என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்திய சந்தையில் 2020 ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில், ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் பின்வருமாறு:
ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இருசக்கரம், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 17,39,975- ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,19,253-ஆக இருந்தது. அந்த வகையில் விற்பனை ஏறக்குறைய 14 சதவீதம் குறைந்துள்ளது.
ஜனவரியில் 2,62,714 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,80,091-ஆக இருந்தது. விற்பனை 6.2 சதவீதம் குறைந்து இருக்கிறது. கார்கள் விற்பனை 8 சதவீதம் சரிந்து 1,64,793-ஆக உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் சரிவடைந்து 75,289- ஆக குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் விற்பனை 16 சதவீதம் குறைந்து (15,97,528-ல் இருந்து) 13,41,005-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து (10,27,766-ல் இருந்து) 8,71,886- ஆக குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 14 சதவீத சரிவை சந்தித்து 4,88,069 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை 6.63 சதவீதம் சரிந்து 3,74,114-ஆக உள்ளது. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் விற்பனை 29 சதவீதம் குறைந்து 1,63,007-ஆக சரிவடைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காருக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 எலைட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டது. இந்த கார் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐ20 எலைட் மாடல் ஜெனீவா சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த விழா மார்ச் 5-ம் தேதி துவங்கி மார்ச் 15 வரை நடைபெற இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் புதிய காருக்கான டீசரை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. டீசரின் படி புதிய காரின் முன்புறம் முழுக்க கேஸ்கேடிங் கிரில் வழங்கப்படுகிறது. இருபுறங்களிலும் பெரிய ஏர் வென்ட்களும், மேல்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பொனெட்டில் கேரக்டர் லைன்கள் இடம்பெற்றிருக்கிறது. இவை காருக்கு அதிரடியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதே போன்ற வடிவமைப்பு காரின் பக்கவாட்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

இத்துடன் காரில் கூப் மாடல்களில் உள்ளதை போன்ற ரூஃப்லைன் மற்றும் கூர்மையான சி பில்லர் வழங்கப்படும் என தெரிகிறது. பெரிய டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன. பின்புறம் கூர்மையான ஐரோப்பிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ராப்-அரவுண்ட் பம்ப்பர் வழங்கப்படுகிறது.
புதிய கார் டூயல் டோன் நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. உள்புறத்தில் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அம்சத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு விவரங்களை பி.எம்.டபுள்யூ. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் உள்ளிட்டவற்றில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 மாடலின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் மேம்பட்ட ஸ்டைலிங் செய்யப்படுகிறது. அந்த வகையில் முன்புறம் மேம்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. இது பி.எம்.டபுள்யூ. பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என தெரிகிறது.
இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள், புதிய முன்புற பம்ப்பர், புதிய எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் கூர்மையான கோடுகளை கொண்டிருக்கிறது. இவை தவிர காரின் பக்கவாட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பின்புறத்தில் புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், பெரிய எக்சாஸ்ட் அவுட்லெட்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகின்றது.
புதிய மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக 8.8 அன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்ஸ்1 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் மோட்டார் 192 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. டீசல் மோட்டார் 188 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புத்தம் புதிய பல்சர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. புதிய மோட்டார்சைக்கிள்- பல்சர் 150 மற்றும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பி.எஸ்.6 பஜாஜ் பல்சர் 150 மாடலில் பஜாஜ் நிறுவனம் தயாரித்த புதிய ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சீரான செயல்திறன் வழங்குவதோடு எரிபொருள் பயன்பாட்டையும் மேம்படுத்துகிறது. இதனை பராமரிப்பதும் எளிமையான விஷயம் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

பல்சர் 150 பி.எஸ்.6 மாடலில் 149.5சிசி சிங்கிள் சிலிண்டர் 4-ஸ்டிரோக், SOHC DTS-i என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13 பி.ஹெச்.பி. பவர், 13.25 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 31 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் கேஸ் ஃபில் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260 எம்.ம். டிஸ்க், பின்புறம் 130 எம்.எம். டிரம்/டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் 80/100-R17 டியூப்லெஸ் டையர்களும், பின்புறம் 100/90-R17 டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பஜாஜ் பல்சர் 150 மற்றும் 150 ட்வின் டிஸ்க் மாடல்கள்: பிளாக் குரோம் மற்றும் பிளாக் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ. 94,956 மற்றும் ரூ. 98,835 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டதில் அனைவரையும் கவர்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் விவரங்களை பார்ப்போம்.
ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தன. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனால்ட் மற்றும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்டவற்றின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அந்த வகையில் அனைவரையும் கவர்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

