என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    புதிய கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிளில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடலில் 2020 கே.டி.எம். சூப்பர் டியூக் ஆர் மாடலில் உள்ள அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    மேலும் புதிய டியூக் மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் டிரெலிஸ் ஃபிரேம் மாற்றப்பட்டு இருக்கிறது. 2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. மாடலின் பின்புறம் புதிய சப்-ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மாடலில் சூப்பர் டியூக் ஆர் மாடலில் உள்ள ஸ்விங் ஆம் பயன்படுத்தப்படுகிறது. 

    2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. ஸ்பை படம்

    இதன் சக்கரங்கும் சூப்பர் நேக்கட் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. மேலும் இதில் பைரெலி ஏஞ்சல் ஜி.டி. ரக டையர்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 5 அங்குல டி.எஃப்.டி. லே-அவுட் வழங்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    புதிய கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA விழாவில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பாவில் இந்த மோட்டார்சைக்கிள் 2021 ஆண்டு வாக்கில் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் கார் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் என்ட்ரி லெவல் ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடல் ரெனகேடு ஆஃப்-ரோடு எஸ்.யு.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எஸ்.யு.வி. மாடலில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஜீப் காம்பஸ்

    ஆஃப்-ரோடு வசதியை வழங்கும் நோக்கில், புதிய ஜீப் மாடலில் டிரையல் ரேட்டெட் பேட்ஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ஃபியாட் நிறுவனத்தின் 4-வீல் டிரைவ் சிஸ்டம், லோ-ரேஷியோ கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் ஜீப் பிராண்டின் ஆஃப்-ரோடிங் டி.என்.ஏ. வழங்கப்படுவதோடு, அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான அம்சங்களும் வழங்கப்படும் என ஐரோப்பாவிற்கான ஜீப் நிறுவன விளம்பர பிரிவு தலைவர் மார்கோ பிஜோஸி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

    மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் புதிய ஜீப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுதவிர பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாகவும் இந்த எஸ்.யு.வி. அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ்களின் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. 

    ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்ள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், இந்த அறிவிப்பினை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது. 

    ஃபோக்ஸ்வேகன் கார்

    ஊரடங்கு உத்தரவின் போது, வாகனத்தின் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் உள்ளிட்டவற்றை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அந்த வகையில் மார்ச் 22 முதல் மே மாதம் வரை ஸ்டாண்டர்டு வாரண்டி நிறைவுபெறும் வாடிக்கையாளர்கள் ஜூலை 31, 2020 வரை வாரண்டியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை ஸ்டாண்டர்டு வாரண்டியின் கீழ் கட்டணமின்றி சரிசெய்து கொள்ள முடியும்.

    மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி நிறைவுறும் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு மே 15 ஆம் தேதிக்குள் சென்று நீட்டிக்கப்பட்ட வாரண்டியின் கீழ் வாகனங்களை சரி செய்து கொள்ளலாம். 
    கவாசகி நிறுவனத்தின் ZX-25R மோட்டார்சைக்கிளின் சர்வதேச வெளியீட்டு தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கவாசகி ZX-25R ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் 2019 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கவ்ர்ச்சிகர வடிவமைப்பு மற்றும் இன்-லைன் 4 பவர்டிரெயின் உள்ளிட்ட அம்சங்களால் அதிக கவனத்தை ஈர்த்தது. 

    கவாசகி ZX-25R வெளியீடு

    கவாசகி ZX-25R மோட்டார்சைக்கிளில் 249சிசி, லிக்விட் கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் பற்றி அதிக விவரங்கள் இல்லாத நிலையில், இது அதிகபட்சமாக 40 பி.ஹெச்.பி. வரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் குவிக்ஷிஃப்டர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காவசகி ZX-25R மோட்டார்சைக்கிளில் ட்வின்-பாட் ஹெட்லேம்ப்கள், ஃபுல் ஃபேரிங், டூயல் டோன் பெயின் ஸ்கீம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பிரம்மாண்ட டேன்க், அன்டர்பெல்லி எக்சாஸ்ட், லோ செட் க்ளிப் ஆன் ஹேன்டிள்பார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சஸ்பென்ஷனிற்கு முன்பும் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஷோவா செப்பரேட் ஃபன்ஷன் ஃபோர்க்குகளும், பின்புறம் ஹாரிசாண்ட்டல் பேக்-லிண்க் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ விழா நடைபெற இருந்த பகுதியை மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ விழா டெட்ராயிட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய மற்றும் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. 

