search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ.
    X
    2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ.

    2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. இந்தியாவில் அறிமுகம்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. நான்காம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 73.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஜி.எல்.இ. 400டி எல்.டபுள்யூ.பி. விலை ரூ. 1.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் இந்த ஆண்டின் முதல் மெர்சிடிஸ் மாடாலாக 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் பத்து வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. மாடல் மெல்லிய வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. முன்புறம் ட்வின்-ஸ்லாட் க்ரோம் கிரில் மற்றும் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ.

    காரின் உள்புறம் டூயல் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொன்று தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்று செயல்படுகிறது. 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் MBUX கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஏர்மேடிக் ஏர் சஸ்பென்ஷன், முன்புற இருக்கைகளை எலெக்ட்ரிக் மூலம் இயக்கும் வசதி, பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஒன்பது ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட 245 பி.ஹெச்.பி. பவர் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 330 பி.ஹெச்.பி. பவர் 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×