search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா அல்ட்ராஸ்
    X
    டாடா அல்ட்ராஸ்

    டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் ஜூலை வரை நீட்டிப்பு

    டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ்  வெளியிட்டு இருக்கிறது.

    மார்ச் 15 முதல் மே 31 வரையிலான காலக்கட்டத்தில் ஒஇ வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவுறும் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாத இறுதி வரை சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிக்கப்படுவதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் அறிக்கை
    டாடா மோட்டார்ஸ் அறிக்கை

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தனது ஆலைகளின் உற்பத்தி பணிகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருந்தது. டாடா மோட்டார்ஸ் போன்றே பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஆலைகளின் உற்பத்தி பணிகளை நிறுத்துவதாக அறிவித்து இருந்தன.

    அதன்படி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனையகங்கள், சர்வீஸ் மையங்கள், டெஸ்ட் டிரைவ் மற்றும் விநியோகம் என அனைத்து பணிகளையும் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விற்பனை மேலும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், புதிய வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் செலுத்துவதை குறைத்து கொண்டுள்ளனர்.
    Next Story
    ×