என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 ஷைன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ஷைன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஹோண்டா ஷைன் விலை ரூ. 67,857 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹோண்டா ஷைன் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 8000 அதிகம் ஆகும். புதிய மாடலில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜினுடன் ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் டி.சி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா ஷைன் பி.எஸ்.6

    இந்த ஹெட்லேம்ப் மற்றும் பாஸ் அம்சங்கள் ஒரே ஸ்விட்ச்சில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளை சுற்றி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆறு வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. 2020 ஹோண்டா ஷைன் மோட்டார்சைக்கிள்- டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹோண்டா ஷைன்- பிளாக், கிரே, ரெட் மற்றும் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 
    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும் ஹெக்டார் பிளஸ் இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக 2019 ஜூன் மாதத்தில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் காரை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய ஹெக்டார் பிளஸ் மாடலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் அளவீடு விவரங்களை எம்.ஜி. மோட்டார் இதுவரை அறிவிக்கவில்லை, எனினும் இது சற்றே பெரியதாக காட்சியளிக்கிறது.

    எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்

    காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டி.சி.டி. வழங்கப்படுகிறது.
    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 2020 ஃபிகோ, ஆஸ்பையர், ஃபிரீஸ்டைல் பி.எஸ்.6 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ரக ஃபிகோ, ஆஸ்பையர் மற்றும் ஃபிரீஸ்டைல் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.39 லட்சம், ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 5.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய ஃபோர்டு ஃபிகோ பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 5.39 லட்சத்தில் துவங்குகிறது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 16,000 அதிகம் ஆகும். டாப் எண்ட் புளூ வேரியண்ட் விலை ரூ. 7.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2020 ஃபோர்டு ஆஸ்பையர்

    ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 8.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முந்தைய மாடல்களை விட முறையே ரூ. 2000 மற்றும் ரூ. 37,000 குறைவாகும்.

    இதேபோன்று ஃபோர்டு ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 4000 முதல் ரூ. 38000 வரை குறைந்திருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.37 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2020 ஃபோர்டு ஃபிரீஸ்டைல்

    மூன்று மாடல்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ்.6 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 119 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    புதிய மேம்பட்ட என்ஜின்களை தவிர புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் மாடல்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
    ஹூண்டாய் நிறுவனத்தன் பி.எஸ்.6 வென்யூ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் பி.எஸ்.6 வென்யூ டீசல் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் வென்யூ பி.எஸ்.6 டீசல் விலை ரூ. 8.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய வேரியண்ட் விலை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப ரூ. 20,000 முதல் ரூ. 55,000 வரை அதிகமாக நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் எண்ட் வென்யூ டீசல் வேரியண்ட் தற்சமயம் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் வென்யூ

    ஹூண்டாய் வென்யூ பி.எஸ்.6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் கியா செல்டோஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் டி-டியூன் செய்யப்பட்டு சற்றே குறைவான செயல்திறன் வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் இதுவரை பி.எஸ்.6 அப்டேட் பெறவில்லை. பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் விலை ரூ. 6.70 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 19,000 வரை அதிகமாகும்.

    1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 24,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.46 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் 125 சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித காஸ்மெடிக் அல்லது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பில் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. பி.எஸ்.6 மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லர் கேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சைடு ஸ்டான்டு, சர்வீஸ் இன்டிகேட்டர் விவரங்களை காண்பிக்கும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரில் ஐ3எஸ்- ஹீரோ ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம், ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி

    இந்த ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக 124.6சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. பவர், 10.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பி.எஸ்.4 மாடல் 9.1 பி.ஹெச்.பி. பவர், 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் வேரியண்ட் அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக் விலை ரூ. 67,950, இரண்டாவது வேரியண்ட் அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் விலை ரூ. 70,150 மற்றும் மூன்றாவது வேரியண்ட் அலாய் வீல், டிஸ்க் பிரேக் மற்றும் பிரத்யேக நிற வேரியண்ட் விலை ரூ. 70,650 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, சுசுகி அக்சஸ் 125, யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் மாடல் மார்ச் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை கிரெட்டா காரினை மார்ச் 17-ம் தேதி வெளியிட இருக்கிறது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வில் புதிய கார் வெளிப்புற தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியானது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் ஐ.எக்ஸ்.25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் கிரெட்டா மாடல் கார் ஹூண்டாய் ஐ.எஸ்.25 பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா

    புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் லேம்ப்கள், புதிய மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள், மேம்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    என்ஜினை பொருத்தவரை புதிய காரில் கியா செல்டோஸ் மாடலில் உள்ளதை போன்ற செயல்திறனை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் புதிய காரில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இத்துடன் 140 பி.ஹெச்.பி. வழங்கும் 1.4 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    மூன்று வெவ்வேறு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் டீசல் வேரியண்ட் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டிருக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. காருக்கான புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



    டொயோட்டா நிறுவனம் விரைவில் புதிய எஸ்.யு.வி. கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கார் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    டீசரின்படி புதிய டொயோட்டா கார் சிறிய எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. கார் அளவுகள் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், டெயில் லேம்ப்கள் மற்றும் பேட்ஜ்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எஸ்.யு.வி. டீசர்

    புதிய காரில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் டொயோட்டாவின் புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய கார் மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் டெயில் கேட் வரை நீளும் என கூறப்படுகிறது.

