என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டார்சைக்கிள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,28,150 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஹீரோ மோட்டார்சைக்கிளில் 4 வால்வுகள் கொண்ட 200சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.8 பி.ஹெச்.பி. திறன், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

     ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி

    மெக்கானிக்கல் மாற்றங்கள் மட்டுமின்றி இந்த மாடல் புதிதாக- டிரெயில் புளூ, ப்ளிட்ஸ் புளூ மற்றும் ரெட் ரெயிட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்ட்டர் மற்றும் என்ஜின் கட்-ஆப் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது. இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஜூப்பிட்டர் 125 சிசி ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 73,400, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 மாடலில் 124.8சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. திறன், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புதிய ஜூப்பிட்டர் மாடலில் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     டிவிஎஸ் ஜூப்பிட்டர்

    இத்துடன் 32 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ், முன்புறம் குளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி. சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 மாடல் சுசுகி அக்சஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட எஸ் கிலாஸ் மாடலை அறிமுகம் செய்தது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மேட் இன் இந்தியா எஸ் கிளாஸ் மாடல் விலை ரூ. 1.57 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எஸ் கிளாஸ் லான்ச் எடிஷன் இந்தியாவில் ரூ. 2.17 கோடி விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 11 புதிய வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 2021 எஸ் கிளாஸ் மாடல் உலகளவில் அதிக புகழ்பெற்று இருக்கிறது. 2021 மாடலின் வெளிப்புறம் அப்டேட் செய்யப்பட்டு, கேபின் அம்சங்கள் மற்றும் டிரைவ் திறன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

    மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350டி மாடலில் 286 பி.ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் 2925சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். 

    மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்450 4 மேடிக் மாடலில் 2999சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 367 பி.ஹெச்.பி. மற்றும் 22 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இத்துடன் 500 + 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 9ஜி டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் லெஜண்டர் 4x4 மாடல் 4 சிலிண்டர் டீசல் என்ஜினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் லெஜண்டர் 4x4 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 42.33 லட்சம் ஆகும். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லெஜண்டர் 4x2 மாடல் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் டொயோட்டா லெஜண்டர் 4x2 மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய பார்ச்சூனர் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 2700 லெஜண்டர் யூனிட்களை டொயோட்டா விற்பனை செய்து உள்ளது. 

     டொயோட்டா லெஜண்டர்

    புதிய லெஜண்டர் மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல்நாளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டது.


    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவை இன்று (அக்டோபர் 7) துவங்கியது. முன்பதிவு துவங்கிய 57 நிமிடங்களில் 25 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிவேகமாக 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்த கார் என்ற பெருமையை எக்ஸ்.யு.வி.700 பெற்று இருக்கிறது.

    அமோக வரவேற்பு காரணமாக முதல்நாள் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம். புதிய எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் மாடல்களின் வினியோகம் முதலில் துவங்கும் என மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இதன் முதற்கட்ட வினியோகம் ஏற்கனவே துவங்கிய நிலையில், இரண்டாம் கட்ட வினியோகம் இன்று நடைபெறுகிறது.
    சென்னை நிறுவனம் உருவாக்கி இருக்கும் பறக்கும் கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.


    லண்டனில் நடைபெற்ற உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் விழாவில் சென்னையை சேர்ந்த விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது.

    பறக்கும் காரின் டிஜிட்டல் ப்ரோடோடைப் வீடியோவை அந்நிறுவனம் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. அதில் காரின் கேபின் மற்றும் இருக்கை அமைப்பு எவ்வாறு உள்ளது என தெளிவாக தெரிகிறது. இந்த காரில் இருவர் பயணிக்க முடியும். இதன் கதவுகள் இறக்கை போன்று திறக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

     விணாடா பறக்கும் கார்

    இந்த பறக்கும் கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது தரையில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் கொண்டு இயங்குகிறது.

