என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்திய சந்தையில் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் லாபம் 5 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாடுகளை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அண்மைக் காலமாக இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை, வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை.
இந்நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,587 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 4.1 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,524 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.20,721 கோடியாக உள்ளது.

சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.19,680 கோடியாக இருந்தது. இதர வருவாய் ரூ.784 கோடியாக இருக்கிறது. மொத்த லாபம் 8.9 சதவீதம் உயர்ந்து ரூ.2,102 கோடியாக உள்ளது. வரிச் செலவினம் ரூ.441 கோடியாக இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம், டிசம்பர் காலாண்டில் மொத்தம் 4,37,361 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை விட இது 29 சதவீதம் உயர்வாகும். உள்நாட்டில் இதன் விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 4,13,698-ஆக இருக்கிறது. இதே காலத்தில் ஏற்றுமதி 23,663-ஆக உள்ளது.
நிசான் நிறுவனம் விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான், விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. ‘மேக் இன் இந்தியா மேக் ஃபார் இந்தியா’ திட்டத்தில் உருவாக்கப்படும் என நிசான் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையின் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நிசான் நிறுவனத்தின் புதிய மாடல் அதிக போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய எஸ்.யு.வி. மாடல் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிசான் சர்வதேச எஸ்.யு.வி. பாரம்பரியத்தை பின்பற்றி உருவாக்கப்படும் என நிசான் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய கார் நிசான் இன்டெலிஜன்ட் மொபிலிட்டியின் அங்கமாக அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த மாடலாக இருக்கும் என எதி்ர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்சமயம் கிக்ஸ், மைக்ரா, மைக்ரா ஆக்டிவ், சன்னி, டெரானோ மற்றும் ஜி.டி.-ஆர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நெக்சான் இ.வி. காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் நெக்சான் இ.வி. கார் துவக்க விலை ரூ. 13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெக்சான் இ.வி. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா நெக்சான் இ.வி.: எக்ஸ்.எம்., எக்ஸ்.இசட். பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். பிளஸ் லக்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் பல்வேறு அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஐ.சி.இ. சார்ந்த எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெக்சான் இ.வி. காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி நகரங்களில் முன்பதிவுகள் ஆன்லைன் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் மேற்கொள்ள முடியும்.

டாடா நெக்சான் மாடலில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது 129 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. நெக்சான் இ.வி. காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி நகரங்களில் நெக்சான் இ.வி. காரை சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் கட்டமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த காரை ஹோம் சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 60 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
டாடா நெக்சான் இ.வி. கார்: சிக்னேச்சர் டியல் புளூ, கிளேசியர் வைட் மற்றும் மூன்லைட் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 99,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சந்தா முறையில் பயன்படுத்தும் போது மட்டுமே பொருந்தும். ஸ்கூட்டருக்கான முழு தொகையை செலுத்தும் போது ஏத்தர் 450 எக்ஸ் துவக்க விலை ரூ. 1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏத்தர் 450 எக்ஸ்: பிளஸ் மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ப்ரோ வேரியண்ட் அதிகளவு அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட பேட்டரி பேக், சக்திவாய்ந்த மோட்டார், நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் மற்றும் டாப் ஸ்பீடு உள்ளிட்டவற்றை ப்ரோ வேரியண்ட் வழங்குகிறது.

புதிய ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 6kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 26 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரிலேயே 2.9kWh பேட்டரி ஆப்ஷனும் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலை விட 10 கிலோமீட்டர் அதிகம் ஆகும்.
ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும். இந்திய சந்தையில் அதிவேக ஸ்கூட்டராக ஏத்தர் 450 எக்ஸ் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஓபன் சோர்ஸ் ஆண்ட்ராய்டு மென்பொருள் மூலம் இயங்குகிறது. இதில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 212 குவாட் கோர் பிராஸர், 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி இ-சிம் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஏத்தர் 450 எக்ஸ் டேஷ்போர்டில் ஒ.டி.ஏ. அப்டேட்கள், பில்ட்-இன் நேவிகேஷன், லைவ் லொகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை வழங்குகிறது. புதிய 450 எக்ஸ் ஸ்கூட்டர்: கிரே, வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மூன்று நிறங்களும் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை அடிப்படையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம்பிடித்து இருப்பதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் மாத விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் மாருதி பலேனோ முதலிடம் பிடித்திருக்கிறது. இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18,465 பலேனோ கார்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 11,135-ஆக இருந்தது. டாப் 10 கார்கள் பட்டியலில் பலேனோ முதல் இடத்திற்கு முன்னேறியது.
மாருதி ஆல்டோ விற்பனை 38 சதவீதம் குறைந்து (25,121-ல் இருந்து) 15,489 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. மாருதி செடன் மாடலான டிசையர் கார் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்த கார் விற்பனை 15,286-ஆக குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 16,797 கார்களாக இருந்தது.

