என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செண்பகத் தோப்பு அணை நீர் வீணாக ஆற்றில் கலக்கிறது
    X

    செண்பகத் தோப்பு அணை நீர் வீணாக ஆற்றில் கலக்கிறது

    • 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே நிரம்பிய நிலையில் உள்ளது
    • சரி செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம் என புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பெருமா ள்பேட்டை பகுதியில் செண்பக த்தோப்பு அணை உள்ளது.

    கமண்டல நதியில் வழியாக கடந்த 5-ந் தேதி தண்ணீர் செண்பகத்தோப்பு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய் மூலம் வெளி யேறும் பொழுது, ஏரிக்கு செல்லும் கால்வாய்களில் ஷட்டர் மூடப்பட்டு உள்ளதால் காங்கிரானந்தல் ஏரி, சின்ன சந்தவாசல் ஏரி, கிருஷ்ணாபுரம் ஏரி, பெரிய ஏரி, புதிய ஏரி, ஐயன் ஏரி, கஸ்தம்பாடி ஏரி, மற்றும் சுற்றி உள்ள 12 ஊராட்சிகளில் ஏரிகள் நிரம்பாமல், 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே நிரம்பிய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    ஆற்றுக்குசெல்லும் தண்ணீரை ஏரிக்கால்வாயில் திருப்பி விட்டு விவசாயிகளின் நலனுக்கு உதவ வேண்டும்.

    இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்யாவிடில் போராட்டம் நடத்துவோம் என புகார் செய்துள்ளனர்.

    இந்த புகார் குறித்து செண்பகத்தோப்பு அணை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை போனில் தொடர்பு கொண்டும் பேசவில்லை.

    Next Story
    ×