search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி சியாஸ்
    X
    மாருதி சுசுகி சியாஸ்

    புதிய மாருதி சுசுகி கார் விற்பனை நிறுத்தம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய சியாஸ் கார் டீசல் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 விதிகள் அமலாகும் முன் தனது டீசல் கார்களின் விற்பனையை படிப்படியாக குறைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் மாருதி நிறுவனம் சியாஸ் டீசல் மாடல் காரின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது.

    மாருதி சுசுகி சியாஸ் காரில் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருந்தது. இவற்றில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் லிட்டர் யூனிட் வழங்கப்பட்டன. இவற்றுடன் முறையே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி சியாஸ்

    ஃபியாட் உருவாக்கிய 1.3 லிட்டர் டீசல் யூனிட் உற்பத்தி பணிகள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டன. இந்த என்ஜின் இந்திய சந்தையில் தேசிய டீசல் என்ஜினாக பார்க்கப்பட்டது. இதே என்ஜின் ஐந்து கார் தயாரிப்பு நிறுவனங்களின் சுமார் 24 கார் மாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சியாஸ் செடான் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் விற்பனை செய்யப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எஸ் கிராஸ் உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ் டாப் எண்ட் மாடல் ரூ. 10.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் வரும் வாரங்களில் புதிய எஸ் கிராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    Next Story
    ×