என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கொரோனா வைரஸ் காரணமாக ரத்தான ஆட்டோ விழா
Byமாலை மலர்30 March 2020 12:14 PM GMT (Updated: 30 March 2020 12:14 PM GMT)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டெட்ராயிட் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ விழா நடைபெற இருந்த பகுதியை மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ விழா டெட்ராயிட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய மற்றும் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டிற்கான விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதால், 2021 ஜூன் மாத வாக்கில் டெட்ராயிட் ஆட்டோ விழா நடைபெற இருக்கிறது. வழக்கமாக ஜனவரி மாத வாக்கில் நடத்தப்பட்டு வந்த டெட்ராயிட் ஆட்டோ விழா சமீபத்தில் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்விழா ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோ விழா நடைபெற இருந்த ஜாவிட்ஸ் கன்வென்ஷன் சென்ட்டர் தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
×