என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை
    X

    பூமாதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அக்னி நட்சத்திர நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி பூஜை நடை பெற்றது. 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள்,குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன் ,சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், கணபதி, மாரிஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை குழுவினர் செய்தனர்.

    Next Story
    ×