search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட  மக்கள் குறைதீர்வு முகாம்- நாளை நடக்கிறது
    X

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம்- நாளை நடக்கிறது

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நாளை (10-ந் தேதி ) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    மேலும் மனு அளிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, ஆதார், பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.

    முகாம், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 93424 71314 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×