    விணாடாவின் பறக்கும் கார் ப்ரோடோடைப் 2023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கொண்டு பொதுமக்கள் போக்குவரத்து, அவசர தேவை மற்றும் பொருட்களை வினியோகம் செய்ய பயன்படுத்தலாம்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மற்றும் வென்டோ கார்களின் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் லிமிடெட் மேட் எடிஷன் போலோ மற்றும் வென்டோ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேட் எடிஷன் வோக்ஸ்வேகன் போலோ துவக்க விலை ரூ. 9.99 லட்சம் ஆகும். வோக்ஸ்வேகன் வென்டோ மேட் எடிஷன் துவக்க விலை ரூ. 11.94 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேட் எடிஷன் மாடல்களில் கார்பன் ஸ்டீல் கிரே மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார்களின் ஓ.ஆர்.வி.எம். மற்றும் கதவுகளின் கைப்பிடிகள் பிளாக் கிளாஸி பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இவை காருக்கு பிரீமியம் தோற்றை வழங்குகின்றன.

     வோக்ஸ்வேகன் வென்டோ மேட் எடிஷன்

    புதிய மேட் எடிஷன் மாடல்கள் வோக்ஸ்வேகன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் வினியோகமும் உடனடியாக துவங்குகிறது. 

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்.யு.வி.700 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்ட்கள் ஏ7 வடிவில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 புதிய வேரியண்ட்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 7) காலை 10 மணிக்கு துவங்குகிறது. புதிய எக்ஸ்.யு.வி.700 ஏ7 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் விலை ரூ. 19.99 லட்சம் என்றும் ஆல்-வீல் டிரைவ் மாடல் விலை ரூ. 22.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    புதிய வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 197 பி.ஹெச்.பி. திறன், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 

    டீசல் வெர்ஷனில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர், எம்ஹாக் யூனிட் உள்ளது. இது 153 பி.ஹெச்.பி. திறன், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுடன் சேண்ட்-ஸ்டார்ம் எடிஷனும் அறிமுகமானது. சேண்ட்-ஸ்டார்ம் எடிஷன் இந்தியாவில் ரூ. 9.55 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலை குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் விலை ரூ. 8.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது.

     2021 டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் டீசர்

    இந்த என்ஜின் 64.1 பி.ஹெச்.பி திறன், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், ட்வின் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது.

    ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எப் பேஸ் எஸ்.வி.ஆர். எஸ்.யு.வி. மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. புதிய எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடல் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய பெர்பார்மன்ஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இதன் துவக்க விலை ரூ. 1.51 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் 5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 543 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடும்.

     ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர்.

    ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். மாடலில் மெல்லிய எல்.இ.டி. குவாட் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் உள்ளது. இது முந்தைய மாடலில் இருந்ததை விட 48 சதவீதம் பெரியதாகும். இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    வால்வோ கார்ஸ் நிறுவனம் மேம்பட்ட எக்ஸ்.சி.60 எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இதே காரின் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வால்வோ டீசரை வெளியிட்டு இருக்கிறது.

    2021 வால்வோ எக்ஸ்.சி.60 மாடல் புதிய கிரில், மேம்பட்ட முன்புற பம்ப்பர், புதிய அலாய் வீல்கள், புதிய நிறங்களில் கிடைக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த காரில் அதிநவீன ஏ.டி.ஏ.எஸ். சிஸ்டம், ஆட்டோமேடிக் பிரேக்கிங், கொலிஷன் அவாய்டன்ஸ், பைலட் அசிஸ்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     வால்வோ டீசர்

    புதிய வால்வோ காரில் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த காரின் சரியான வெளியீட்டு தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    மஹிந்திராவின் புதிய தலைமுறை தார் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் இந்திய முன்பதிவில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய விற்பனை துவங்கிய ஒரே வருடத்தில் மஹிந்திரா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. 

    மஹிந்திரா தார் மாடலுக்கான மொத்த முன்பதிவில் ஆட்டோமேடிக் வேரியண்டை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாங்கியுள்ளர். 25 சதவீத முன்பதிவுகள் பெட்ரோல் மாடலுக்கு கிடைத்துள்ளது. ஜூலை 2021 மாதத்தில் தார் எஸ்.யு.வி.-க்கான விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

     மஹிந்திரா தார்

    இந்தியாவில் புதிய தார் மாடல் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 150 பி.ஹெச்.பி. திறன், 300 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 130 பி.ஹெச்.பி. திறன், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. 

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
    ×