என் மலர்
உள்ளூர் செய்திகள்

புளியங்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற பெண்ணிடம் பர்சை திருடிய மூதாட்டி கைது
- சுசீலா சேர்ந்தமரத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- பர்சை திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டியை சக பயணிகள் பிடித்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சேர்ந்தமரத்திற்கு செல்வ தற்காக சுசீலா என்ற பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவரது அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் சுசீலா கையில் வைத்திருந்த பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு தப்பி ச்செல்ல முயன்றார்.
அதனை அறிந்த சுசீலா கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் அந்த மூதாட்டி யை பிடித்தனர். தகவல் அறிந்து புளியங்குடி போலீ சார் அங்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி பாத்திமுத்து(வயது 70) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பர்சை மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நெல்லை கொக்கிர குளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
Next Story






