search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆல்டோ பி.எஸ்.6
    X
    ஆல்டோ பி.எஸ்.6

    ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்த மாருதி சுசுகி

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. வேரியண்ட் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் அறிமுகம் செய்ததன் மூலம் நாட்டில் அதிக பி.எஸ்.6 மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது.

    புத்தம் புதிய ஆல்டோ பி.எஸ்.6 மாடலில் தனித்தனியே இயங்கும் எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்கள், இன்டெலிஜண்ட் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய கார் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.

    ஆல்டோ பி.எஸ்.6 மாடல்களின் கைப்பிடிகள் கார் நிறத்துடன் ஒற்றுப்போகும் வகையில் இருக்கின்றன. இதேபோன்று பம்ப்பர்கள், வீல் கவர் உள்ளிட்டவையும் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் கைப்பிடிகளில் சில்வர் அக்சென்ட்கள் காணப்படுகின்றன.

    ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி.

    மேலும் புதிய காரில் பவர் ஸ்டீரிங், முன்புறம் பவர் விண்டோக்கள், இன் ஸ்பீடோமீட்டர் கிளாக் டிஸ்ப்ளே, ரிமோட் பேக் டோர் ஓப்பனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு புதிய காரில் ஹெட்லைட் லெவலிங், என்ஜின் இம்மொபைலைசர், பின்புற கதவுகளை லாக் செய்யும் வசதி, முன்புறம் இரண்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புறம் பார்க்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளன.

    ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடலில் 796சிசி, மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40 பி.ஹெச்.பி. பவர், 60 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸபீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மாருதி சுசுகி ஆல்டோ பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல்: எல்.எக்ஸ்.ஐ. சி.என்.ஜி. மற்றும் எல்.எக்ஸ்.ஐ. (ஒ) சி.என்.ஜி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 4.32,700 மற்றும் ரூ. 4,36,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    Next Story
    ×