புளியங்குடியில் ரூ.1.45 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.
Published on

புளியங்குடி:

புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் சதுர அடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 11-வது வார்டில் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்பில் குடிநீர் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. புதிய திட்டப் பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜா அடிக்கல் நாட்டினர்.

விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி செல்வம், பீர்பாத்து சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், முகமது நைனார், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி முனியராஜ், நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, வக்கீல் பிச்சையா, கம்பிளி மாரியப்பன், ராஜவேல்பாண்டியன், ராஜ்குமார், சேதுராமன், குருராஜ், அன்பு, அக்ரி சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com