என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முதலிடம் பெற்று விளங்குவது தமிழகம் தான்.
      • அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பான முறையில் வழி நடத்தி செல்கிறார்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அலுவலக திறப்பு விழா நடந்தது.

      நிகழ்ச்சிக்கு தென்காசி சுகாதார துறை நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் அரசு மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில்சேகர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

      நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அறையை திறந்து வைத்து எந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

      இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முதலிடம் பெற்று விளங்குவது தமிழகம் தான். முதல்- அமைச்சர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, தொடர்ந்து சாதனை புரிந்து திராவிட மாடல் ஆட்சிக்கு பெருமை சேர்கிறது. அந்த துறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பான முறையில் வழி நடத்தி செல்கிறார். கர்ப்பிணி பெண்களுக்கு முற்றிலும் பயனுள்ள வகையில் சீமாங் எனப்படும் தாய் சேய் நல மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், இ.சி.ஜி., உள்ளிட்ட எந்திரங்களுடன் சீமாங் மருத்துவமனை அமைப்ப தற்கு முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

      சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் முன்னோடி மருத்துவ கட்டி டங்கள் கட்ட ரூ. 9 கோடி தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மருத்துவ மனை யை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். மருத்துவ துறையில் இந்தி யாவே வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செய்து வருகிறார்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      இதில் ஒன்றிய செய லாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மருத்துவர்கள் மாரிராஜ், ஹெப்சிபா, ஜப்சீர், பால சுப்ரமணியன், இளைஞர் அணி முகேஷ், அன்சாரி, மாணவரணி கார்த்தி மற்றும் வீராசாமி, வீரமணி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனையில் நுண் கதிர் பிரிவு தொடக்கம் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      • நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
      • மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

      சங்கரன்கோவில்:

      முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

      இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதில் மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.

      முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க .செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணி யாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

      இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்கு மார் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
      • சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 1-ந் தேதி சக்தி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 2-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 4-ந் தேதி கரகம் நிகழ்ச்சியும், 7-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடந்தது.

      8 -ந் தேதி திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

      பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் நாதஸ்வர வாத்தியங்களுடன் காவடிக்குடம் சுமந்தபடி, மஞ்சளாடை உடுத்தி பூ இறங்கும் பக்தர்களுடன் திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 7.25 மணிக்கு மேல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட 188 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

      விழாவில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சரவணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தினர் செய்திருந்தனர்.

      • அர்ஜுன் காற்றின் வேகத்தால் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
      • தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு சென்று மகாராஜா பார்த்த போது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரிந்துள்ளது. உடனடியாக கிணற்றின் படிக்கட்டு சரியாக இல்லாத காரணத்தினால் உதவிக்காக கிணற்றுக்குள் கயிற்றை அனுப்பினார். அதனை பிடித்துக் கொண்டு சிறுவன் இருந்துள்ளார்.

      தொடர்ந்து சங்கரன்கோவில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் அவரது தாத்தாவிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

      • தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
      • நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

      கடையம்:

      கடையம் வடக்கு ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சி மாதாபுரம் சோதனைசாவடி தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

      கனிமொழி எம்.பி.

      மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும் கடையம் யூனியன் துணை சேர்மனுமான மகேஷ்மாயவன் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

      நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய துணைசெயலாளர்கள் பிரமநாயகம், கஸ்தூரி சுடலைமணி, ஸ்டெல்லா முருகன், பொருளாளர் அஜிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், ரவி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், ஆதம் சுபைர், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் குமார், கருணாநிதி, விளையாட்டு மேம்பாட்டு அணி முத்தரசி, காளித்துரை, ஹிலால் பள்ளி செயலாளர் அகமது ஈசாக், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஜீனத்பர்வின் யாகூப், கிளை செயலாளர்கள் லெட்சுமணன், நவாஸ்கான், நிர்வாகிகள் ரவிசங்கர், பாலாஜி, அலி, முகம்மது நூர், ஆறுமுகம், குணா, கபடி மகேஷ், ராம்ராஜ், தளபதி மணி, காமாட்சி, ராஜசிவகணேஷ், முத்துகிருஷ்ணன், சங்கர்ராம், அஸ்லிம், சைமன்ஜோ, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
      • வேல்துரை ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்தார்.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருப்பாநதி அணைக்கட்டு அருகே உள்ள கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

      யானை தாக்கி காவலாளி பலி

      இவர்கள் மலைப்பகுதியில் வேலை செய்து வருகின்றனர். இதில் வேல்துரை (வயது 28) என்பவர் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்று பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று இரவு காட்டு யானை தாக்கியத்தில் காவலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

      இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
      • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2021 - 2022-ன் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சின்ன ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் மற்றும் மூலதன மான்ய திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.298 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு சத்திரம் - வடுகபட்டி (தென்மலை) சாலையில் பாலம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நடைபெற்றது.

