என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சுசுகி நிறுவனத்தின் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் பி.எஸ்.6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
சுசுகி நிறுவனம் இந்தியாவில் பர்க்மேன் ஸ்டிரீட் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 77,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் பி.எஸ்.6 ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், என்ஜின் ஆன் / ஆஃப் செய்ய புதிய ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களில் உள்ளதை விட அதிக பிரகாசமாக இருக்கிறது.

புதிய ஸ்கூட்டரின் முன்புறம் குரோம் அக்சென்ட், க்ரோம் ஹைலைட்கள், விண்ட் ஸ்கிரீன், மேல்புறம் வடிவமைப்பு கொண்ட எக்சாஸ்ட் மஃப்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய டி.சி. எலெக்ட்ரிக் சாக்கெட் ஒன்றும் புதிய ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்கூட்டரில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 4 ஸ்டிரோக், ஒற்றை சிலிண்டர் 124 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 10 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதிலுள்ள ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் குளிர் காலத்திலும் ஸ்கூட்டரை மிக எளிதாக ஸ்டார்ட் ஆக செய்யும்.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 பி.எஸ்.6 மெட்டாலிக் மேட் போர்டாக்ஸ் ரெட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏற்கனவே உள்ள பியல் மிரேஜ் வைட், மேட் ஃபைப்ரொயின் கிரே, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களிலும் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் புத்தம் புதிய உள்புற வடிவமைப்பு கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா கார் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. சீனாவில் இந்த கார் ix25 எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் விற்பனையாகும் மாடலுக்கும் இந்திய மாடலுக்கும் உள்புறத்தில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முற்றிலும் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிரெட்டா காரில் உள்ள ஸ்டீரிங் வீல் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா போன்று காட்சியளிக்கிறது.

புதிய ஹூண்டாய் சொனாட்டா ஸ்டீரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மட்டும் சீன மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இதன் டேஷ்போர்டு மற்றும் ஏ.சி. வென்ட் வடிவமைப்பு பிரத்யேகமாக காட்சியளிக்கிறது. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஏ.சி. வென்ட்களின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. இது செல்டோஸ் மாடலில் உள்ளதை போன்று 10.25 இன்ச் யூனிட் வழங்கப்படலாம். இந்தியாவில் இந்த ஸ்கிரீன் கிடைமட்டமாக பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
புதிய கிரெட்டா இந்திய விலை மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய கிரெட்டா கார் கியா செல்டோஸ், நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர் மற்றும் எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
டொயோட்டா நிறுவனம் தனது புத்தம் புதிய பிரீமியம் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அசதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது பிரீமியம் எம்.பி.வி.- வெல்ஃபயர் கார் மாடலை இந்தியாவில் பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய வெல்ஃபயர் காரில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.
டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 180 பி.ஹெச்.பி. பவர், 235 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார், அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது அதிக இடவசதியை வழங்குவதோடு, பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், பின்புற கேமரா, ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை முதன்மை அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர பல்வேறு இதர அம்சங்களும் வழங்கப்படுகிறது.
டொயோட்டா வெல்ஃபயர் மாடல் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு அடுத்த நிலையில் நிறுத்தப்படும் என தெரிகிறது. அந்த வகையில் இது டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலாக வெளியாக இருக்கிறது. இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபயர் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 இக்னிஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 4.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இக்னிஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட் விலையும் ரூ. 4000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடல்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் சிக்மா வேரியண்ட் விலை ரூ. 9000 வரை அதிகம் ஆகும். டெல்டா வேரியண்ட் விலை ரூ. 25,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் ஆல்ஃபா வேரியண்ட் விலை ரூ. 4000 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 7.14 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது.
இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி கொரோனா வைரஸ் காரணமாக சரிவடைந்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உதிரிபாகங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி மாதத்திற்கு திட்டமிட்ட உற்பத்தியில் 10 சதவிதம் வரை குறையலாம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டாலும், விநியோகத்தில் எவ்வித சரிவும் ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சீன ஆலையில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து, எதிர்கால நடவடிக்கைகள் பற்றி திட்டமிடப்பட்டு வருவதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 52,15,413 யூனிட்களை உற்பத்தி செய்திருக்கிறது.
இதுதவிர ஹீரோ நிறுவனம் டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஸ்பிளென்டர் பிளஸ் மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து வருகிறது. இத்துடன் கரிஸ்மா மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது. மோசமான விற்பனை காரணமாக இருமாடல்களும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தோற்றம் கொண்ட மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்களின் படி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பார்க்க முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது.
தண்டர்பேர்டு போன்று காட்சியளித்தாலும் இதன் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லைட் புதுவித வடிவத்தில் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. தற்போதைய ராயல் என்ஃபீல்டு மாடல்களில் வட்ட வடிவம் கொண்ட டெயில் லைட் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீள்வட்ட வடிவம் கொண்டுள்ளது.

இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளின் டர்ன் இன்டிகேட்டர்களும் மோட்டார்சைக்கிளின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஒற்றை இருக்கை மற்றும் நீள்வட்ட டெயில் லேம்ப் பார்க்க தண்டர்பேர்டு எக்ஸ் மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
இதன் மஃப்ளர் கட்டையாக, மேல்புற வாக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இது ராயல் என்ஃபீல்டு வாகனங்களில் புதுமையான ஒன்றாக இருக்கிறது. இதேபோன்று கால் வைக்கும் பகுதியும் ராயல் என்ஃபீல்டு வழக்கத்திற்கு மாற்றாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃபியூயல் டேன்க் மற்ற மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. எனினும் இது சற்றே கீ்ழ்புறமாக பொருத்தப்பட்டுள்ளது.
மினி நிறுவனத்தின் புதிய கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மினி நிறுவனம் இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. இந்திய சந்தையில் இந்த கார் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த காரின் வெளிப்புறம் பியானோ பிளாக் அக்சென்ட்கள், முன்புற கிரிலில் மிரர் கேப்கள் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் சிறிதளவு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷனில் 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்.இ.டி. ரிங், பானரோமிக் கிளாஸ் ரூஃப், பியானோ பிளாக் ஹைலைட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், ப்ரோஜெக்ஷன் லேம்ப், மெமரி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் கார் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 530ஐ ஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 530ஐ ஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 530ஐ சென்னையில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலை 5 சீரிஸ் மாடலாக இருக்கிறது.
பி.எம்.டபுள்யூ. 530ஐ முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020 காரில் புதிய மேம்பட்ட பம்ப்பர், 17 இன்ச் அளவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், வெளிப்புறம் பிளாக் ட்ரிம், க்ரோம் டிப் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
காரின் உள்புறம் பெரிய 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்னிங், பிரீமியம் லெதர் இருக்கைகள் மற்றும் 12 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய காரில் பி.எஸ்.6 ரக 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 250 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டக்கூடியதாகும்.
இத்துடன் லான்ச் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்ஸ் ரியர் வீல் டிரைவ் மற்றும் நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள், டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல்: மினரல் வைட், பிளாக் சஃபையர், மெடிட்டரேனியன் புளூ மற்றும் புளூஸ்டோன் மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் விநியோகத்தை அடுத்த சில வாரங்களில் துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் என்.எஸ்.200 மாடலில் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் செய்து வந்தது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், மேம்பட்ட கேட்டலிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 199.5சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 23 பி.ஹெச்.பி. பவர், 18.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 மாடலின் அம்சம் மற்றும் வடிவமைப்பில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. புதிய வெர்ஷன் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் என்.எஸ்.200 விலை ரூ. 1.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பி.எஸ்.6 வெர்ஷனின் விலை ரூ. 10,000 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி, கே.டி.எம். டியூக் 200 மற்றும் யமஹா எஃப்.இசட். 25 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய வென்டோ காரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த தலைமுறை வென்டோ காம்பேக்ட் செடான் கார் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. இதில் காரின் வெளிப்புற தோற்றம் தெளிவாக காட்சியளிக்கிறது.
அந்த வகையில் புதிய வென்டோ காரின் பொனெட் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதில் மேம்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. ஹெட்லைட்கள், பெரிய ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

காரின் பின்புறம் புதிய டெயில் லைட்கள், பிரம்மாண்ட பம்ப்பர்கள், ஃபாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகிறது. புதிய வென்டோ மாடல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் பேனலும் புதிதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 8 இன்ச் அளவில் உருவாகி இருக்கும் மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். இதன் இருக்கை மேம்படுத்தப்பட்டு முன்புறம் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2020 வேகன் ஆர் எஸ் சி.என்.ஜி. மாடலை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் வேகன் ஆர் பி.எஸ். 6 எஸ் சி.என்.ஜி. காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. LXI எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கும் வேகன் ஆர் கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மூன்றாவது பி.எஸ். 6 மாடல் ஆகும்.
முன்னதாக ஆல்டோ 800 மற்றும் எர்டிகா எம்.பி.வி. மாடல்களை பி.எஸ்.6 தரத்தில் வெளியிட்டது. புதிய மாடலை மிஷன் கிரீன் மில்லியன் எனும் திட்டத்தின் கீழ் மாருதி சுசுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தியது.

மாருதி சுசுகி நிறுவனம் மிஷன் கிரீன் வாகனங்களின் கீழ் மைல்டு ஹைப்ரிட், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் மற்றும் சி.என்.ஜி. கார்கள் என அடுத்த சில ஆண்டுகளில் பத்து லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வேகன் ஆர் சி.என்.ஜி. மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சி.என்.ஜி. மோடில் 58 பி.ஹெச்.பி. பவர், 78 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் மோடில் 81 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்திய நிறுவனம் ஹோண்டா டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஹோண்டா நிறுவனத்தின் டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரின் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆக்டிவா பி.எஸ்.6 மாடலை விட விலை குறைவாகும்.
பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 20 காப்புரிமை விண்ணப்பங்களின் அடிப்படையில் புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் ஹோண்டாவின் 110சிசி PGM-FI (ஹோண்டா இகோ தொழில்நுட்பம்) ஹெச்.இ.டி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக மேம்பட்ட ஸ்மார்ட் பவர் வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச தரத்திற்கு இணையானது. இந்த தொழில்நுட்பம் வாகனத்தின் என்ஜின் சத்தத்தை குறைக்கிறது.

புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.
ஹோண்டா டியோ பி.எஸ்.6 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டான்டர்டு வேரியண்ட்- மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், கேண்டி ஜாஸ் புளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
டீலக்ஸ் வேரிண்ட்- மேட் சங்கிரா ரெட் மெட்டாலிக், டேசில் எல்லோ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹோண்டா டியோ பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 59,990 துவங்கி ரூ. 63,340 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






