search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா  ஹேரியர்
    X
    டாடா ஹேரியர்

    சன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் பி.எஸ்.6 டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார் சன்ரூஃப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.எஸ்.6 ஹேரியர் கார் டீசர் வீடியோ அந்நிறுவனத்தின் புதிய வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வில் ஒளிபரப்பட்டது.

    புதிய டீசரின் படி, மேம்பட்ட ஹேரியர் காரில் பி.எஸ்.6 என்ஜின் தவிர பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவற்றில் முக்கியமானவையாக பானரோமிக் சன்ரூஃப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. இதே அம்சங்கள் நிறைந்த பசார்டு ஸ்போர்ட் மாடல் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    இந்த மாற்றங்கள் டாப் எண்ட் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய டீசர் வீடியோவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் புதிதாக சிவப்பு நிறத்தில் உருவாகி இருப்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஹேரியர் மாடலின் உள்புறம் அதிநீவன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாடா  ஹேரியர் டீசர் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    என்ஜினை பொருத்தவரை தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இது தற்போதைய மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஹூண்டாயின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் பி.எஸ்.6 ஹேரியர் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹேரியர் கார் எம்.ஜி. ஹெக்டார், கியா செல்டோஸ் மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    புகைப்படம் நன்றி: autocarindia
    Next Story
    ×