search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா கான்செப்ட் கார் வரைபடம்
    X
    கியா கான்செப்ட் கார் வரைபடம்

    புதிய கான்செப்ட் கார் வரைபடங்களை வெளியிட்ட கியா மோட்டார்ஸ்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் வரைபடங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கான்செப்ட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கியா காம்பேக்ட் எஸ்.யு.வி. கான்செப்ட் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த கார் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    டீசரை பொருத்தவரை புதிய கார் எதிர்கால வடிவமைப்புகளில் கம்பீர தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டேடைம் லேம்ப்களை கொண்டிருக்கிறது. 

    கியா கான்செப்ட் கார் வரைபடம்

    முன்புற பம்ப்பர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.யு.வி.யின் ப்ரோடோடைப் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய எஸ்.யு.வி. காரில் யு.வி.ஒ. கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×