    ஃபோர்டு கார்

    இந்த ஆண்டிற்கான விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதால், 2021 ஜூன் மாத வாக்கில் டெட்ராயிட் ஆட்டோ விழா நடைபெற இருக்கிறது. வழக்கமாக ஜனவரி மாத  வாக்கில் நடத்தப்பட்டு வந்த டெட்ராயிட் ஆட்டோ விழா சமீபத்தில் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. 

    முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்விழா ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ விழா நடைபெற இருந்த ஜாவிட்ஸ் கன்வென்ஷன் சென்ட்டர் தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2020 செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ்.6 ரக செலரியோ எக்ஸ் ஹேட்ச்பேக் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 காரின் துவக்க விலை ரூ. 4.9 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 மாடல் - VXi, VXi (O), ZXi மற்றும் ZXi (O) என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களின் விலையிலும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ்பி.எஸ்.6

    தோற்றத்தில் புதிய 2020 மாருதி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 மாடல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், இது இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் பல்வேறு பிரகாசமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய செலரியோ எக்ஸ் மாடலிலும் 1.0 லிட்டர் கே சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிலிண்டர் என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மாடலில் பிளாக்டு-அவுட் கேபின், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி. வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ். இ.பி.டி., ஹை ஸ்பீடு வார்னிங் மற்றும் பெடஸ்ட்ரியன் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் நிசான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் டாடா நெக்சான் காருக்கு போட்டியாக புதிய அம்சம் பொருத்தப்படுகிறது.



    ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் சன்ரூஃப் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெனால்ட் ஹெச்.பி.சி. மற்றும் நிசாசன் இ.எம்.2 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் கிகெர் மற்றும் மேக்னைட் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு நிறுவன மாடல்களில் சன்ரூஃப் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இறுக்கிறது. சன்ரூஃப் அம்சம் காரில் அதிக இடவசதி இருப்பது போன்ற உணர்வையும், காரினுள் அதிக காற்றோட்டம் புக வழி செய்யும்.

    நிசான்

    இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் கார்களில் சன்ரூஃப் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. கிகெர் மற்றும் மேக்னைட் மாடல்கள் சி.எம்.எஃப்.-ஏ பிளஸ் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடலும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய கார்களில் இருநிறுவனங்களும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், போல்டு ஷோல்டர் லைன்கள் உள்ளிட்டவை இடம்பெறலாம். இவை காருக்கு பிரம்மாண்ட தோற்றத்தை வழங்கும்.

    இரு மாடல்களிலும் 1.0 லிட்டர், மூன்று சிலண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹெச்.ஆர்.10 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 95 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எகிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 1200 கஸ்டம் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 2020 கஸ்டம் மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 10.77 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மாடல் பாரம்பரிய தோற்றத்தில், ஹெட்லேம்ப் மற்றும் சிக்னல் இன்டிகேட்டர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்போஸ்டு என்ஜின், பார்ட்-டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது லோ ஃபியூயல் வார்னிங், ஒடோமீட்டர், டைம் ஆஃப் டே கிளாக், டூயல் ட்ரிப் மோட்டார்கள், லோ ஆயில் பிரெஷர் லைட் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம்

    புதிய மாடலில் பி.எஸ்.6 ரக 1200 சிசி ஏர் கூல்டு எவல்யூஷன் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 97 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஏர் கிளீனர் கவர்கள், ஆல் குரோம் ஷார்ட்டி டூயல் டேம்ப்பர்டு எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    ஹார்லி நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி புதிய மோட்டார்சைக்கிள் மிட்நைட் புளூ, ரிவர் ராக் கிரே, பில்லார்ட் ரெட் மற்றும் விவிட் பிளாக், ரிவர் ராக் கிரே மற்றும் விவிட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்3 எம் வேரியண்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்3 எம் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்களில் புதிய கார் எல்.இ.டி.டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. 

