search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்
    X
    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்

    இந்தியாவில் டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் வெளியானது

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஆட்டோமேடிக் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அம்பு குறி வடிவமைப்பில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட எல்.இ.டி. கிராஃபிக்ஸ், டெயில் லைட்கள், ஏர் டேமில் புதிய அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், கார்னெரிங் லேம்ப்கள், மழையை கண்டறிந்து இயங்கும் வைப்பர்கள், டையர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் தீம், ஏழு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே, புஷ் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், க்ரூயிஸ் கண்ட்ரோல், புதிய சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட்: 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க், 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    பாதுகாப்பிற்கு நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் இரண்டு ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், அவசர கால பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஏ.பி.டி. மற்றும் இ.பி.டி., ஐசோபிஃபிக்ஸ் சைல்டு சீட் ஆன்க்கர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். (ஒ) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×