டாடா அல்ட்ரோஸ் இ.வி.
2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரோஸ் இ.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இது டாடா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். முன்னதாக டாடா டிகோர் இ.வி. மற்றும் நெக்சான் இ.வி. வாகனங்களை அறிமுகம் செய்தது.
புதிய அல்ட்ரோஸ் இ.வி. இந்தியாவின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகி இருக்கிறது. புதிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அந்த வகையில் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ.
ரெனால்ட் க்விட் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பாக ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ. கார் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கார் 2019 ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் கே-இசட்.இ. கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
க்விட் போன்றே ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ. மாடலும் சி.எம்.எஃப்.-ஏ. பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த கார் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 33 கிலோவாட் மோட்டார் 120 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது.
ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு இதனை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். ஸ்லோ சார்ஜிங் மோட் பயன்படுத்தினால் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

மஹிந்திரா இ.கே.யு.வி.100
2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-புரோடெக்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா இ.கே.யு.வி.100 தற்சமயம் வெளியாகி இருக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கிறது.

எம்.ஜி. மார்லவெல் எக்ஸ்
விஷன் இ கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள எம்.ஜி. மார்வெல் எக்ஸ் காரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரம்மாண்ட பம்ப்பர், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் க்ரோம் டீடெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் பிளஸ் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. மேலும் இது முந்தைய மாடலை விட 40 எம்.எம். நீளமாக இருக்கிறது.
எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டி.சி.டி. வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடல் வரும் வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஹெக்டார் பிளஸ் டாடா கிராவிடாஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 எர்டிகா சி.என்.ஜி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல் வி.எக்ஸ்.ஐ. வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி எர்டிகா அந்நிறுவனத்தின் இரண்டாவது பி.எஸ்.6 சி.என்.ஜி. வாகனமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாருதி சுசுகி ஆல்டோ காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களில் இ.சி.யு. மற்றும் இன்டெலிஜண்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகா பி.எஸ்.6 சி.என்.ஜி. மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பெட்ரோல் மோடில் 103 பி.ஹெச்.பி. பவர், சி.என்.ஜி. மோடில் 91 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
இத்துடன் பெட்ரோல் மோடில் 138 என்.எம். டார்க் மற்றும் சி.என்.ஜி. மோடில் 122 என்.எம். டார்க் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
கவாசகி நிறுவனத்தின் இசட்900 பி.எஸ்.4 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனம் இந்தியாவில் இசட்900 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய ஹார்டுவேர் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.4 ரக என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி ரூ. 9 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய மாடலின் ஹெட்லேம்ப் தற்சமயம் எல்.இ.டி. விளக்குகளை கொண்டிருக்கிறது. இத்துடன் 4.3 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் இசட்900 மாடலில் 948சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 98.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் மூன்று மோட் கொண்ட டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரிப்பர் டன்லப் ஸ்போர்ட்ஸ் மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியரா இ.வி. எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சியரா இ.வி. கான்செப்ட் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய காரை டாடா நிறுவனம் ஐ.சி.இ. மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சியரா மாடல் டாடா நெக்சான் மற்றும் ஹேரியர் மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. ஐ.சி.இ. வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எலெக்ட்ரிக் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் இ.வி. மாடலில் உள்ள மோட்டாரை பயன்படுத்தலாம். இந்த கார் 4.2 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலம் 1.7 மீட்டர் உயரம் மற்றும் 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்.ஜி. குளோஸ்டர் என அழைக்கப்படும் புதிய எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் பிரம்மாண்ட மாடலாக காட்சியளிக்கிறது.
காட்சிக்கு வைக்கப்பட்ட எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எம்.ஜி. குளோஸ்டர் விலை ரூ. 35 லட்சத்தில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இக்னிஸ் காரை அறிமுகம் செய்தது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் காரில் பி.எஸ்.6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கே12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பி.எஸ்.4 என்ஜினும் இதே அளவு செயல்திறனையே வழங்குகிறது.

இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய காரில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபாக்ஸ் மற்றும் ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்- லூசென்ட் ஆரஞ்சு, டர்கூஸ் புளூ என இறண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம்: நெக்சா புளூ மற்றும் பிளாக், லூசென்ட் ஆரஞ்சு மற்றும் பிளாக், நெக்சா புளூ மற்றும் சிலவர் என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் ஈவ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒடிசாவை சேர்ந்த எலெக்ட்ரிக் இரு வாகனங்களை உற்பத்தி செய்யும் ஈவ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்தது.
ஃபோர்செடி பெயரில் பாரம்பரிய வடிவமைப்பு கொண்ட ஸ்கூட்டர் ஒன்றும் டெசரோ பெயரில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் ஈவ் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இரு வாகனங்களும் பிரீமியம் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இரு வாகனங்களிலும் போஷ் நிறுவனத்தின் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார்களும், ஸ்வாப் செய்யக்கூடிய பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களையும் ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்திடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபோர்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

ஃபார்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் துவங்கும் என்றும் டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனை செப்டம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபார்செடி ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்லும்.
டெசரோ மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 90 முதல் 100 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லும். இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.