    புதிய பி.எம்.டபிள்யூ. காரில் 3.0 லிட்டர் சிக்ஸ் எம் ட்வின்பவர் டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இது 473 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் காம்படீஷன் வேரியண்ட்டில் இதே என்ஜின் 503 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

    இந்த காரில் எம் ஸ்பெக் எக்ஸ்டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் அனைத்து வீல்களுக்கும் என்ஜின் செயல்திறன் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்3 எம் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் கார் ஸ்பை படம்

    இதன் காம்படீஷன் எடிஷன் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தினை 4.1 நொடிகளில் எட்டிவிடும்.  பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மற்ற சீரிஸ்களை போன்றே புதிய எக்ஸ்3 எம் மாடலிலும் உறுதியான பொருட்களான பாகங்கள் மற்றும் தலைசிறந்த சேசிஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ.வின் புதிய எஸ்.யு.வி.யின் டேம்ப்பர்களை எலெக்ட்ரிக் முறையில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எக்ஸ்3 எம் சீரிஸ் மாடலில் பிரத்யேக ஸ்டீரிங் வீல், தலைசிறந்த காம்பவுண்ட் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் எம் எக்ஸ்டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இவை அனுபவம் மிக்க ஓட்டுனர்களை எக்ஸ்3 எம் மாடலை கண்ட்ரோல்டு ட்ரிஃப்ட் செய்ய அனுமதிக்கிறது. சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் மாடல் விலை 70,800 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 58.26 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக ஐ20 எலைட் பிரீமியம் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் ஐ20 எலைட் மாடல் துவக்க விலை ரூ. 6.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எஸ்.6 ஹூண்டாய் ஐ20 எலைட் மாடல்: மேக்னா பிளஸ், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் ஆஸ்டா ஒ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக மற்ற வேரியண்ட்களின் விற்பனையை ஹூண்டாய் நிறுத்திவிட்டது. டாப் எண்ட் ஆஸ்டா ஒ வேரியண்ட் விலை ரூ. 8.31 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தோற்றத்தில் ஹூண்டாய் ஐ20 எலைட் பி.எஸ்.6 மாடல் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய காரிலும் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பி.எஸ்.6 மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னெரிங் லேம்ப்கள், புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறம், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, மல்டி பங்ஷன் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய ஹூண்டாய் ஐ20 எலைட் பி.எஸ்.6 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 82 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 114 என்.எம். @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ்  வெளியிட்டு இருக்கிறது.

    மார்ச் 15 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ஒஇ வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாத இறுதி வரை சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் அறிக்கை
    டாடா மோட்டார்ஸ் அறிக்கை

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தனது ஆலைகளின் உற்பத்தி பணிகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருந்தது. டாடா மோட்டார்ஸ் போன்றே பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆலைகளின் உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக அறிவித்து இருந்தன.

    அதன்படி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனையகங்கள், சர்வீஸ் மையங்கள், டெஸ்ட் டிரைவ் மற்றும் விநியோகம் என அனைத்து பணிகளையும் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விற்பனை மேலும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், புதிய வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் செலுத்துவதை குறைத்து கொண்டுள்ளனர்.
    இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிள் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கவாசகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக கவாசகி இசட்900 இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கவாசகி நிறுவனம் தனது நின்ஜா 300 மோட்டார்சைக்கிளின் உற்பத்தியை நிறுத்தியது. இதன் பின் இசட் 900 மாடல் விற்பனை அதிகரிக்க துவங்கியது.  

    கடந்த மாதம் கவாசகி இசட்900 மாடல் சுமார் 39 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த மாதம் 71 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது 82 சதவீத வளர்ச்சியாகும். இதுதவிர கவாசகி இசட்650 மாடல்களில் 20 யூனிட்களையும், நின்ஜா 650 மாடலில் 18 யூனிட்களையும், வல்கன் எஸ் மாடலில் 12 யூனிட்களையும், இசட்.எக்ஸ்.-10 ஆர்.ஆர். மாடலில் 13 யூனிட்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

    கவாசகி இசட்900

    நின்ஜா 300, இசட்.எக்ஸ். 6 ஆர், வெர்சிஸ் 300 எக்ஸ், வெர்சிஸ் 1000, நின்ஜா ஹெச்2 உள்ளிட்ட மாடல்கள் வெறும் ஒரு யூனிட் விற்பனையாகி இருக்கிறது. நின்ஜா 1000 மாடல் மொத்தம் 35 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கவாசகி இசட்900 பி.எஸ்.4 மாடல்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7.70 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2020 கவாசகி இசட்900 மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ட்வீக் செய்யப்பட்ட டெயில் எண்ட் மற்றும் இதர காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், என்ஜின் பவர் அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளில்- ரோட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என மொத்தம் நான்குவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மோடிலும் வெவ்வேறு செயல்திறன் மற்றும் ஏ.பி.எஸ். செட்டிங்கள் வேறுபடும்.
    ×