என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளினை ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் விலை ரூ. 1,91,751 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலின் விலையை விட ரூ. 1750 அதிகம் ஆகும்.

    பஜாஜ் டாமினர்

    புதிய டாமினர் 400 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகளவு மேம்படுத்தப்பட்டு புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் டாமினர் 400 மாடலில் DOHC ரக என்ஜின், ஸ்ப்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இன்வெர்ட்டெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டன.

    பி.எஸ்.6 டாமினர் 400 மாடலின் மெக்கானிக்கல் மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது பி.எஸ்.4 மாடலில் இருப்பதை போன்ற என்ஜினே வழங்கப்படலாம். தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 டாமினர் 400 மாடலில் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர பஜாஜ் நிறுவனம் டாமினர் பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலில் சற்றே மெல்லிய டையர்கள், பட்ஜெட் ரக ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
    மசராட்டி நிறுவனம் புத்தம் புதிய மிட் என்ஜின் சூப்பர் காரை உருவாக்கி வருகிறது. இதன் பெயர் விவரங்களை பார்ப்போம்.



    மசராட்டி நிறுவனம் புதிதாக மிட் என்ஜின் சூப்பர் கார் ஒன்றை எம்.சி.20 என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. எம்.சி.20 சூப்பர்கார் ப்ரோடோடைப் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய எம்.சி்.20 கார் டிரைடென்ட் மசராட்டி இன்னோவேஷன் ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது. இதன் தயாரிப்பு பணிகள் அந்நிறுவனத்தின் வியா சிரோ மெனோட்டி ஆலையில் நடைபெற இருக்கிறது. புதிய சூப்பர் காரின் பெயர் விரிவாக்கம் மசராட்டி கோர்ஸ் ஆகும். இதிலுள்ள 20 எனும் எண் 2020 ஆண்டினை குறிக்கிறது.

    மசராட்டி எம்.சி.20

    எம்.சி.20 கார் மூலம் மசராட்டி நிறுவனம் சர்வதேச மோட்டார்ஸ்போர்ட் துறையில் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் ஜி.டி. வெர்ஷன் கார் ஜி.டி.1 சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். புதிய காரின் என்ஜின் விவரங்கள் தற்சமயம் அறியப்படவில்லை.

    எனினும், புதிய காரில் மேம்பட்ட எலெக்ட்ரிக் பவர்டிரெயினுடன் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன் ஒன்றும் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    புதிய ஹீரோ இ மேஸ்ட்ரோ கான்செப்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் கான்செப்ட் மாடலின் தோற்றம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. விற்பனைக்கு வரும் பட்சத்தில் சக்திவாந்த லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

    இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டுகள் தனித்தனியே இயங்கி வாகனங்களை உருவாக்கி வருகின்றன. ஹீரோ இ மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹீரோ பிராண்டின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவுக்கான ஆலையில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தற்சமயம் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது முற்றிலும் மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா காரை வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் காரை அறிமுகம் செய்தது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 7.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 1.5 லிட்டர் K சீரிஸ் யூனிட் ஆகும். இதே என்ஜின் சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் டாப் எண்ட் மாடல்களில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய பெட்ரோல் என்ஜின் தவிர மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பி.எஸ்.6

    அந்த வகையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், டெயில் லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய முன்புற கிரில், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல்: சிஸ்லிங் ரெட் / மிட்நைட் பிளாக், கிரானைட் கிரே / ஆட்டம் ஆரஞ்சு மற்றும் டார்க் புளூ / மிட்நைட் பிளாக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர டார்க் புளூ, கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஆட்டம் ஆரஞ்சுஸ பிரீமியம் சில்வர் மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் நிறங்களிலும் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் ஸ்டீரிங் வீல் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்டு, ஆட்டோ டிம்மிங் IRVMகள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவி்ட்டி கொண்டிருக்கிறது.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் டைகர் 900 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டைகர் 900 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடல் டாப் எண்ட் ஜி.டி. ப்ரோ மற்றும் ரேலி ப்ரோ வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் தெரிகிறது.

    இரு வேரியண்ட்களிலும் மார்சொகி சஸ்பென்ஷன் யூனிட்கள் மற்றும் ஷோவா சஸ்பென்ஷன் யூனிட்கள் வழங்கப்படலாம். இரு மாடல்களிலும் பிரெம்போ ஸ்டைலிமா கேலிப்பர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே கேலிப்பர்கள் டுகாட்டி பேணிகேல் வி4 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஐ.எம்.யு. சார்ந்த ஏ.பி.எஸ். சிஸ்டம்கள், கான்டினென்ட்டல், பை டைரெக்‌ஷனல் குவிக் ஷிஃப்டர் மற்றும் ஆறு டிரைவிங் மோட்கள்- ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோடு மற்றும் ஆஃப் ரோடு ப்ரோ கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    டிரையம்ப் டைகர் 900

    புதிய என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய டிரையம்ப் டைகர் 800 மாடல்களின் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் டைகர் 800 மாடல்களின் விலை ரூ. 12 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் கிடைக்கின்றன. முன்னதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ இணைந்து புதிய 200 சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் லீக் ஆகி இருக்கின்றன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    2020 மஹிந்திரா தார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கன்றன. புதிய கார் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    2020 மஹிந்திரா தார்

    ஸ்பை படங்களின் படி புதிய தார் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த கார் பார்க்க மினி ராங்ளர் போன்றும் காட்சியளிக்கிறது. 2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது.

    தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளித்தாலும், அளவில் பெரியதாக தெரிகிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவம் ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது. 

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



    2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய டிகுவான் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக் காரையும் அறிமுகம் செய்தது.

    தற்சமயம் புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இந்தியாவில் ஹோண்டா சி.ஆர்.-வி, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

    புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 டி.எஸ்.ஐ. என்ஜின், 187 பி.ஹெச்.பி., 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கிறது. இத்துடன் புதிய காரில் 4 மோஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.  

    ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் ஒரே வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மாற்றங்களின் படி பெரிய ஸ்பாயிலர், கிளாஸி பிளாக் ஷேட், பின்பற பம்ப்பர் மற்றும் கிளாஸி பிளாக் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்புறம் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்சமயம் டிகுவான் எஸ்.யு.வி. விலை ரூ. 28.07 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 31.46 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் கார் இந்திய முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. கார் 50,000-க்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எம்.ஜி. ஹெக்டார் மாதம் 3,000 யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.

    அறிமுகமானதும் புதிய காருக்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுத்தியது. மேலும் இந்தியாவில் இதுவரை 20,000 எம்.ஜி. ஹெக்டார் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    எம்.ஜி. ஹெக்டார் மட்டுமின்றி 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்தது. இந்த எஸ்.யு.வி. மாடல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் எம்.ஜி. குளோஸ்டர் மாடலும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 விலை ரூ. 64,310 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இது இந்தியாவில் விலை குறைந்த 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    ஹீரோ டெஸ்டினி 125: எல்.எக்ஸ். மற்றும் வி.எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. வி.எக்ஸ். வேரியண்ட் விலை ரூ. 66,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்களிலும் ஒரே என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்திறன் மற்றும் எரிபொருள் பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    ஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6

    புதிய ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம். மற்றும் 10.4 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பி.எஸ்.4 என்ஜினை விட 0.2 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.

    இதுதவிர புதிய டெஸ்டினி பி.எஸ்.6 ஸ்கூட்டர் முந்தைய மாடலை விட 11 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெட்டெட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களை தவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டெக்ஸ்ச்சர் சீட்கள், அலாய் வீல்கள், குரோம் அக்சென்ட்கள், மொபைல் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 சர்வதேச அளவில் பாதுகாப்பிற்கு உயரிய விருதை வென்று இருக்கிறது.



    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 கார் சர்வதேச சந்தையில் பாதுகாப்பு விருப்பத்திற்கான பிரிவில் குளோபல் NCAP விருது வென்று இருக்கிறது. இந்த விருதினை பெறும் முதல் இந்திய கார் என்ற பெருமையை மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 அடைந்திருக்கிறது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் முறையே ஐந்து மற்றும் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றுள்ளது.

    எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் அம்சம் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த அம்சம் ஆப்ஷனலாக வழங்கப்பட்டு இருந்தால், அனைத்து வேரியண்ட்களிலும் தனியே ஆட்-ஆன் போன்று வழங்க வேண்டும். மேலும் இதனை ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதவீதம் யூனிட்கள் விற்பனை செய்ய வேண்டும்.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    தகுதியுள்ள கார்கள் பாதசாரிகள் பாதுகாப்பு தரத்தினை உறுதி செய்யும் ஐக்கிய நாடுகள் விதிமுறைகள் யு.என்.127 அல்லது ஜி.டி.ஆர்.9 உள்ளிட்ட சோதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மற்ற பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது. 

    டாப் எண்ட் டபுள்யூ8 (ஒ) மாடலில் ஏழு ஏர்பேக்குகள், ஏ.பி.எஸ்., கார்னெர் பிரேக்கிங் கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சைல்டு ஆன்க்கர்கள், இ.எஸ்.சி., காரில் அமரும் அனைவருக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், முன்புறம் பார்க்கிங் சென்சார்கள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 கார் பாதுகாப்பு விருப்பத்திற்கான விருதை வென்று இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. கூப் எஸ்.யு.வி. மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுறது. இது பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட்

    இந்தியாவில் ஜி.எல்.சி. கூப் மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக இந்த காரின் ஏ.எம்.ஜி. வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் 2 பெட்ரோல் மற்றும் 3 டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இதன் 200 4மேடிக் என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 300 4மேடிக் என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 163 பி.ஹெச்.பி. முதல் 245 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

    கூப் எஸ்.யு.வி. மாடலில் டைமண்ட் பேட்டன் கிரில், ஃபிளான்க்டு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பறம் புதிய டிஃப்யூஸர், ஆங்குலர் எக்சாஸ்ட் டிப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 டக்சன் காருக்கான முன்பதிவு துவங்கியது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் தனது டக்சன் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த காரின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஹூண்டாய் டக்சன் முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் டக்சன் மாடலின் வெளிப்புறம் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு, பென்டா எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட் யூனிட்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் டைமண்ட் கட் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் 10 வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், புளூ லின்க் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜிங், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ராய்டு ஆட்டோ, ஹூண்டாய் ஐபுளூ மற்றும் வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஹூண்டாய் டக்சன்

    2020 ஹூண்டாய் டக்சன் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 182 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இதுதவிர 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர், 192 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்த வேரியண்ட்டிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் 2020 ஹூண்டாய் டக்சன் விலை ரூ. 19 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×