என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய வாகனத்திற்கான மற்றொரு டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய வாகனம் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய டீசரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் முன்புற இன்டிகேட்டர்கள் காணப்படுகின்றன.
புதிய வாகனம் பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இது 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என்றும் இது ஜூப்பிட்டர் பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 125, சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மேட் எடிஷன் மாடல் இந்தியா முழுக்க விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ரேபிட் மேட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேபிட் மேட் எடிஷன் துவக்க விலை ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேட் எடிஷன் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. காரின் நிறம் மற்றும் காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர மேட் எடிஷனில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய ரேபிட் மேட் எடிஷன் மாடலிலும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பன்ச் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. டாடா பன்ச் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். புதிய பன்ச் மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதன் விலை விவரங்கள் பண்டிகை காலக்கட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் மாடல் நெக்சான் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது.

புதிய டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 5 ஸ்பீடு ஏ.எம்.டி. யூனிட் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
எலான் மஸ்க்கின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலையம், 'இந்த தசாப்தம் முடிவதற்குள் உலகின் பல்வேறு நாடுகளில் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை பயன்பாட்டுக்கு வரும்,' என தெரிவித்தார்.

மேலும், 'இந்த போக்குவரத்து முறை முதலில் இந்தியா அல்லது சவுதி அரேபியாவில் பயன்பாட்டுக்கு வரும். பிரபலமாக இருக்கும் தூரமான இடங்களுக்கு விமானத்தின் வேகத்தில் பயணிக்க லாரிக்கு கொடுக்கும் விலையை கொடுத்தாலே போதும்.' என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் புதிய இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்தியாவில் பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கிறது. மேலும் கொரோனா தொற்று ஊரடங்கில் இருந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தை மெல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய இருசக்கர வாகனங்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகிறது. இது தற்போதைய ஜூப்பிட்டர் 110 மாடலை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
மேம்பட்ட பி.எம்.டபிள்யூ. ஜி310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஜி சீரிஸ் மாடல்கள் முற்றிலும் புதிய நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த மாடல்களில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் நிசான் மோட்டார் இந்தியா 2816 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இதில் நிசான் மற்றும் டேட்சன் நிறுவன மாடல்கள் அடங்கும்.
இதுவரை நிசான் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் 65 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. 2020 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் இதுவரை அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது.

செப்டம்பர் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது நிசான் வாகன விற்பனை கடந்த மாதம் 260 சதவீதம் அதிகரித்தது. மேலும் நிசான் மோட்டார் இந்தியா ஏற்றுமதியிலும் கடந்த மாதம் 5900 யூனிட்களை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 211 யூனிட்களே ஏற்றுமதி செய்யப்பட்டன.
'பண்டிகை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்துள்ளனர். எனினும், செமி கண்டக்டர் குறைபாடு காரணமாக கார்களை வினியோகம் செய்வது சவால் நிறைந்த பணியாக மாறி இருக்கிறது,' என நிசான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இ-பைக்-கோ நிறுவனம் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
ஐ.ஓ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சார்ந்து இயங்கும் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளை துவங்க இ-பைக்-கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சார்ஜிங் மையங்கள் இ-பைக்-கோ சார்ஜ் எனும் பெயரில் இயங்க இருக்கின்றன.
இ-பைக்-கோ நிறுவனம் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிளாட்பார்ம் ஆகும். குறைந்த விலையில் ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்துள்ளது. இவற்றை பயனர்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயன்படுத்தலாம். வைபை வசதி இருப்பதால், சார்ஜிங் விவரங்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

புதிய ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை ஒவ்வொரு 500 மீட்டர்களில் கட்டமைக்க இ-பைக்-கோ திட்டமிட்டுள்ளது. மேலும் வாகனத்தில் முழு சார்ஜ் ஆனதும், சார்ஜிங் தானாக நிறுத்தப்பட்டு விடும். சார்ஜிங் செய்வதற்கான கட்டண முறைகளிலும் இ-பைக்-கோ ரீசார்ஜ் திட்டங்களை வழங்க இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
மாருது சுசுகியின் 2021 செலரியோ மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய செலரியோ மாடல் நவம்பர் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை செலரியோ மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது.

புதிய செலரியோ மாடலின் வெளிப்புறம் ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் பிளாக் இன்சர்ட்கள், பாக் லைட்கள், ஆன்டெனா, பிளாக்டு-அவுட் பி பில்லர், அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், பின்புற வைப்பர், வாஷர், புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது.
உள்புறம் ஸ்மார்ட் பிளே இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மல்டி பன்ஷன் ஸ்டீரிங் வீல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓ.ஆர்.வி.எம்.கள், வழங்கப்படுகின்றன. இந்த கார் 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. திறன், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் கேமோ எடிஷன் விற்பனையை நிறுத்தியது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பதை ஒட்டி டாடா மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஹேரியர் கேமோ எடிஷன் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாடல் மொத்தம் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டாடா ஹேரியர் கேமோ எடிஷன் அதன் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 30 ஆயிரம் விலை அதிகம் ஆகும். கேமோ எடிஷன் மாடல் ஆலிவ் கிரீன் நிறத்தில் கிடைத்தது. இந்த கார் தோற்றத்தில் ராணுவ வாகனம் போன்றே காட்சியளிக்கிறது.

ஹேரியர் கேமோ எடிஷனில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2022 இசட்900 மோட்டார்சைக்கிள் புதிதாக மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2022 இசட்900 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி இசட்900 மாடல் விலை ரூ. 8.42 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் புதிதாக மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
புதிய மாடலில் லோ-ஸ்லங் ஹெட்லேம்ப், மஸ்குலர் பியூவல் டேன்க், ரேக்டு டெயில் பகுதி, புல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 4.3 இன்ச் கலர் டி.எப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 948 சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த என்ஜின் 123.6 பி.ஹெச்.பி. திறன், 98.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்டெலிஸ் பிரேம் கொண்டிருக்கும் கவாசகி இசட்900 மாடல் 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 இந்திய விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.700 அனைத்து வேரியண்ட்களின் விலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.09 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 ஒன்பது வேரியண்ட்களில் கிடைக்கிறது.

விற்பனை மையங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எக்ஸ்.யு.வி.700 கிடைக்கும். புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 7 ஆம் தேதி துவங்குகிறது. வினியோகம் அக்டோபர் 10-இல் துவங்குகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலக்கட்டத்தில் புது மாடல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல்கள் வரிசையில் பல்சர் 250 இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், பல்சர் 250 மாடல் பல்சர் சீரிசில் பெரும் மாடலாக இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் செமி-பேர்டு டிசைன் முன்புறம் மிட்-சைஸ் பேரிங், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், அலாய் வீல்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது.

புதிய பல்சர் 250 மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடலில் 250சிசி, ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 28 பி.எஸ். திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கலாம்.






