என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியபோது எடுத்தபடம்.
மருத்துவ துறையில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை முதல்- அமைச்சர் செய்து வருகிறார்- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
- இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முதலிடம் பெற்று விளங்குவது தமிழகம் தான்.
- அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பான முறையில் வழி நடத்தி செல்கிறார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அலுவலக திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு தென்காசி சுகாதார துறை நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் அரசு மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில்சேகர், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் பிரிவு அறையை திறந்து வைத்து எந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முதலிடம் பெற்று விளங்குவது தமிழகம் தான். முதல்- அமைச்சர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, தொடர்ந்து சாதனை புரிந்து திராவிட மாடல் ஆட்சிக்கு பெருமை சேர்கிறது. அந்த துறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பான முறையில் வழி நடத்தி செல்கிறார். கர்ப்பிணி பெண்களுக்கு முற்றிலும் பயனுள்ள வகையில் சீமாங் எனப்படும் தாய் சேய் நல மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், இ.சி.ஜி., உள்ளிட்ட எந்திரங்களுடன் சீமாங் மருத்துவமனை அமைப்ப தற்கு முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் முன்னோடி மருத்துவ கட்டி டங்கள் கட்ட ரூ. 9 கோடி தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மருத்துவ மனை யை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். மருத்துவ துறையில் இந்தி யாவே வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செய லாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மருத்துவர்கள் மாரிராஜ், ஹெப்சிபா, ஜப்சீர், பால சுப்ரமணியன், இளைஞர் அணி முகேஷ், அன்சாரி, மாணவரணி கார்த்தி மற்றும் வீராசாமி, வீரமணி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனையில் நுண் கதிர் பிரிவு தொடக்கம் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






