search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி. ஹெக்டார்
    X
    எம்.ஜி. ஹெக்டார்

    இந்தியாவில் ஹெக்டார் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல் அறிமுகம்

    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் பி.எஸ்.6 காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எம்.ஜி. ஹெக்டார் பி.எஸ்.6 பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 12.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.4 மாடல்களுடன் ஒப்பிடும் போது பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 26,000 வரை அதிகம் ஆகும். விலை உயர்வு ஸ்டான்டர்டு மாடலில் துவங்கி பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட் வரை பொருந்தும். ஹெக்டார் காரின் பெட்ரோல் என்ஜின்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    எம்.ஜி. ஹெக்டார்

    இவற்றில் பேஸ் மாடலான ஸ்டைல் தவிர மற்ற வேரியண்ட்களில் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி. ஹெக்டார் பி.எஸ்.6 காரில் 1.5 லிட்டர் டர்போ யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது 143 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

    புதிய பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் தவிர பி.எஸ்.4 டீசல் என்ஜின் கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் மாடலில் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இது 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

    பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் தவிர ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 10.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெனட் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இ-சிம் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×