என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பாதுகாப்பு சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பன்ச் மாடலின் விற்பனை அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 5.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டாடா பன்ச் மாடல் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய பன்ச் மாடல் குளோபல் என்கேப் சோதனையில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் குறைந்த விலையில் கிடைக்கும் பாதுகாப்பான கார் மாடல் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் மஹிந்திரா கே.யு.வி. என்.எக்ஸ்.டி. மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் மாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
எம்ஜி ஆஸ்டர் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய ஆஸ்டர் மாடல் துவக்க விலை ரூ. 9.78 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஆஸ்டர் மாடல் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் ஐந்தாவது கார் மாடல் ஆகும். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட முதல் எம்ஜி கார் இது ஆகும்.
விலை விவரம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (மேனுவல்) ஸ்டைல் - ரூ. 9.78 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (மேனுவல்) சூப்பர் - ரூ. 11.28 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (மேனுவல்) ஸ்மார்ட் - ரூ. 12.98 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (மேனுவல்) ஷார்ப் - ரூ. 13.98 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (சி.வி.டி.) சூப்பர் - ரூ. 12.68 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (சி.வி.டி.) ஸ்மார்ட் - ரூ. 14.18 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் வி.டி.ஐ. டெக் (சி.வி.டி.) ஷார்ப் - ரூ. 14.99 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் 220 டர்போ (ஏ.டி.) ஸ்மார்ட் - ரூ. 15.88 லட்சம்
எம்ஜி ஆஸ்டர் 220 டர்போ (ஏ.டி.) ஷார்ப் - ரூ. 16.78 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 110 பி.எஸ். திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 140 பி.எஸ். திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.
எம்ஜி ஆஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் 27 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டாப் எண்ட் மாடல்களில் 49 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தையில் ஜீப் ராங்ளர் மாடலின் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
ஜீப் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ராங்ளர் எஸ்.யு.வி. மாடலை உற்பத்தி செய்ய துவங்கியது. இந்நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த வாரம் ஜீப் காம்பஸ் மாடலின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ராங்ளர் மாடலின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ராங்ளர் மாடல் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்கள் விலையும் ரூ. 1.25 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வை தொடர்ந்து ஜீப் ராங்ளர் அன்லிமிடெட் விலை ரூ. 55.15 லட்சம் என்றும் ஜீப் ராங்ளர் ரூபிகான் விலை ரூ. 59.15 லட்சம் என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ராங்ளர் எஸ்.யு.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு உள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பஜாஜ் நிறுவனம் பல்சர் 250 மோட்டார்சைக்கிளை அக்டோபர் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் நேக்கட் மற்றும் செமி பேர்டு என இரு மாடல்களில் உருவாகி இருக்கிறது.
பல்சர் 250 மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்.எஸ்.200 மாடலுக்கு மாற்றாக அமையும் என தெரிகிறது. புதிய 250 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பல்சர் 220 விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதிய பல்சர் 250 மாடலில் புல் எல்.இ.டி லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் வழங்கப்படும் 250சிசி என்ஜின் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது 24 பி.ஹெச்.பி. திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது புதிய சி400 ஜிடி ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.
அறிமுகமானதும் இந்திய சந்தையின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி பெறும். தற்போதைய தகவல்களின்படி பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் வரிகள் சேர்க்கப்படாமல் இந்தியாவில் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலில் 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். புதிய பி.எம்.டபிள்யூ. ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.
'சீனாவில் உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்,' என அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெஸ்லா எழுதியிருக்கும் கடிதத்தில் 'இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். தற்போது சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படும் கார்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் விரைவில் ஸ்லேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. தற்போது இந்த காருக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புதிய ஸ்லேவியா செடான் மாடல் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்லேவியா மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
இந்த காரின் பவர் டிரெயின் ஸ்கோடா குஷக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.700 மாடல் இரண்டே நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. முதல் நாள் முன்பதிவு 57 நிமிடங்களில் நிறைவுற்ற நிலையில், இரண்டாம் நாளில் இரண்டு மணி நேரங்களில் 25 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக எக்ஸ்.யு.வி.700 மாடல் ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கியது. இந்த விலை முதல் 25 ஆயிரம் யூனிட்களுக்கு பொருந்தும். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடல் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்டிஆர் 160 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மூன்று ரைட் மோட்கள் உள்ளன.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச், பிரேக் லீவர்கள், பிரத்யேக பிளாக் நிறம், சிவப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய சீட் கொண்டிருக்கிறது. புதிய ஆர்டிஆர் 160 4வி மாடலில் டிவிஎஸ் SmartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் விலை ரூ. 1,15,265 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,21,372 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாடல் ரேசிங் ரெட், மெட்டாலிக் புளூ மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். இவி பேஸ்லிப்ட் மாடல் மெல்லிய ஹெட்லேம்ப், டெயில் லைட்களை கொண்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். இவி பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 439 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இசட்.எஸ். இவி மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எம்ஜி இசட்.எஸ். இவி மாடலில் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்குகிறது.

புதிய பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் கிரில் நீக்கப்பட்டு பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஜெனிவா மோட்டார் விழா மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது. ஆட்டோ நிறுவனங்கள் மற்றும் விழாவில் கலந்து கொள்வோரின் நலன் கருதி ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
முன்னதாக ஆண்டு 2020 மற்றும் 2021 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது 2022 மோட்டார் விழாவும் ரத்து செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

"2022 ஆம் ஆண்டிற்கான ஆட்டோ விழாவை நடத்த எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் நிலைமை எங்களின் கட்டுக்குள் இல்லை. 2023 ஆண்டு ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா நிச்சயம் சிறப்பான முறையில் நடைபெறும் என நம்புகிறோம்," என விழா ஏற்பாட்டு குழுவின் தலைவரான மௌரிஸ் டுரெடினி தெரிவித்தார்.
லெக்சஸ் நிறுவனத்தின் புதிய இ.எஸ். பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
லெக்சஸ் நிறுவனம் 2021 இ.எஸ்.300ஹெச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லெக்சஸ் இ.எஸ். விலை ரூ. 56.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.
லெக்சஸ் இ.எஸ். மாடல் எக்ஸ்-குயிசிட் மற்றும் லக்சரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இ.எஸ். மாடலின் கேபின் எந்த மாற்றமும் பெறவில்லை. இந்த காரில் வெண்டிலேட் செய்யும் சீட்கள், 360-டிகிரி கேமரா, 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் 2.5 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் மற்றும் 16 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது 215 பி.ஹெச்.பி. திறன், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த காரில் முன்புற டிரைவ் வசதி மற்றும் சி.வி.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.






