என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் பி.எஸ்.6 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார் சன்ரூஃப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.எஸ்.6 ஹேரியர் கார் டீசர் வீடியோ அந்நிறுவனத்தின் புதிய வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வில் ஒளிபரப்பட்டது.

    புதிய டீசரின் படி, மேம்பட்ட ஹேரியர் காரில் பி.எஸ்.6 என்ஜின் தவிர பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் முக்கியமானவையாக பானரோமிக் சன்ரூஃப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இதே அம்சங்கள் நிறைந்த பசார்டு ஸ்போர்ட் மாடல் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த மாற்றங்கள் டாப் எண்ட் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய டீசர் வீடியோவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் புதிதாக சிவப்பு நிறத்தில் உருவாகி இருப்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஹேரியர் மாடலின் உள்புறம் அதிநீவன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாடா  ஹேரியர் டீசர் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    என்ஜினை பொருத்தவரை தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இது தற்போதைய மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஹூண்டாயின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹேரியர் கார் எம்.ஜி. ஹெக்டார், கியா செல்டோஸ் மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    புகைப்படம் நன்றி: autocarindia
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் இசட்.எஸ். இ.வி. காரை வெளியிட்டது. இதன் எக்சைட் வேரியண்ட் துவக்க விலை ரூ. 20.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனினும், இசட்.எஸ். காரை வாங்க ஜனவரி 17-ம் தேதிக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கார் ரூ. 19.88 லட்சம் எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் எக்ஸ்குளுசிவ் வேரியண்ட் விலை ரூ. 23.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய வேரியண்ட் போன்றே எக்ஸ்க்ளுசிவ் வேரியண்ட்டை ஜனவரி 17-ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ. 22.58 லட்சம் விலையில் வழங்கப்படுகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார்

    முதற்கட்டமாக எம்.ஜி. இசட்.எஸ். கார்: டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நகரங்களின் சார்ஜிங் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்சிக்கு ஏற்ப வெளியீடு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். காரில் 44.5 kWh IP6 சான்று பெற்ற பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இது 141 பி.ஹெச்.பி. பவர், 353 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, டிசம்பர் 27-ம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவாகி இருக்கும் முதல் வாகனமாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. மேலும் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2. வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. 

    புதிய அல்ட்ரோஸ் காரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏழு இன்ச் அளவில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டிருக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் கார்: 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் முறையே 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 90 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த காருக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பாதுகாப்பிற்கென புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., கார்னெர் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், முன்புறம் இரண்டு ஏர்பேக், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், க்ரூயிஸ் கண்ட்ரோல், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ்: எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி. எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட். (ஒ) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கே.டி.எம். நிறுவனத்தின் 390 டியூக் மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    கே.டி.எம்.  நிறுவனத்தின் 390 டியூக் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் கே.டி.எம். விற்பனை மையங்களுக்கு வந்தடைந்துள்ளன. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    புதிய 390 டியூக் மோட்டார்சைக்கிள் டேன்க் எக்ஸ்டென்ஷன்களில் மேட் சில்வர் நிறம் காணப்படுகிறது. இத்துடன் ஃபியூயல் டேன்க் மேல்புறம், சப் ஃபிரேம், பின்புறம் மற்றும் முன்புற ஃபென்டர்களில் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இரண்டாவதாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. இதே நிறம் பி.எஸ்.4 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    கே.டி.எம். 390 டியூக்

    இரண்டு நிறங்கள் தவிர மோட்டார்சைக்கிளின் கிராஃபிக்ஸ் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறம் தவிர 390 டியூக் மோட்டார்சைக்கிளில் பை-டைரெக்‌ஷனல் க்விக்‌ஷிஃப்டர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் 390 அட்வென்ச்சர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

    புதிய கே.டி.எம். 390 டியூக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையாகும் பி.எஸ்.4 மாடலின் விலையை விட ரூ. 5000 வரை அதிகம் ஆகும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யு.வி. காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் K15B நான்கு சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பி.எஸ்.6 ரக வெர்ஷன் 104 பி.எஸ். மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படம்

    காஸ்மெடிக் மாற்றங்களுக்கென ஃபேஸ்லிஃப்ட் பிரெஸ்ஸா மாடல் பார்க்க சர்வதேச மாடலில் உள்ள வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பெரிய கிரில் மற்றும் ஆங்குலர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் புதிய ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் வாகனங்களுக்கு பி.எஸ்.6 அப்டேட் வழங்கும் நிறுவனங்களில் மாருதி சுசுகி துவக்கம் முதலே வேகம் காட்டி வருகிறது. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்நிறறுவனம் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பி.எஸ்.6 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது.

    புகைப்படம் நன்றி:  IndianAutosBlog
    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆரா சப்-காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 5.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான் மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் ஆரா காரில் கேஸ்கேடிங் கிரில், ட்வின் பூமராங் வடிவமைப்பில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கூர்மையான ஹெட்லேம்ப் மற்றும் ப்ரோஜெக்டர் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் ராப் அரவுண்ட் டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் டோன் டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா

    புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    பாதுகாப்பிற்கு ஹூண்டாய் ஆரா காரில் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், பின்புற பார்க்கிங் சென்சார்கள், கேமராக்கள், கீலெஸ் என்ட்ரி, ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆன்க்கர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஆரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் காரை வாங்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.



