சங்கரன்கோவிலில் புரோட்டா மாஸ்டருக்கு அடி-உதை

இப்ராகிம் ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார். ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்துள்ளார்.
சங்கரன்கோவிலில் புரோட்டா மாஸ்டருக்கு அடி-உதை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முகமது இப்ராகிம்(வயது 23). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.

சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு கழுகுமலை சாலையில் நின்று நண்பருடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்து அவரை அடித்து கீழே தள்ளி தள்ளியதில் அவர் பலத்த காய மடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த முகமது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com