search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிரையம்ப் ராக்கெட் 3ஆர்
    X
    டிரையம்ப் ராக்கெட் 3ஆர்

    இந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் விநியோகம் துவங்கியது

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விநியோகம் செய்யப்படுகிறது.



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோகம் துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள், அறிமுக சமயத்திலேயே துவங்கிவிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது.

    முதற்கட்டமாக ராக்கெட் 3ஆர் மோட்டார்சைக்கிள்: பெங்களூரு, ஆமதாபாத், ஐதராபாத், கொச்சி, சண்டிகர், பூனே, டெல்லி மற்றும் மும்பை என எட்டு நகரங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான இரண்டாம் கட்ட விநியோக பணிகள் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத வாக்கில் துவங்கும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டிரையம்ப் ராக்கெட் 3ஆர்

    ராக்கெட் 3ஆர் மாடல் 2,500 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய என்ஜின் 18 கிலோ எடை குறைவானது.

    மேலும் கிராங்க் கேஸ் அசெம்பிளி, லூப்ரிகேஷன் சிஸ்டம், பேலன்ஸ் ஷாஃப்ட் உள்ளிட்டவைகளின் எடையும் குறைந்ததால் ஒட்டுமொத்தமாக ராக்கெட் 3 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ வரை எடை குறைவாகும். இது முழுக்க முழுக்க மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மோட்டார்சைக்கிளின் செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை இதில் உள்ள கருவிகளே சரிபார்த்து வெளிப்படுத்தும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் தனித்துவமிக்கவை. முன்சக்கரத்தில் 320 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×