மாருதி ஸ்விஃப்ட் விற்பனை 14,749-ஆக அதிகரித்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 11,790-ஆக இருந்தது. இது நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 7-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த கார் விற்பனை (9,667-ல் இருந்து) 13,658-ஆக உயர்ந்துள்ளது.
மாருதி வேகன் ஆர் கார் விற்பனை 10,781-ஆக இருக்கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ கார் விற்பனை 9,521-ஆக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் 7-வது இடத்திற்கு வந்துள்ளது. மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ விற்பனை 8,394-ஆக இருக்கிறது. இந்த கார் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
எலைட் ஐ20 கார் விற்பனை 7,720-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 11,940-ஆக இருந்தது. இந்த கார் 9-வது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதியின் ஈகோ கார் விற்பனை 11 சதவீதம் குறைந்து (8,532-ல் இருந்து) 7,634-ஆக குறைந்து இருக்கிறது. இந்த கார் 10 இடத்தில் இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் ஆடம்பர ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். புதிய பிளாக் பேட்ஜ் எடிஷனில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய பிளாக் பெயின்ட், பிளாக்டு அவுட் எக்சாஸ்ட் பைப்கள், புதிய 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 பி.ஹெச்.பி. பவர், 900 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் ஆகும்.
ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எஸ்.யு.வி. மாடலாக கனினன் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கலினன் மாடல் 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் 2018 இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலின் துவக்க விலை ரூ. 6.95 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் அறிமுகம் செய்ததன் மூலம் நாட்டில் அதிக பி.எஸ்.6 மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது.
புத்தம் புதிய ஆல்டோ பி.எஸ்.6 மாடலில் தனித்தனியே இயங்கும் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்கள், இன்டெலிஜண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கார் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
ஆல்டோ பி.எஸ்.6 மாடல்களின் கைப்பிடிகள் கார் நிறத்துடன் ஒற்றுப்போகும் வகையில் இருக்கின்றன. இதேபோன்று பம்ப்பர்கள், வீல் கவர் உள்ளிட்டவையும் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் கைப்பிடிகளில் சில்வர் அக்சென்ட்கள் காணப்படுகின்றன.

மேலும் புதிய காரில் பவர் ஸ்டீரிங், முன்புறம் பவர் விண்டோக்கள், இன் ஸ்பீடோமீட்டர் கிளாக் டிஸ்ப்ளே, ரிமோட் பேக் டோர் ஓப்பனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு புதிய காரில் ஹெட்லைட் லெவலிங், என்ஜின் இம்மொபைலைசர், பின்புற கதவுகளை லாக் செய்யும் வசதி, முன்புறம் இரண்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புறம் பார்க்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளன.
ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடலில் 796சிசி, மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40 பி.ஹெச்.பி. பவர், 60 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸபீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல்: எல்.எக்ஸ்.ஐ. சி.என்.ஜி. மற்றும் எல்.எக்ஸ்.ஐ. (ஒ) சி.என்.ஜி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 4.32,700 மற்றும் ரூ. 4,36,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஐகியூப் எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூருவில் விற்பனைக்கு வரும் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. டி.வி.எஸ். ஐகியூப் ஸ்கூட்டர் முன்பதிவு கட்டணம் ரூ. 5000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் தேர்வு செய்யப்பட்ட டி.வி.எஸ். விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும்.

டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. டெயில்லைட்கள், இலுமினேட்டெட் லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எளிய வடிவமைப்பு கொண்டிருக்கும் டி.வி.எஸ். ஐகியூப் மாடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
இத்துடன் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் டி.வி.எஸ். ஐகியூப் ஸ்கூட்டரில் ரிமோட் சார்ஜிங் விவரங்கள், ஜியோ ஃபென்சிங், லாஸ்ட் பார்க் லொகேஷன், நேவிகேஷன் அசிஸ்ட், அழைப்புகள், குறுந்தகவல் அலெர்ட்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
டி.வி.எஸ். ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இது மணிக்கு அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் டியாகோ மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் சில வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், முன்புற பம்ப்பர், ஏர் டேம் மற்றும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள், பிளாக்டு அவுட் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர காரின் பக்கவாட்டுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டியாகோ மாடலில் புதிய டெயில் லைட்கள், பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மாடலில் பி.எஸ். 6 ரக 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

டிகோர் மாடலின் முன்புறம் மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பிலான ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொனெட் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
டிகோர் ஃபேஸ்லிஃப்ட் பக்கவாட்டில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. பின்புற டெயில்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டு, இருபுறங்களிலும் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டுள்ளன.
புதிய டிகோர் மாடலில் பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் வரைபடங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கான்செப்ட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கியா காம்பேக்ட் எஸ்.யு.வி. கான்செப்ட் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த கார் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
டீசரை பொருத்தவரை புதிய கார் எதிர்கால வடிவமைப்புகளில் கம்பீர தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டேடைம் லேம்ப்களை கொண்டிருக்கிறது.

முன்புற பம்ப்பர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.யு.வி.யின் ப்ரோடோடைப் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய எஸ்.யு.வி. காரில் யு.வி.ஒ. கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆட்டோமேடிக் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அம்பு குறி வடிவமைப்பில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட எல்.இ.டி. கிராஃபிக்ஸ், டெயில் லைட்கள், ஏர் டேமில் புதிய அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், கார்னெரிங் லேம்ப்கள், மழையை கண்டறிந்து இயங்கும் வைப்பர்கள், டையர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் தீம், ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே, புஷ் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், க்ரூயிஸ் கண்ட்ரோல், புதிய சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்: 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க், 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
பாதுகாப்பிற்கு நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் இரண்டு ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், அவசர கால பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஏ.பி.டி. மற்றும் இ.பி.டி., ஐசோபிஃபிக்ஸ் சைல்டு சீட் ஆன்க்கர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். (ஒ) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. புதிய பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 62,034 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள்: மோனோடோன் மற்றும் டூயல் டோன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் உயர் ரக டூயல் டோன் வேரியண்ட் விலை ரூ. 62,534 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடல்களின் விலையை விட ரூ. 7,600 வரை அதிகம் ஆகும்.

பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட கண்ணாடி, ஃபேரிங்கில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. மொபைல் சார்ஜர், பின்புறம் 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், டூயல் டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.7 என்.எம். டார்க் செயல்திறன், 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ். 6 மாடலின் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகளுடன் காம்பி பிரேக்கிங் தொழில்நுட்பம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.






