search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்.ஜி. ஹெக்டார்
    X
    எம்.ஜி. ஹெக்டார்

    முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் கார் இந்திய முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. கார் 50,000-க்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எம்.ஜி. ஹெக்டார் மாதம் 3,000 யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.

    அறிமுகமானதும் புதிய காருக்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த காருக்கான முன்பதிவுகளை எம்.ஜி. மோட்டார் நிறுத்தியது. மேலும் இந்தியாவில் இதுவரை 20,000 எம்.ஜி. ஹெக்டார் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

    எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    எம்.ஜி. ஹெக்டார் மட்டுமின்றி 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்தது. இந்த எஸ்.யு.வி. மாடல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் எம்.ஜி. குளோஸ்டர் மாடலும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×