    முன்னதாக காரின் வரைபடத்தை மட்டும் டொயோட்டா வெளியிட்டது. அதில் காரின் பக்கவாட்டு பகுதி மட்டும் காணப்பட்டது. மேலும் இதில் ஃபிளாட் ரூஃப்லைன் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் புதிய கிராண்ட் ஐ10 பி.எஸ்.6 காரை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 கிராண்ட் ஐ10 மாடல் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10, வென்யூ மற்றும் எலைட் ஐ20 பி.எஸ்.6 மாடல்களுக்கான முன்பதிவு இம்மாத துவக்கத்தில் துவங்கியது. புதிய பி.எஸ்.6 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் மாடலில் 1.2 லிட்டர் கப்பா VTVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பி.எஸ்.6

    இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சி.என்.ஜி. வேரியண்ட்டும் கிடைக்கிறது. பி.எஸ்.6 கிராண்ட் ஐ10 மாடல்: மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் மேக்னா சி.என்.ஜி. என மூன்று மாடல்களில் கிடைக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் புதிய பேஷன் ப்ரோ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ பேஷன் பி.எஸ்.6 விலை ரூ. 64,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 மாடல்: டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 67,190 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஹீரோ பேஷன் ப்ரோ மாடலில் மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டெயில் பகுதி முந்தைய மாடல்களை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூயல் டேன்க் பெரியதாகவும், புதிய வடிவமைப்பு கொண்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6

    பேஷன் ப்ரோ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்: பிளாக், கிரே, எல்லோ மற்றும் ரெட் என புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய பேஷன் ப்ரோ மாடலில் பி.எஸ்.6 ரக 110சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 9.79 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 கார் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    2020 ஹூண்டாய் ஐ20 காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக புதிய காருக்கான வரைபடங்களை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    புதிய புகைப்படங்களின் படி ஹூண்டாய் ஐ20 கார் வெளிப்புறம் அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரில் வடிவமைப்பு அம்சங்கள் புதிதாக காட்சியளிக்கின்றன. முன்புறம் எல்.இ.டி. டி.ஆர்.எல்.-லைன் கொண்ட ஹெட்லைட்கள், பிளாக்டு அவுட், கேஸ்கேடிங் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    2020 ஹூண்டாய் ஐ20

    பக்கவாட்டில் டூயல் டோன் அலாய் வீல்கள், குரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் பெரிய டெயில் லைட்கள் இசட் வடிவம் எல்.இ.டி. கொண்டிருக்கின்றன. இத்துடன் பின்புறத்தின் ஒருபாதி முழுக்க பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பார்க்க ஐ20 போன்றே காட்சியளித்தாலும், பல்வேறு புதிய தனித்துவ அம்சங்களை கொண்டிருக்கிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார் விழாவில் புதிய சொரென்டோ எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்தது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார் விழாவில் புதிய சொரென்டோ எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை சொரென்டோ காரில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய காரில் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரீமியம் பொருட்களால் ஆன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய மாடல்களை போன்று புதிய மாடலிலும் அதிக இடவசதி இருப்பதை கியா மோட்டார்ஸ் உறுதி செய்திருக்கிறது.

    கியா சொரென்டோ

    இதன் கேபின் மெட்டாலிக் ரிம்களை கொண்டிருப்பதோடு, லெதர் இருக்கைகள், மரத்தாலான மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கனெக்டிவிட்டி, டிரைவர் அசிஸ்டண்ஸ் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சொரென்டோ மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ-விஷூவல் நேவிகேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 12.3 இன்ச் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய சியாஸ் கார் டீசல் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 விதிகள் அமலாகும் முன் தனது டீசல் கார்களின் விற்பனையை படிப்படியாக குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் மாருதி நிறுவனம் சியாஸ் டீசல் மாடல் காரின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது.

    மாருதி சுசுகி சியாஸ் காரில் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருந்தது. இவற்றில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் லிட்டர் யூனிட் வழங்கப்பட்டன. இவற்றுடன் முறையே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி சியாஸ்

    ஃபியாட் உருவாக்கிய 1.3 லிட்டர் டீசல் யூனிட் உற்பத்தி பணிகள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன. இந்த என்ஜின் இந்திய சந்தையில் தேசிய டீசல் என்ஜினாக பார்க்கப்பட்டது. இதே என்ஜின் ஐந்து கார் தயாரிப்பு நிறுவனங்களின் சுமார் 24 கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சியாஸ் செடான் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் விற்பனை செய்யப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எஸ் கிராஸ் உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் டாப் எண்ட் மாடல் ரூ. 10.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் வரும் வாரங்களில் புதிய எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    ×