search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புதிய ஹூண்டாய் கிரெட்டா வரைபடம்
    X
    புதிய ஹூண்டாய் கிரெட்டா வரைபடம்

    ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் கிரெட்டா

    ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் புதிய தலைமுறை கிரெட்டா மாடல் காரை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய எஸ்.யு.வி. மாடல் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் ஐ.எக்ஸ்.25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் கிரெட்டா மாடல் கார் ஹூண்டாய் ஐ.எஸ்.25 பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் லேம்ப்கள், புதிய மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள், மேம்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறம் போன்றே உள்புறத்திலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா வரைபடம்

    அந்த வகையில் காரின் உள்புறத்தில் முழுமையான பிளாக் நிறத்தாலான இன்டீரியர் எதிர்பார்க்கலாம். இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹூண்டாயின் புளூ லின்க் கன்கெடிவிட்டி சூட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட் பெல்ட் ரிமைன்டர், பெடஸ்ட்ரியன் சேஃப்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், பல்வேறு ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆன்க்கர்கள் வழங்கப்படலாம்.

    புதிய 2020 ஹூண்டாயட் கிரெட்டா மாடலில் தற்போதைய மாடல்களில் உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்கள் பி.எஸ்.6 ரகத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×