search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டி.வி.எஸ்.
    X
    டி.வி.எஸ்.

    இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 வெளியானது

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ்.6 அபாச்சி ஆர்.டி.ஆர். 160 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிளின் முன்புற டிஸ்க் மாடல் விலை ரூ. 93,500 (எக்ஸ்-ஷோரூம்) என்றும் பின்புற டிஸ்க் மாடல் ரூ. 96,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 5000 அதிகம் ஆகும்.

    புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 160 மாடலில் 159.7 சிசி, ஒற்றை சிலிண்டர் கொண்ட ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.3 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது பி.எஸ்.4 மாடலை விட 0.3 பி.ஹெச்.பி. மற்றும் 0.9 என்.எம். டார்க் அதிகம் ஆகும்.

    அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6

    ஆர்.டி.ஆர். 200 4வி மற்றும் ஆர்.டி.ஆர். 160 4வி மாடல்களை போன்று இந்த மாடலிலும் டி.வி.எஸ். நிறுவனத்தின் கிளைடு த்ரூ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் குறைந்த வேகத்திலும் சீராக பயணிக்க வழி செய்கிறது.

    வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படாமல், புதிய மோட்டார்சைக்கிளின் கிராஃபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது வாகனத்திற்கு புதிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் வழக்கமான ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 16 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 மாடலை டி.வி.எஸ். நிறுவனம்: கிளாஸ் ரெட், மேட் ரெட், பிளாக், வைட், கிரே மற்றும் புளூ என மொத்தம் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் நாடு முழுக்க இயங்கி வரும் டி.வி.எஸ். விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது.
    Next Story
    ×