search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி.
    X
    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி.

    இந்தியாவில் புதிய லம்போர்கினி கார் அறிமுகம்

    லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.



    லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய லம்போர்கினி காரின் விலை ரூ. 3.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் மாடலாக ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. வெளியாகி இருக்கிறது. இது ஸ்டான்டர்டு ஆல்-வீல் டிரைவ் மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்களை கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் புதிய காரின் முன்புறம் ஸ்ப்லிட்டர், ஏர் இன்டேக் பகுதியில் கிடமைட்ட ஃபின்கள் மற்றும் பின்புறம் டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களும் மேம்பட்ட ஏரோடைனமிக்கள் மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி.

    இந்த அப்டேட்கள் தவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் உள்புறத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலின் கேபின் அல்கான்ட்ரா மற்றும் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பெர்ஃபார்மன்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மற்ற ஹரிகேன் மாடல்களிலும் பயன்டுபத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 610 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 560 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு இவோ மாடலை விட 30 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 40 என்.எம். டார்க் செயல்திறன் குறைவாகும்.
    Next Story
    ×