என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
      • ஆலோசனை கூட்டமானது வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே ராம் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாப்பாக்குடி வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குளத்தில் வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும், இதில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன், வேல்துரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

      கூட்டத்தில் பாப்பாக்குடி நகர தலைவர் ஆறுமுக பூபதி, திலகராஜ், தங்கராஜ், செல்வராஜ், பால்பாண்டி, ஜெயபால், பரமசிவம், புலவர் சுரேஷ்ரேவதி, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

      • அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      புளியங்குடி:

      புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 11-வது வார்டில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. புதிய திட்டப் பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா அடிக்கல் நாட்டினர்.

      விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி செல்வம், பீர்பாத்து சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், முகமது நைனார், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி முனியராஜ், நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, வக்கீல் பிச்சையா, கம்பிளி மாரியப்பன், ராஜவேல்பாண்டியன், ராஜ்குமார், சேதுராமன், குருராஜ், அன்பு, அக்ரி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • கோபமடைந்த நாக அர்ஜுன் இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
      • நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22).

      ஒரே அறையில்

      இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது அருந்தியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

      தென்காசி

      இதனால் கோபமடைந்த நாக அர்ஜுன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்ததால், நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.

      இதுகுறித்து அறிந்த கூத்தாட்டுகுளம் போலீசார் தென்காசி மற்றும் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி தென்காசி பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த நாக அர்ஜுனை கைது செய்து கூத்தாட்டு குளம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

      • அனைத்து சுவாமிகளுக்கும் 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
      • வழிபாட்டு குழுவினர் கோவில்களில் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

      சிவகிரி:

      தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பழைய போலீஸ் நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள திருநீலகண்ட சுவாமி சமேத மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது.

      அபிஷேகம்

      முன்னதாக கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் போன்ற 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வழிபாட்டு குழுவினர் சரஸ்வதி, தேவி, மீனா, குழந்தை நாச்சியார் ஆகியோர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

      கோவிலில் பிரதோஷ நாயகர், சுவாமி-அம்மன் ஆகியோர் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்புற பிரகாரத்தில் பெண்கள் தேவாரப் பாடல்கள் பாடிக் கொண்டே முன்னே செல்ல சப்பரம் பின்னாலேயே வலம் வந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், பயறு, பால் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

      சிவகிரி

      இதனைப் போன்று சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கருணையானந்தா சித்தர் சுவாமிகள் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், விஸ்வநாதபேரி அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலையில் அமைந்துள்ள திரிபுர நாதேஸ்வரர் - சிவபரிபூரணி அம்மன் கோவில்,

      சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், வாசுதேவநல்லூர் அருகே தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ராமநாதபுரத்தில் சுயம்பு லிங்க சுவாமி கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில் போன்ற கோவில்களில் வழிபாட்டு குழுவினர் தேவாரம் பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.

      தொடர்ந்து வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம், பஞ்சாமிர்தம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

      • சுசீலா சேர்ந்தமரத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
      • பர்சை திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டியை சக பயணிகள் பிடித்தனர்.

      புளியங்குடி:

      புளியங்குடி பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சேர்ந்தமரத்திற்கு செல்வ தற்காக சுசீலா என்ற பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவரது அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் சுசீலா கையில் வைத்திருந்த பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு தப்பி ச்செல்ல முயன்றார்.

      அதனை அறிந்த சுசீலா கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் அந்த மூதாட்டி யை பிடித்தனர். தகவல் அறிந்து புளியங்குடி போலீ சார் அங்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி பாத்திமுத்து(வயது 70) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பர்சை மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நெல்லை கொக்கிர குளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

      • குருசாமியிடம் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
      • போத்திராஜ், ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் கடந்த 4 ஆண்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.

      இந்நிலையில் மாத கூட்டம் நடக்கும்போது குருசாமி, சுப்பையாவிடம் பொதுக்க ணக்கில் பற்றாக்குறையாக இருந்த பணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

      இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ்(37), முத்துராஜ்(32), குமார்(44), சுப்பையா, செந்தில்குமார்(47) ஆகியோர் குருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தலையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

      இதேபோல் குமார், ஊர் பொது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றார். மாதக் கூட்டத்தில் வாடகை கட்ட வந்தபோது அங்கிருந்த குமாரின் தம்பி அந்தோணி ராஜ் என்பவரிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த போத்திராஜ்(31), ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி மற்றும் குமார் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குருசாமி, முத்துராஜ், குமார், சுப்பையா, செந்தில்குமார், ராஜ் ஆகியோரை வலைவீசி தேடுகின்றனர்.

      • விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
      • மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது.

      கடையநல்லூர்:

      பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலசபூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், அஸ்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

      தொடர்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டர் செய்தார். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

      • இப்ராகிம் ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
      • ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்துள்ளார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முகமது இப்ராகிம்(வயது 23). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.

      சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு கழுகுமலை சாலையில் நின்று நண்பருடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்து அவரை அடித்து கீழே தள்ளி தள்ளியதில் அவர் பலத்த காய மடைந்ததாக கூறப்படுகிறது.

      இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த முகமது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
      • அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

      கோவில்பட்டி:

      கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

      அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடை பெற்றது. 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன் ,சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடை பெற்றது.

      சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், கணபதி, மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்தனர்.

      • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
      • தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

      கடன் உதவி

      தமிழ்நாடு பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படா தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

      தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்க ளுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்ப டுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

      நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

      விண்ணப்பம்

      ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். புதிய கடன் திட்டங்களாக இளம் தொழிற்கல்வி பட்டதாரி களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவி னைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

      விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

      விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பின், திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன், தூத்துக்குடி இணை பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

      மேலும் வெண்மைப்புரட்சி ஏற்படு த்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொரு ளாதாரத்தை மேம்படுத்து மாறும் கேட்டுக் கொள்கி றோம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

      • தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது.
      • தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

      தூத்துக்குடி:

      சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 'முத்து நகர் பல்லுயிர் பூங்கா' என்ற பெயரில் பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்க விழா ஸ்டெர்லைட் அனல்மில் நிலைய பகுதியில் நடைபெற்றது. புதுச்சேரி அருகே 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றிய தமிழகத்தின் காடு மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் ஊராட்சியை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி கலந்து கொண்டு பேசுகையில், இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

      மேலும் தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் 'டை-மெத்தில்-சல்பைடு' என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை அதிகளவில் நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

      ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் சேவை செய்து வருகிறது. 10 லட்சம் மரங்களை நடும் வகையில் 'பசுமை தூத்துக்குடி' என்ற திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 1.25 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

      மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளில் 35 சதவீதம் காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் ஊராட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் 8870477985 என்ற செல்போன் எண்ணிலும், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      நிகழ்ச்சியில் தன்னார்லர்கள், கிராம மக்கள், ஸ்டெர்லைட் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

      • கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்து கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
      • விற்பனையாளர்கள், உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

      கோவில்பட்டி:

      தமிழக அரசு எடை அளவு முத்திரை சட்டத்தின்படி எடை அளவுக்கான முத்திரை கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்ததை கண்டித்தும், நகைக் கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளுக்கான முத்திரைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கடைகளில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதை கண்டித்தும் கோவில்பட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

      தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துராஜ், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் கண்ணன், பொருளாளர் தினேஷ், மொபைல் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் லாலா ஸ்வீட்ஸ் விற்பனையாளர்கள், கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், செல்போன் விற்பனையாளர்கள், மருந்து வணிகர்கள், பூச்சி மருந்து மற்றும் உரம் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

      ×