search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் ரூ.7 கோடியில் திட்டப்பணிகள்
    X

    சிவகிரி கலிங்கல் ஓடையில் பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜையை ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மற்றும் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் ரூ.7 கோடியில் திட்டப்பணிகள்

    • ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2021 - 2022-ன் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சின்ன ஆவுடைப்பேரி கலிங்கல் ஓடையில் பாலம் அமைத்தல் மற்றும் மூலதன மான்ய திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.298 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு சத்திரம் - வடுகபட்டி (தென்மலை) சாலையில் பாலம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருச்செல்வம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணைத்தலைவர் சந்திரமோகன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், மேலநீலித நல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலைமணி, தலையாரி அழகுராஜா, பெரியா ண்டவர், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. துணைச்செ யலாளர் சுந்தரவடிவேலு, சிவகிரி பேரூராட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் விக்னேஷ், புளியங்குடி நகர தி.மு.க. செய லாளரும், நகராட்சி துணைத் தலைவரு மான அந்தோணிசாமி, சிவகிரி தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி, சமுதாய நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வா கிகள் விவசாய தொண்டர் அணி கார்த்திக், விவசாய அணி வீரமணி, தொ.மு.ச. மாடசாமி, தொழில் நுட்ப அணி தங்கராசு உள்பட ஏராள மானோர் கலந்து கொ ண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு நன்றி கூறினார்.

    Next Story
    ×