என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் விலை ரூ. 1,16,660 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    ஸ்டெல்த் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடலில் மேட் பிளாக் நிற பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3டி சின்னம் மற்றும் ஸ்டெல்த் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.

     ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன்

    புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ. 53.50 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 54.90 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கிடைக்கும். 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஐகானிக் எடிஷன் மினரல் வைட், கார்பன் பிளாக் மற்றும் கஷ்மிரி சில்வர் போன்ற பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.

     பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன்

    பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலின் கிரில் பகுதியில் எல்.இ.டி. லைட்கள் உள்ளன. இவை முன்புற தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் மேக்னஸ் இ.எக்ஸ். பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் மேக்னஸ் இ.எஸ். என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 68,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    புதிய ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ். மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1200 வாட்ஸ் மோட்டார் இந்த பிரிவு வாகனங்களில் இதுவரை வழங்கப்படாத ஒன்று ஆகும். 

    மேக்னஸ் இ.எக்ஸ்.

    இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 10 நொடிகளில் எட்டிவிடும். இதில் இகோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    டிரைடன் இ.வி. நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.


    அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டிரைடன் இ.வி. இந்தியாவில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை ஐதராபாத் நகரில் அறிமுகம் செய்து இருக்கிறது. டிரைடன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் இது ஆகும். 

    இந்த எலெக்ட்ரிக் கார் 5690 எம்.எம். நீளமும், 2057 எம்.எம். உயரமும், 1880 எம்.எம். அகலமும் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 3302 எம்.எம். ஆகும். டிரைடன் இ.வி. மாடல் ஹெச் எட்டு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஏழு டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. 

     டிரைடன் இ.வி. மாடல் ஹெச்

    டிரைடன் மாடல் ஹெச் எஸ்.யு.வி. காரில் 200 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை ஹைப்பர்சார்ஜர் கொண்டு இரண்டு மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

    இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 1200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் ஆயிரம் கி.மீ. ரேன்ஜ் கொண்ட முதல் எலெக்ட்ரிக் காராக மாடல் ஹெச் இருக்கும்.
    பஜாஜ் நிறுவனம் 2022 கே.டி.எம். ஆர்சி200 மோட்டார்சைக்கிள் இந்திய விலையை அறிவித்து இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய ஆர்.சி.200 மோட்டார்சைக்கிள் இந்திய விலையை அறிவித்தது. அதன்படி புதிய ஆர்.சி.200 விலை ரூ. 2,08,717, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் அறிமுக விலை தான். விரைவில் இந்த விலை மாற்றப்படும்.

    2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் முற்றிலும் புதிய சேசிஸ், மேம்பட்ட எர்கோனமிக், எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் கிராண்ட் ப்ரிக்ஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     கே.டி.எம். ஆர்.சி.200

    புதிய ஆர்சி200 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கே.டி.எம். விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது.

    புதிதாக கார் வாங்குவோர், முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடம்பர பட்டியலில் இருந்து அத்தியாவசிய பட்டியலுக்கு கார்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் கார் வாங்குவது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. வீடுகள் தோறும் கார்கள் நிற்கும் காட்சியை பார்க்க முடிகிறது. 

    அதேநேரத்தில் கார் வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால் கார் வாங்கும் முன் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் எனில், கார் உதிரிபாகங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

     கார் கோப்புப்படம்

    அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் மாடல்கள், ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார் மாடல்களுக்கு உதிரிபாகங்கள் எளிதில் கிடைத்துவிடும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டே உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

    ‘நான் தான் ஊரிலேயே  இந்த காரைப் பயன்படுத்துகிறேன்' என்று அறிமுகம் இல்லாத காரை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற மாடல்களில் பழுது ஏற்பட்டாலோ, தேய்மானம் அடைந்தாலோ அதன் உதிரி பாகங்களை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் அதிகமாகும்.
    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கியூ5 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.


    ஆடி நிறுவனம் இந்தியாவில் கியூ5 எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தியை ஔரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் துவங்கி இருக்கிறது. இந்த கார் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இந்த காரின் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல் வழங்கப்படுகிறது.

     ஆடி கியூ5

    புதிய ஆடி கியூ5 மாடலில் 2 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 12 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு எஸ் டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் யு.எஸ்.பி. சார்ஜிங் சாக்கெட் கொண்டிருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.1 பி.ஹெச்.பி. திறன், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர்

    இந்த மாடலில் முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310 எம்எம் டிஸ்க், பின்புறம் 255 எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. 

    நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை வழங்குகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், ஆன்லைன் முன்பதிவு போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது.

    சிறப்பு சலுகை நிசான் கிக்ஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ஆன்லைன் முன்பதிவு போனஸ், கார் முன்பதிவை நிசான் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மேற்கொள்வோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் பலன்கள் விற்பனை மையங்கள் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும்.

     நிசான் கிக்ஸ்

    இந்த சலுகைகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் காரை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் எக்சேன்ஜ் சலுகை என்.ஐ.சி. சார்ந்த விற்பனை மையங்களில் மட்டுமே வழங்கப்படும். மாத தவணையில் கார் வாங்குவோருககு 7.99 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மாடல் இந்தியாவில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் சந்தா முறையிலான சேவையை டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கும் நீட்டித்து இருக்கிறது. வோக்ஸ்வேகன் டைகுன் எஸ்.யு.வி. மாடல் ரூ. 10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவக்க விலையில் கிடைக்கிறது. 

    இந்திய சந்தையில் புதிய டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டைகுன் ஜிடி லைன் மாடல் விலை ரூ. 14.99 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
     
     வோக்ஸ்வேகன் டைகுன்

    காருக்கான வாடகை தொகையில் ஆன்-ரோடு பைனான்சிங், பராமரிப்பு, இன்சூரன்ஸ் போன்றவை அடங்கும். புதிய வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் குஷக் காரின் பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது.

    டைகுன் மாடலில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட், சக்திவாய்ந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் அம்சங்களை பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் சி400 ஜிடி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி விலை ரூ. 9.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வேறு எந்த மாடலும் இல்லை.

    இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 350சிசி, வாட்டர் கூல்டு சிங்கில் சிலிண்டர் 4 ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி

    புதிய பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6.5 இன்ச் புல் கலர் டி.எப்.டி. ஸ்கிரீன் உள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்பட புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடல் விலை ரூ. 69,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், க்ரோம் இன்சர்ட்கள், பேக்ரெஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஜூபிலண்ட் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

     ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக்

    இத்துடன் ஹீரோ நிறுவனத்தின் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு அழைப்புகள், எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், போன் பேட்டரி விவரம், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆப் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. திறன், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    ×