search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இக்னிஸ்
    X
    இக்னிஸ்

    இந்தியாவில் இக்னிஸ் பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 இக்னிஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இக்னிஸ் பி.எஸ்.6 மாடல் விலை ரூ. 4.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய இக்னிஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட் விலையும் ரூ. 4000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடல்: சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் சிக்மா வேரியண்ட் விலை ரூ. 9000 வரை அதிகம் ஆகும். டெல்டா வேரியண்ட் விலை ரூ. 25,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் ஆல்ஃபா வேரியண்ட் விலை ரூ. 4000 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 7.14 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இக்னிஸ்

    புதிய மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. 

    இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×