளை அமேசான் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அமேசான் நிறுவனம் 2025 ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க சுமார் 20 நகரங்களில் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய இருக்கிறது.
2019 செப்டம்பரில் அமேசான் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டத்தை #climatepledge அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் 2040 ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரல் இலக்கை அடைய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
“21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக இருக்க போகிறது.” என அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தெரிவித்தார். இத்துடன் 2025 ஆண்டிற்குள் இந்திய ஏற்றுமதி மதிப்பை 1000 கோடி அமெரிக்க டாலர்களுக்கான சந்தையாக உருவாக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. எனினும், ஹீரோ நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மூலம் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருப்பதாக தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 150 முதல் 200 சிசி பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

வடிவமைப்பை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிளில் கம்பீர தோற்றம் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இத்துடன் முன்புறம் அப்சைட்-டவுன் ஃபோர்க் வழங்கப்படுகிறது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பவர்டிரெயின் மற்றும் பேட்டரி பேக் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும், இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படலாம்.
புகைப்படம் நன்றி: Car & Bike
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் இந்தியாவில் எல்.சி.500ஹெச் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் காரை அறிமுகம் செய்துள்ளது. லெக்சஸ் எல்.சி.500ஹெச் என அழைக்கப்படும் புதிய ஹைப்ரிட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1.96 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காருடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லெக்சஸ் இ.எஸ். 300ஹெச் மற்றும் என்.எக்ஸ். 300ஹெச் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இரு கார்களின் விலை முறையே ரூ. 51.90 லட்சம் மற்றும் ரூ. 60.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய எல்.சி.500ஹெச் கூப் மாடலில் கூர்மையான கிரில், முக்கோன வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் உயரமான கேபின், 21 இன்ச் அளவில் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நீண்ட பொனெட் காரின் பின்புறம் வரை நீள்கிறது.

பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் எக்சாஸ்ட் மற்றும் பின்புற டிஃப்யூசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் லெக்சஸ் எல்.சி.500ஹெச் மாடலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 10.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய எல்.சி.500ஹெச். மாடலில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 295 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் 110 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் செயல்திறனை 355 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் வரை வழங்குகிறது.
இத்துடன் 10 ஸ்பீடு யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 3 ஸ்டெப் சி.வி.டி. மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு புதிய காரில் லெக்சஸ் சேஃப்டி பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் பி.எஸ்.6 காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்.ஜி. ஹெக்டார் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 12.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.4 மாடல்களுடன் ஒப்பிடும் போது பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 26,000 வரை அதிகம் ஆகும். விலை உயர்வு ஸ்டான்டர்டு மாடலில் துவங்கி பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட் வரை பொருந்தும். ஹெக்டார் காரின் பெட்ரோல் என்ஜின்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இவற்றில் பேஸ் மாடலான ஸ்டைல் தவிர மற்ற வேரியண்ட்களில் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி. ஹெக்டார் பி.எஸ்.6 காரில் 1.5 லிட்டர் டர்போ யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது 143 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
புதிய பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் தவிர பி.எஸ்.4 டீசல் என்ஜின் கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடலில் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இது 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் தவிர ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 10.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெனட் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இ-சிம் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2020 அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 2.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆர்.ஆர்.310 மோட்டார்சைக்கிளில் பல்வேறு புதிய அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மோட்டார்சைக்கிள்: ரேசிங் ரெட் மற்றும் டைட்டானியம் பிளாக் மற்றும் முழுக்க ரென்ட் அக்சென்ட்கள் நிறைந்த புதிய நிறத்தில் கிடைக்கிறது.
2020 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ்.6 மாடலில் புதிய 5 இன்ச் டி.எஃப்.டி. கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்ஸோனெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகிய மோட்டார்சைக்கிள்: ரெயின், அர்பன், ஸ்போர்ட் மற்றும் டிராக் என நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

இவற்றுடன் 2020 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 பி.எஸ்.6 மாடலில்: திராட்டிள் பை வையர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கிளைட் த்ரூ தொழில்நுட்பம் பிளஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் டே/நைட் மோட் மற்றும் டி.வி.எஸ். கனெக்ட் செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனகெடிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.6 அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலில் 312 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 33 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விநியோகம் இம்மாத இரண்டாவது வாரத்தில் துவங்கும் என தெரிகிறது.






