என் மலர்

  ஆட்டோமொபைல்

  ஈவ் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்கள்
  X
  ஈவ் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்கள்

  இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட்ட ஈவ் இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் ஈவ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.  ஒடிசாவை சேர்ந்த எலெக்ட்ரிக் இரு வாகனங்களை உற்பத்தி செய்யும் ஈவ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்தது.

  ஃபோர்செடி பெயரில் பாரம்பரிய வடிவமைப்பு கொண்ட ஸ்கூட்டர் ஒன்றும் டெசரோ பெயரில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் ஈவ் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இரு வாகனங்களும் பிரீமியம் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இரு வாகனங்களிலும் போஷ் நிறுவனத்தின் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட மோட்டார்களும், ஸ்வாப் செய்யக்கூடிய பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

  ஃபார்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

  இரண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களையும் ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்திடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஃபோர்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

  டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

  ஃபார்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாத வாக்கில் துவங்கும் என்றும் டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனை செப்டம்பரில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபார்செடி ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்லும்.

  டெசரோ மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 90 முதல் 100 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லும். இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. 
  Next Story
  ×