search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஏத்தர் 450 எக்ஸ்
    X
    ஏத்தர் 450 எக்ஸ்

    இந்தியாவில் ஏத்தர் 450 எக்ஸ் வெளியானது

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 99,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சந்தா முறையில் பயன்படுத்தும் போது மட்டுமே பொருந்தும். ஸ்கூட்டருக்கான முழு தொகையை செலுத்தும் போது ஏத்தர் 450 எக்ஸ் துவக்க விலை ரூ. 1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏத்தர் 450 எக்ஸ்: பிளஸ் மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ப்ரோ வேரியண்ட் அதிகளவு அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட பேட்டரி பேக், சக்திவாய்ந்த மோட்டார், நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் மற்றும் டாப் ஸ்பீடு உள்ளிட்டவற்றை ப்ரோ வேரியண்ட் வழங்குகிறது.

    ஏத்தர் 450 எக்ஸ்

    புதிய ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரில் 6kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 26 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரிலேயே 2.9kWh பேட்டரி ஆப்ஷனும் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலை விட 10 கிலோமீட்டர் அதிகம் ஆகும்.

    ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும். இந்திய சந்தையில் அதிவேக ஸ்கூட்டராக ஏத்தர் 450 எக்ஸ் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏத்தர் 450 எக்ஸ்

    இந்த ஸ்கூட்டரில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஓபன் சோர்ஸ் ஆண்ட்ராய்டு மென்பொருள் மூலம் இயங்குகிறது. இதில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 212 குவாட் கோர் பிராஸர், 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி இ-சிம் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    ஏத்தர் 450 எக்ஸ் டேஷ்போர்டில் ஒ.டி.ஏ. அப்டேட்கள், பில்ட்-இன் நேவிகேஷன், லைவ் லொகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை வழங்குகிறது. புதிய 450 எக்ஸ் ஸ்கூட்டர்: கிரே, வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மூன்று நிறங்களும் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×