என் மலர்
ஆட்டோமொபைல்

ஃபோக்ஸ்வேகன் கார்
ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சலுகை நீட்டிப்பு
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ்களின் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்ள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், இந்த அறிவிப்பினை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது, வாகனத்தின் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் உள்ளிட்டவற்றை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் மார்ச் 22 முதல் மே மாதம் வரை ஸ்டாண்டர்டு வாரண்டி நிறைவுபெறும் வாடிக்கையாளர்கள் ஜூலை 31, 2020 வரை வாரண்டியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை ஸ்டாண்டர்டு வாரண்டியின் கீழ் கட்டணமின்றி சரிசெய்து கொள்ள முடியும்.
மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி நிறைவுறும் ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு மே 15 ஆம் தேதிக்குள் சென்று நீட்டிக்கப்பட்ட வாரண்டியின் கீழ் வாகனங்களை சரி செய்து கொள்ளலாம்.
Next Story