    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் காருக்கான முன்பதிவுகளை ஜனவரி 21-ம் தேதி துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 1410 பேர் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கியா கார்னிவல் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

    ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த காரின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு, அதன் பின் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கிறது. 

    கியா கார்னிவல்

    கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ்.6 அபாச்சி ஆர்.டி.ஆர். 160 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிளின் முன்புற டிஸ்க் மாடல் விலை ரூ. 93,500 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் பின்புற டிஸ்க் மாடல் ரூ. 96,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 5000 அதிகம் ஆகும்.

    புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 160 மாடலில் 159.7 சிசி, ஒற்றை சிலிண்டர் கொண்ட ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.3 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது பி.எஸ்.4 மாடலை விட 0.3 பி.ஹெச்.பி. மற்றும் 0.9 என்.எம். டார்க் அதிகம் ஆகும்.

    அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6

    ஆர்.டி.ஆர். 200 4வி மற்றும் ஆர்.டி.ஆர். 160 4வி மாடல்களை போன்று இந்த மாடலிலும் டி.வி.எஸ். நிறுவனத்தின் கிளைடு த்ரூ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் குறைந்த வேகத்திலும் சீராக பயணிக்க வழி செய்கிறது.

    வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படாமல், புதிய மோட்டார்சைக்கிளின் கிராஃபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது வாகனத்திற்கு புதிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் வழக்கமான ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 16 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 மாடலை டி.வி.எஸ். நிறுவனம்: கிளாஸ் ரெட், மேட் ரெட், பிளாக், வைட், கிரே மற்றும் புளூ என மொத்தம் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் நாடு முழுக்க இயங்கி வரும் டி.வி.எஸ். விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்துள்ளது.



    மாருகி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் பத்து பி.எஸ்.6 வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் புதுவரவு மாடலாக இகோ மினிவேன் இருக்கிறது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 75 சதவீத வாகனங்கள் தற்சமயம் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

    மாருதியின் அனைத்து பி.எஸ்.6 வாகனங்களும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதியின் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல்களில்: ஆல்டோ, இகோ, எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 உள்ளிட்டவை இருக்கின்றன.

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

    மாருதி நிறுவனம் தனது பெட்ரோல் என்ஜின்களை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது. இவற்றில் சிறிய ரக பி.எஸ்.6 என்ஜினாக 799சிசி, மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் இருக்கிறது. இந்த என்ஜின் ஆல்டோ 800 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது.

    இந்த என்ஜின் இகோ, ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இறுதியில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. 
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜனவரி 25-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    டி.வி.எஸ். நிறுவன சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய மோட்டார்சைக்கிளில் புத்தம் புதிய எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன்

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய 2020 ஸ்டார் சிட்டி பிளஸ் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    2020 டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் முன்புறம்  டெலிஸ்கோபிக் ஆயில் டேம்ப் செய்யப்பட்ட சஸ்பென்ஷனும், பின்புறம் ஐந்து நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படலாம். இது மோட்டார்சைக்கிளை நீண்டதூர பயணங்களுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    புதிய ஸ்டார் சிட்டி மாடலில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். செயல்திறனும், 8.7 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 செலரியோ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 மாடல் துவக்க விலை ரூ. 4.41 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய பி.எஸ்.6 காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே மெஷ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் ஹெட்லேம்ப் வரை நீள்கிறது. இத்துடன் கூர்மையான பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி செலரியோ ஹேட்ச்பேக் மாடலில் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் டோர் ஹேண்டிள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ORVM-கள் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீல், எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங், பின்புறம் 60:40 விகிதத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி செலரியோ உள்புறம்

    இதுதவிர ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுனருக்கு ஆட்டோ டவுன் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், சைல்டு ப்ரூஃப் பின்புற லாக், ஸ்டாப் லேம்ப்கள் உயரமாக பொருத்தப்பட்டுள்ளன.

    மாருதி செலரியோ மாடலில் 998சிசி, மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பி.எஸ். விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விநியோகம் செய்யப்படுகிறது.



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோகம் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள், அறிமுக சமயத்திலேயே துவங்கிவிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது.

    முதற்கட்டமாக ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள்: பெங்களூரு, ஆமதாபாத், ஐதராபாத், கொச்சி, சண்டிகர், பூனே, டெல்லி மற்றும் மும்பை என எட்டு நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான இரண்டாம் கட்ட விநியோக பணிகள் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டிரையம்ப் ராக்கெட் 3ஆர்

    ராக்கெட் 3ஆர் மாடல் 2,500 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய என்ஜின் 18 கிலோ எடை குறைவானது.

    மேலும் கிராங்க் கேஸ் அசெம்பிளி, லூப்ரிகேஷன் சிஸ்டம், பேலன்ஸ் ஷாஃப்ட் உள்ளிட்டவைகளின் எடையும் குறைந்ததால் ஒட்டுமொத்தமாக ராக்கெட் 3 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ வரை எடை குறைவாகும். இது முழுக்க முழுக்க மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மோட்டார்சைக்கிளின் செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை இதில் உள்ள கருவிகளே சரிபார்த்து வெளிப்படுத்தும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் தனித்துவமிக்கவை. முன்சக்கரத்தில் 320 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    ×