என் மலர்
- ராணிப்பேட்டையில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி கலெக்டர் வளர்மதி தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம். கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து. பால்வளம் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகயும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 19-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசு. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 19-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை
- படுகாயம் அடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேலு (வயது 32).
அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35),ஆனந்தன் (45), சிவராமன் (32), பிரகாஷ் (37). இவர்கள் 5 பேரும் ஊர் திருவிழாவை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சேத்துப்பட்டுக்கு காரில் வந்தனர்.
பட்டாசுகள் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினர். சேத்துப்பட்டு தேவிகாபுரம் இடையே கிழக்கு மேடு பகுதியில் மாலை 6:30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போளூரில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் மீது திடீரென கார் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் இறங்கி நின்றது.
பஸ் மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இன்று காலை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் சேத்துப்பட்டு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா களை கட்டிய நேரத்தில் விபத்தில் 4 பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிரானைட் கற்கள் திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிரா மத்தில் சுடுகாடு அருகே 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
கடந்த 10 நாட்களாக மர்ம கும்பல் சிலை செய்ய கற்கள் தோண்டி எடுப்பதாக கூறி, இந்த நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கிளறி கருங்கற்களை எடுத்து 2 லாரி லோடு கற்களை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள் வாகனத்தை மடக்கி கேட்டனர். அனுமதி பெற்றுதான் கற் கள் தோண்டி எடுப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால், கிராம மக்கள் உடனடியாக பணியை நிறுத்த கூறியதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றனர். பின்னர், வருவாய்த் துறை, கனிம வளத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விழுப்பு ரம் மண்டல கனிமவளத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கிருந்த வாகனத்தை பறிமுதல் செய்து மோரணம் போலீசாரிடம் ஒப்ப டைக்க உத்தரவிட்டனர்.
தொடர்ந்து விழுப்புரம் கனிம வளத்துறை ஆய்வாளர் மூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கனிம வளத் துறை உதவி பொறியாளர் மெகபூப், செய்யாறு தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியா, ஊராட்சி மன்ற தலைவர் யசோதா எல்லப் பன் ஆகியோர் சம்பந்தப் பட்ட இடத்தில் இருந்து கிரானைட் கற்கள் கடத் தப்பட்டதா? என ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், பொது மக்களின் அறியாமையை பயன்படுத்தி நவீன சேட் டிலைட் தொழில்நுட்ப உதவியுடன் பூமியின் அடியில் உள்ள கிரானைட் கற்கள் தோண்டி திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, அனைத்து துறைகளும் விழிப்புடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு கனிம வளங்களை பாது காக்க வேண்டும்.
மேலும், ஏனாதவாடி கிராமத்தில் பல கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் இருப்பதாக கூறப்ப டும் நிலையில், கிரானைட் கற்களை திருடி செல்லா மல் இருக்க சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் இந்து தொழிலாளர்கள் முன்னனி சங்கம் சார்பில் தழுவிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்து ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து ஆட்டோ தொழிலா ளர்கள் சங்க மாநில பொது செயலாளர் மகேஷ் பங்கேற்றார். பின்னர் ஆட்டோ தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பாலாஜி, துணை தலைவர் பாபு உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்றனர்.
- உதவி கலெக்டரைக் கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு உதவி கலெக்டரைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கோ.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.சுரேஷ் பாபு, எம்.ராஜசேகரன், ப.துளசி ராமன், ஆர்.சுப்பிரமணி, ஜி.தரணிகுமார், பிரேம்நாத், ஆர்.ஜீவா, சிவக்குமார், ஏ.ரமேஷ், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- அதிகாரி தகவல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் கேவி துணை மின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒண்ணுப்புரம் பிரிவு ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு, அம்மாபாளையம், அழகு சேனை, வண்ணாங்குளம், 5 புத்தூர், பெரிய அய்யம்பாளையம், சின்ன அய்யம்பாளையம், மேல்நகர், கீழ்நகர், பட்டாங்குளம், புதுப்பாளையம், குஞ்சாந்தாங்கல் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை ஆரணி மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் டவுன், அத்திமூர் பெலாசூர், மண்ட கொளத்தூர் ஜடாதாரிகுப்பம், கலசப்பாக்கம், வாட்டர் ஒர்க்ஸ், குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி உள்ளிட்ட பகுதிகளை மின்சாரம் நிறுத்தப்படும் மேற்கண்ட தகவலை போளூர் செயற்பொறியாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
- 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே நிரம்பிய நிலையில் உள்ளது
- சரி செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம் என புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமா ள்பேட்டை பகுதியில் செண்பக த்தோப்பு அணை உள்ளது.
கமண்டல நதியில் வழியாக கடந்த 5-ந் தேதி தண்ணீர் செண்பகத்தோப்பு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய் மூலம் வெளி யேறும் பொழுது, ஏரிக்கு செல்லும் கால்வாய்களில் ஷட்டர் மூடப்பட்டு உள்ளதால் காங்கிரானந்தல் ஏரி, சின்ன சந்தவாசல் ஏரி, கிருஷ்ணாபுரம் ஏரி, பெரிய ஏரி, புதிய ஏரி, ஐயன் ஏரி, கஸ்தம்பாடி ஏரி, மற்றும் சுற்றி உள்ள 12 ஊராட்சிகளில் ஏரிகள் நிரம்பாமல், 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே நிரம்பிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
ஆற்றுக்குசெல்லும் தண்ணீரை ஏரிக்கால்வாயில் திருப்பி விட்டு விவசாயிகளின் நலனுக்கு உதவ வேண்டும்.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம் என புகார் செய்துள்ளனர்.
இந்த புகார் குறித்து செண்பகத்தோப்பு அணை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை போனில் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
- போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது
- தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காயச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற் பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 எண்களில் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா?
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55) கூலி தொழிலாளி.
இவர் நேற்று மாலை சின்ன வரிகம் பகுதியில் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ய போவதாக ஆம்பூர் மற்றும் உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது ராதிகா, ராஜேஸ்வரி, சந்திரன், பிச்சைமணி, ராஜா, கோபி வீட்டில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்
- வாட்ஸ் ஆப் குழு அமைத்து பின் தொடரும் வாலிபர்கள்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.
மின்சாரம் துண்டிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.
இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.
பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