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் சந்திரமோகன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், மேலநீலித நல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலைமணி, தலையாரி அழகுராஜா, பெரியா ண்டவர், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. துணைச்செ யலாளர் சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூராட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி நகர தி.மு.க. செய லாளரும், நகராட்சி துணைத் தலைவரு மான அந்தோணிசாமி, சிவகிரி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி, சமுதாய நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வா கிகள் விவசாய தொண்டர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, தொழில் நுட்ப அணி தங்கராசு உள்பட ஏராள மானோர் கலந்து கொ ண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு நன்றி கூறினார்.

      • நிகழ்ச்சியின்போது நீர் நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
      • பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

      சுரண்டை:

      சுரண்டையில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் அறிவுறுத்தலின் பேரில் கமிஷனர் உத்தரவின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணி, நீர் நிலைகளை சுத்தம் செய்தல், கட்டிட இடிபாடு கழிவுகளை அகற்றுதல், அனுமதி இன்றி வைக்கபட்ட பேனர்கள், போஸ்டர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

      நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் தூய்மை இயக்க உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

      • பயிற்சி முகாமில் 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது.

      நெல்லை:

      தேசிய மாணவர் படையின் 3-வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் 4 மாவட்ட பள்ளி, கல்லூரி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் பாளையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

      நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

      வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது. இதில் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், கலை, சமூக செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வர்கள் மண்டல அளவி லான போட்டி களுக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர். அதில் தேர்வாகும் வீராங்கனைகள் குடியரசு தின விழா ஒத்திகைக்கு தகுதி பெறுவார்கள்.

      இன்று நடந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

      20 மீட்டர் அளவில் உள்ள இலக்கை 5 ரவுண்டுகள் சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் இலக்கை நோக்கி சுட்டு அசத்தினர். அதிக முறை இலக்கில் சரியாக சுட்ட மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

      • அங்கக முறையில் பூச்சி, நோய் மேலாண்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர்.
      • 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

      அம்பை:

      நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான 3 நாள் விவசாயிகள் பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

      கலந்துரையாடல்

      வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயிற்சி நடந்தது.

      நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அங்கக சான்றளிப்புத் துறை பேராசிரியர் சுகந்தி, அங்கக பண்ணையம் செய்வதன் தற்போதைய நோக்கம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பசுந்தாள் உரங்கள், மூலிகை பூச்சி விரட்டி பஞ்சகாவ்யா, மீன் அமினோ அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரித்தல், ஊடுபயிர், பல வகைப்பயிர்கள், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை களைக்கொல்லி தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி, நோய் மேலான்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர். அங்கக வேளாண் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

      அங்கக வேளாண்மை

      உதவி பேராசிரியர் சண்முக தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மா, கொய்யா, சப்போட்டா மற்றும் அங்கக வேளாண்மை செய்வதனால் கிடைக்கும் நிகர லாபம் மற்றும் அங்கக வேளாண் முறைகள் குறித்தும் அடர்நடவு முறை குறித்தும் பேசினார்.

      வேளாண் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கஸ்தூரி ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதன் மூலம் விவசாயிகள் தினமும் பெறும் வருமானம், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, தீவனப்புல் உற்பத்தி, மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

      பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன் , பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

      • மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் பணியாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
      • 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

      நெல்லை:

      நெல்லை மாநகர பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

      அதிரடி சோதனை

      இதையடுத்து கமிஷனர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

      அப்போது மேஸ்திரி சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மனோஜ், முத்துராஜ், மாரியப்பன், சேக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் டவுண் சத்தியமூர்த்தி தெரு, தெற்கு ரத வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர் இளங்கோ 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.

      மேலப்பாளையம்

      அதேபோல் மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலை செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன் , மரிய பாக்கியம், எல் சி எப் பணியாளர்கள் வேல்முருகன், முகமது சபி ஆகிய குழுவினர் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


       


      மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

      மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.

      • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
      • முகாமில் குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

      நெல்லை:

      நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

      அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நாளை (10-ந் தேதி ) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

      மேலும் மனு அளிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, ஆதார், பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.

      முகாம், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 93424 71314 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×