என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரானைட் கற்கள் திருட்டை தடுக்க வேலி அமைக்க வேண்டும்
    X

    கற்கல் எடுக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கிரானைட் கற்கள் திருட்டை தடுக்க வேலி அமைக்க வேண்டும்

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிரானைட் கற்கள் திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிரா மத்தில் சுடுகாடு அருகே 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    கடந்த 10 நாட்களாக மர்ம கும்பல் சிலை செய்ய கற்கள் தோண்டி எடுப்பதாக கூறி, இந்த நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கிளறி கருங்கற்களை எடுத்து 2 லாரி லோடு கற்களை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள் வாகனத்தை மடக்கி கேட்டனர். அனுமதி பெற்றுதான் கற் கள் தோண்டி எடுப்பதாக கூறியுள்ளனர்.

    ஆனால், கிராம மக்கள் உடனடியாக பணியை நிறுத்த கூறியதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றனர். பின்னர், வருவாய்த் துறை, கனிம வளத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், விழுப்பு ரம் மண்டல கனிமவளத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்த வாகனத்தை பறிமுதல் செய்து மோரணம் போலீசாரிடம் ஒப்ப டைக்க உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து விழுப்புரம் கனிம வளத்துறை ஆய்வாளர் மூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கனிம வளத் துறை உதவி பொறியாளர் மெகபூப், செய்யாறு தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியா, ஊராட்சி மன்ற தலைவர் யசோதா எல்லப் பன் ஆகியோர் சம்பந்தப் பட்ட இடத்தில் இருந்து கிரானைட் கற்கள் கடத் தப்பட்டதா? என ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், பொது மக்களின் அறியாமையை பயன்படுத்தி நவீன சேட் டிலைட் தொழில்நுட்ப உதவியுடன் பூமியின் அடியில் உள்ள கிரானைட் கற்கள் தோண்டி திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

    எனவே, அனைத்து துறைகளும் விழிப்புடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு கனிம வளங்களை பாது காக்க வேண்டும்.

    மேலும், ஏனாதவாடி கிராமத்தில் பல கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் இருப்பதாக கூறப்ப டும் நிலையில், கிரானைட் கற்களை திருடி செல்லா மல் இருக்க சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×