search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிஎஸ் மோட்டார்"

    • டி.வி.எஸ். நிறுவனத்தின் 2022 ரேடியான் மோட்டார்சைக்கிள் எல்.சி.டி. கிளஸ்டர் கொண்டுள்ளது.
    • இந்த மாடல் டூயல் நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் மேம்பட்ட புதிய 2022 ரேடியான் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. டி.வி.எஸ். நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் கம்யுட்டர் மாடலாக ரேடியான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2022 ரேடியான் மாடல் விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 925 என துவங்கி அதிகபட்சமாக டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 966 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய டி.வி.எஸ். ரேடியான் மாடலில் மல்டி கலர் ரிவர்ஸ் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் இந்த அம்சம் கொண்ட முதல் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை 2022 டி.வி.எஸ். ரேடியான் பெற்றுள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் சொந்த டி.வி.எஸ். இண்டெலிகோ சிஸ்டம் புதிய ரேடியான் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டை பெருமளவு மிச்சப்படுத்தும். இத்துடன் 2022 டி.வி.எஸ். ரேடியான் மாடலில் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கடிகாரம், சர்வீஸ் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், டாப் ஸ்பீடு, அவரேஜ் ஸ்பீடு போன்ற விவரங்களை காண்பிக்கும்.


    நீண்ட நேர ஐலிங்கின் போது இதில் வழங்கப்பட்டு இருக்கும் இண்டெலிகோ அம்சம் என்ஜினை ஸ்விட்ச் ஆப் செய்திடும். இதன் காரணமாக மோட்டார்சைக்கிளில் உள்ள எரிபொருள் சேமிக்கப்படும். என்ஜின் ஸ்விட்ச் ஆப் ஆன பின், பைக்கை லேசாக திராட்டில் செய்தால் என்ஜின் மீண்டும் ஸ்டார்ட் ஆகி விடும்.

    புதிய 2022 டி.வி.எஸ். ரேடியான் மாடலிலும் 109.7சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8 ஹெச்.பி. பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டி.வி.எஸ். நிறுவனம் புதிய ரேடியான் மாடல் 15 சதவீதம் வரை சிறப்பான மைலேஜ் வழங்கும் என தெரிவித்து இருக்கிறது.

    2022 டி.வி.எஸ். ரேடியான் மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது தவிர ஸ்டிரெயிட் புளூ, மெட்டல் பிளாக், ராயல் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களிலும், ரெட் மற்றும் பிளாக் எனும் டூயல் டோன் நிறத்திலும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2022 டி.வி.எஸ். ரேடியான் மாடல் ஹீரோ பேஷன் ப்ரோ, ஹோண்டா லிவோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    ×