search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எலெக்ட்ரிக் வாகனங்கள்
    X
    எலெக்ட்ரிக் வாகனங்கள்

    2020 ஆட்டோ எக்ஸ்போவில் அசத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள்

    ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டதில் அனைவரையும் கவர்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் விவரங்களை பார்ப்போம்.



    ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்தன. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனால்ட் மற்றும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்டவற்றின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அந்த வகையில் அனைவரையும் கவர்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். 

     டாடா அல்ட்ரோஸ் இ.வி.

    டாடா அல்ட்ரோஸ் இ.வி.

    2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரோஸ் இ.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இது டாடா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். முன்னதாக டாடா டிகோர் இ.வி. மற்றும் நெக்சான் இ.வி. வாகனங்களை அறிமுகம் செய்தது. 

    புதிய அல்ட்ரோஸ் இ.வி. இந்தியாவின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக வெளியாகி இருக்கிறது. புதிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அந்த வகையில் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

     ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ.

    ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ.

    ரெனால்ட் க்விட் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பாக ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ. கார் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கார் 2019 ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் கே-இசட்.இ. கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    க்விட் போன்றே ரெனால்ட் சிட்டி கே-இசட்.இ. மாடலும் சி.எம்.எஃப்.-ஏ. பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த கார் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 33 கிலோவாட் மோட்டார் 120 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. 

    ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு இதனை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். ஸ்லோ சார்ஜிங் மோட் பயன்படுத்தினால் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

    மஹிந்திரா இ.கே.யு.வி.100

    மஹிந்திரா இ.கே.யு.வி.100

    2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-புரோடெக்‌ஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா இ.கே.யு.வி.100 தற்சமயம் வெளியாகி இருக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கிறது. 

     எம்.ஜி. மார்லவெல் எக்ஸ்

    எம்.ஜி. மார்லவெல் எக்ஸ்

    விஷன் இ கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள எம்.ஜி. மார்வெல் எக்ஸ் காரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிரம்மாண்ட பம்ப்பர், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் க்ரோம் டீடெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×