என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் 2020 ஐ20 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஐ20 கார் பல்வேறு அப்டேட்களை பெற்று, புதிய அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஹூண்டாய் ஐ20 பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

காரின் வடிவமைப்பு பற்றி அதிக விவரங்கள் இல்லாத நிலையில், புதிய காரில் கேஸ்கேடிங் கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. ஃபாக்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல்கள், புதிய ORVMகள், இன்டிகேட்டர்கள், ஷார்ப் ஃபின் ஆன்டெனா மற்றும் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.6 ஹூண்டாய் ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் புதிய கிராண்ட் ஐ20 நியோஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ள 1.4 லிட்டர் CRDI என்ஜினிற்கு மாற்றாக 1.5 லிட்டர் டீசல் என்ஜினை வழங்க இருக்கிறது.
புகைப்படம் நன்றி: CarandBike
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 10-ம் தேதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாடலிலும் பிரத்யேக குறியீட்டு எண் மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 யூனிட் விற்பனை நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் புதிய ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் மாடலின் துவக்க விலை ரூ. 54.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2020 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலில் பிரீமியம் எல்.இ.டி. ஹெட்லைட்கள், சிக்னேச்சர் டி.ஆர்.எல்.கள், அனிமேட்டெட் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் ஆடம்பரம் சார்ந்த மினிமலிஸ்ட் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள அம்சங்கள் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் பாரம்பரிய அலுமினியம் ட்ரிம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டச் ப்ரோ டுயோ சிஸ்டம், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இன்டகிரேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

2020 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலில் லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் கண்டிஷன் மாணிட்டர், பின்புற கேமரா மற்றும் 360 டிகிரி பார்க்கிங் ஏய்ட், க்ளியர் எக்சிட் மற்றும் ரியர் டிராஃபிக் மாணிட்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய இவோக் மாடல் இரண்டு பி.எஸ்.6 ரக இன்ஜெனியம் என்ஜின்கள்: 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 247 பி.ஹெச்.பி. பவர், 365 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மற்றொரு என்ஜின் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 177 பி.ஹெச்.பி. பவர், 430 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் ஜீப் ராங்களர், பி.எம்.டபுள்யூ. எக்ஸ்4, ஹோண்டா சி.ஆர். வி மற்றும் வால்வோ எக்ஸ்.சி.60 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.
ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி. மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 கே.டி.எம். டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் புதிய லைட்வெயிட் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம், புதிய ஃபியூயல் டேன்க் மற்றும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது. டியூக் 200 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஃபியூயல் இன்ஜெக்ஷன் எலெக்டிரானிக், டபுள்யூ.பி. சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

2020 கே.டி.எம். டியூக் 200 மற்றும் ஆர்.சி. 200 மாடல்களில் அல்ட்ரா காம்பேக்ட், லிக்விட் கூல்டு, DOHC, 4 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 1,72,749 மற்றும் ரூ. 1,96,768 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடலில் 373.3சிசி சிங்கிள் சிலிண்டர், 4 வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

2020 கே.டி.எம். டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை முறையே ரூ. 2,52,928 மற்றும் ரூ. 2,48,075 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை முறையே ரூ. 1,38,041 மற்றும் ரூ. 1,55,227 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.டி.எம். டியூக் 250 பி.எஸ்.6 மாடலில் 248.8சிசி சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2,00,576 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் வரை நிறைவுற்ற காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,262 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,102 கோடியாக இருந்தது.
இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.7,640 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.7,436 கோடியாக இருந்தது. மொத்த லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ.1,406 கோடியாக உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 15 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 1,344 கோடியாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 1,172 கோடியாக இருந்தது.

விற்பனையை பொருத்தவரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 5.42 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 6.44 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 16 சதவீதம் சரிவாகும்.
வெளிநாட்டு சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 4.84 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. நான்காம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 73.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஜி.எல்.இ. 400டி எல்.டபுள்யூ.பி. விலை ரூ. 1.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் இந்த ஆண்டின் முதல் மெர்சிடிஸ் மாடாலாக 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் பத்து வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. மாடல் மெல்லிய வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. முன்புறம் ட்வின்-ஸ்லாட் க்ரோம் கிரில் மற்றும் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் டூயல் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொன்று தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்று செயல்படுகிறது. 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் MBUX கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஏர்மேடிக் ஏர் சஸ்பென்ஷன், முன்புற இருக்கைகளை எலெக்ட்ரிக் மூலம் இயக்கும் வசதி, பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஒன்பது ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட 245 பி.ஹெச்.பி. பவர் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 330 பி.ஹெச்.பி. பவர் 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் பி.எஸ்.6 செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா அமேஸ் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.எஸ்.6 அமேஸ் விலை ரூ. 6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 மாடல்களை விட பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 9000 மற்றும் ரூ. 17000 வரையிலும் ரூ. 27,000 மற்றும் ரூ. 51,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேஸ் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல்களில் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 110 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா பி.எஸ்.6 டீசல் மாடலில்: 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அம்சங்கள் தவிர புதிய காரில் ஹோண்டா எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை. ஹோண்டா அமேஸ் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 6.10 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளெஷர் பிளஸ் 110 பி.எஸ்.6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 பி.எஸ்.6 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 54,800 மற்றும் ரூ. 56,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளெஷர் பிளஸ் எஃப்.ஐ. பி.எஸ்.6 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய பிளெஷர் பிளஸ் பி.எஸ். 6 வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹெட்லைட்டிற்கு க்ரோம் சரவுண்ட், புதிய அலாய் வீல்கள், பக்கவாட்டில் ஹைலைட்கள் மற்றும் 3டி குரோம் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்கூட்டரில் 100 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் புதிய ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ஹீரோவின் எக்ஸ்.சென்ஸ் தொழில்நுட்பம் ஆகும்.

இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ். 6 என்ஜின் முந்தைய என்ஜினை விட 10 சதவீதம் கூடுதல் செயல்திறன் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பிளெஷர் பிளஸ் 110 பி.எஸ். 6 மாடல்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பி.எஸ். 6 ஸ்கூட்டர்கள்: ஸ்டீல் வீல் மற்றும் அலாய் வீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 54,800 மற்றும் ரூ. 56,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை: கிளாஸி பிளாக், கிளாஸி புளூ, கிளாஸ் ரெட், கிளாஸி வைட், மேட் ஆக்சிஸ் கிரே, மேட் கிரீன் மற்றும் மேட் ரெட் என ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் ஃபேஸ்லிஃப்ட் பி.எஸ்.6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வரும் டக்சன் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
2020 டக்சன் மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியான நிலையில், புதிய புகைப்படங்களில் இந்த கார் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரியவந்திருக்கிறது. இதன் டி.ஆர்.எல்.கள் பம்ப்பரில் உள்ள ஃபாக் லேம்ப் அருகில் பொருத்தப்படுகிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன.

இத்துடன் புதிய மற்றும் அகலமான கிரில் வழங்கப்படுகிறது. 2020 ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பக்கவாட்டில் மெஷின் கட் செய்யப்பட்ட மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. டெயில் லைட் மெல்லியதாகவும் முழுமையான எல்.இ.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் புளூ லிண்க் தொழில்நுட்பம், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, நேவிகேஷன் மற்றும் 3டி மேப்ஸ் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபினில் டூயல் டோன் டேஷ்போர்டு வழங்கப்படுகிறது.
புதிய டக்சன் மாடலிலும் பி.எஸ்.6 ரக 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 154 பி.ஹெச்.பி. பவர், 192 என்.எம். டார்க் மற்றும் 185 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: MotorBeam
லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய லம்போர்கினி காரின் விலை ரூ. 3.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் மாடலாக ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. வெளியாகி இருக்கிறது. இது ஸ்டான்டர்டு ஆல்-வீல் டிரைவ் மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்களை கொண்டிருக்கிறது.
அந்த வகையில் புதிய காரின் முன்புறம் ஸ்ப்லிட்டர், ஏர் இன்டேக் பகுதியில் கிடமைட்ட ஃபின்கள் மற்றும் பின்புறம் டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களும் மேம்பட்ட ஏரோடைனமிக்கள் மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அப்டேட்கள் தவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் உள்புறத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலின் கேபின் அல்கான்ட்ரா மற்றும் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பெர்ஃபார்மன்ஸ் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மற்ற ஹரிகேன் மாடல்களிலும் பயன்டுபத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 610 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 560 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு இவோ மாடலை விட 30 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 40 என்.எம். டார்க் செயல்திறன் குறைவாகும்.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. புதிய ரெனால்ட் க்விட் பி.எஸ்.6 மாடலின் துவக்க விலை ரூ. 2.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட்: எஸ்.டி.டி., ஆர்.எக்ஸ்.இ., ஆர்.எக்ஸ்.எல்., ஆர்.எக்ஸ்.டி. மற்றும் கிளைம்பர் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை பி.எஸ்.4 மாடல்களின் விலையை விட ரூ. 9000 வரை அதிகம் ஆகும். அந்த வகையில் புதிய பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.92 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.6 என்ஜின் தவிர புதிய க்விட் காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. புதிய ரெனால்ட் க்விட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்களை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் புதிய க்விட் காரில் அலாய் வீல் வடிவமைப்பு, மேம்பட்ட ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் கிளஸ்டர், 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பினபுற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடலில் 800சிசி என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 54 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜினில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சி.டி.100 பி.எஸ்.6 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 40,794 மற்றும் ரூ. 47,264 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன. இவை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. புதிய பிரத்யேக ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் பயன்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை பராமரிப்பது எளிமையாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய பஜாஜ் சி.டி.100 பி.எஸ்.6 மாடலில் 100 சிசி மற்றும் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சி.டி.110 மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய கடாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இதனை பஜாஜ் பேஷ் பிளேட் என அழைக்கிறது. சி.டி. பி.எஸ்.6 ரக மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை ரூ. 40,794 (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குவதால், நாட்டில் தற்சமயம் கிடைக்கும் குறைந்த விலை பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்களாக இவை இருக்கின்றன.
பஜாஜ் பிளாட்டினா பி.எஸ்.6 மாடல்களும் பிளாட்டினா 100 மற்றும் பிளாட்டினா 110 ஹெச் கியர் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 47,264 மற்றும் ரூ. 54,797 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






